search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிதமான மழை"

    • திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டில் 2வது நாளாக கொட்டி தீர்த்த கனமழை.
    • சென்னை உள்ளிட்ட 29 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

    குறிப்பாக, எழும்பூர், பெரம்பூர், கெளத்தூர், வியாசர்பாடி, மாதவரம், புழல், அரும்பாக்கம், அண்ணாநகர், சூளைமேடு, வடபழனி, கோயம்பேடு, மதுரவாயல், முகப்பேர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    மேலும், மந்தைவெளி, மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், சென்னை திருவொற்றியூர், எண்ணூர், கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.

    இதேபோல், கரூர், திருச்சி,நாகர்கோவில், திருப்பத்தூர், புதுக்கோட்டை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    கரூரில், குளித்தலையை சுற்றியுள்ள பகுதிகளான ராஜேந்திரம், மருதூர், வதியம், அய்யர்மலை, தோகைமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

    இதேபோல், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டில் 2வது நாளாக கொட்டி தீர்த்த கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலையில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும், சென்னை உள்ளிட்ட 29 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, மதுரை, மயிலாடுதுறை, வேலூர், புதுக்கேட்டை, சிவகங்கை, சேலம், திருப்பூர், தேனி, தென்காசி, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.
    • பலத்த காற்றுடன் மிதமான மழை இன்று பெய்யக் கூடும்.

    சென்னை:

    தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. தென் னிந்திய பகுதிகளில் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் ஒரு சில இடங் களில் லேசான மழை பெய்யும்.

    புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் மிதமான மழை இன்று பெய்யக் கூடும்.

    கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மலை பகுதிகளில், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மிதமான மழை செய்யக்கூடும். இடி, மின்னலுடன் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று பெய்த மழையால் வெப்பம் தணிந்தது. குளிர்ந்த காற்று வீசி வருகிறது. 5 மாதத்திற்கு பிறகு சென்னையில் 2 நாட்களாக மாலையில் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • தமிழகத்தில் 12 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழை.
    • தமிழகம் முழுவதும் கோடை வெப்பம் வாட்டி வந்த நிலையில், திடீர் மழை.

    தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பரவலா திடீர் கனமழை பெய்து வருகிறது.

    குறிப்பாக சென்னை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.

    இதற்கிடையே, தமிழகத்தில் 12 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

    திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழையால், சாலையில் வெள்ளம் போல காட்சியளிக்கிறது.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

    தமிழகம் முழுவதும் கோடை வெப்பம் வாட்டி வந்த நிலையில், திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • தென் மேற்கு பருவமழை பொய்த்த நிலையில் திருப்பூரில் வெயில் அதிகரித்திருக்கிறது.
    • சில நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்

    திருப்பூர்

    தென் மேற்கு பருவமழை பொய்த்த நிலையில் திருப்பூரில் வெயில் அதிகரித்திருக்கிறது. அதிகபட்சம் 30 முதல் 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது.

    தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் கோவை காலநிலை ஆராய்ச்சி மையம் மற்றும் கோவை வேளாண் காலநிலை ஆராய்ச்சி நிலையத்தினர் இணைந்து வெளியிடும் வானிலை அறிக்கையில், வரும் நாட்களில் திருப்பூரில் அதிகபட்சம் 32 முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை வெயில் நிலவும். இரவில் 22 முதல் 24 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும். சராசரியாக மணிக்கு 17 கி.மீ., வேகத்தில் காற்றின் வேகம் இருக்கும். சில நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது.

    மேக மூட்டம் மற்றும் காற்றின் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் என்பதால் பயிர் சத்துகள் உறிஞ்சுவது குறைவாக காணப்படும்.

    எனவே வேப்ப புண்ணாக்கு கலந்த தழைச்சத்து உரங்களை இட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    • காலை 5 மணி முதல் சின்ன சேலம் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
    • இன்று காலை மழை குறுக்கிட்டதால் கோவிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

     சின்னசேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பருவநிலை மாற்றம் காரணமாக மழை பொழிந்து கொண்டு வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். இன்று காலை 5 மணி முதல் சின்ன சேலம் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது பிறகு காலை 6 மணி முதல் சின்னசேலத்தில் விட்டு விட்டு மிதமான மழை பொழிந்தது இன்று கிருஷ்ண ஜெயந்தி என்பதால் அரசு விடுமுறை அளித்துள்ளது. இதனால் காலையிலே கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும் என்று பக்தர்கள் எண்ணிக் கொண்டிருந்த நிலையில் இன்று காலை மழை குறுக்கிட்டதால் கோவிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பிறகு காலை 10 மணிக்கு மழை நின்றதால் பக்தர்கள் கோவிலுக்கு சென்று கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு வழிபாடு செய்து வந்தனர்.

    ×