என் மலர்
நீங்கள் தேடியது "வெண்ணெய்"
- மேலும் ஆலிலைக்கு ஒரு விசேஷ சக்தி உண்டு.
- ஆலிலையில்படுத்திருக்கும் கண்ணன் நமக்கு ஒரு பாடத்தையும் போதிக்கிறான்.
கண்ணன் ஆலிலையில் படுத்திருப்பது ஏன்?
தாவர வகைகளிலேயே மிகவும் உயர்ந்த இடத்தை பெறுவது ஆலமரம்.
ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து தான் தட்சிணாமூர்த்தி ஞானம் தருகிறார்.
பொன், பொருள், குடும்ப சுகம் மட்டுமின்றி மறைந்த முன்னோர்கள் மோட்சம் பெற பிதுர் தர்ப்பணத்துக்குரிய பிண்டம் போடும் சடங்கை ஆலமரத்துக்கு கீழே அமர்ந்து தான் செய்வார்கள்.
எனவே தான் ஞானமும் கர்மத்திற்குரிய பலனையும் தருகின்ற ஆலமரத்தின் இலையில் கண்ணன் படுத்துக் கொண்டான்.
மேலும் ஆலிலைக்கு ஒரு விசேஷ சக்தி உண்டு.
இது வாடினாலும் கூட நொறுங்கிப் போவதில்லை.
சருகானாலும் கூட மெத்தை மாதிரி இருக்கும்.
இதுவும் கண்ணன் ஆலிலையை தேர்ந்தெடுக்க ஒரு காரணம் ஆகும்.
ஓரளவு காய்ந்த ஆலிலையின் மேல் தண்ணீர் தெளித்தால், அது இழந்த பச்சையை பெறும் சக்தி வாய்ந்தது.
கண்ணன் வாடாத வதங்காத ஆத்மா என்பதை இதன் மூலம் நிரூபிக்கிறான்.
ஆலிலையில்படுத்திருக்கும் கண்ணன் நமக்கு ஒரு பாடத்தையும் போதிக்கிறான்.
அடேபக்தனே! நீ எதற்கும் கவலைப்படாதே.
என்னைப் போலவே நீ குழந்தை உள்ளத்துடன் இருந்தால், உலக வாழ்க்கை என்ற கொடுமையான அலையால் தாக்கப்படமாட்டாய்.
குடும்பம் என்ற சம்சாரக்கடலில் விழுந்து, தத்தளித்து அனுபவிக்கும் இன்ப துன்பங்களை ஒரு விளையாட்டாக எடுத்துக் கொண்டு என்னைப் போல் ஆனந்தமாய் இரு என்கிறான்.
இது தான் கண்ணன் ஆலமர இலையில் மிதக்கும் தத்துவம் ஆகும்.
- வெண்ணெயும், சர்க்கரையும் கலந்த கலவையான நவநீதமும் படைப்பதுண்டு.
- எல்லோரும் பக்தி பெருக்குடன், கோவிந்தா, கோவிந்தா என்று கோஷமிட வேண்டும்.
வெங்கடா சலபதிக்கு நிவேதனம் செய்யும் பொருட்களில் சர்க்கரைப் பொங்கல் மற்றும் வடை இடம் பெறுவதுண்டு. சிலர் பாயாசமும் படைப்பர். வெண்ணெயும், சர்க்கரையும் கலந்த கலவையான நவநீதமும் படைப்பதுண்டு.
அன்புடன் இலையை அர்ப்பணித்தாலும் ஏற்பேன் என்று கீதையில் கண்ணன் கூறியது இங்கே கருதத்தக்கது. பெருமாளுக்குப் படையலிட்டுப் பூஜை செய்யும்போது உறவினர்களையும், நண்பர்களையும் அழைத்து கலந்து கொள்ள செய்ய வேண்டும்.
எல்லோரும் பக்தி பெருக்குடன், கோவிந்தா, கோவிந்தா என்று கோஷமிட வேண்டும். பூஜை முடிந்த பிறகு பக்திப் பாடல்களைப் பாடி வணங்கி, வழிபாடு செய்வர். பிறகு வீட்டிற்கு வந்துள்ள விருந்தினர்களுக்கு உணவளித்து, தாம்பூலம் கொடுப்பர். இப்படி அவரவர் இருப்பிடத்திலேயே கோவிந்தா என்ற திருநாமத்தைக் கூறியபடி இருந்தால் பெருமாளே அந்த இல்லத்துக்கு எழுந்தருள்வார்.
- பூமாதேவி பூலோகத்தில் உள்ள மக்களின் பிரார்த்தனைகளை வானத்தில் உள்ள லெட்சுமி தேவியிடம் எடுத்துரைக்கிறார்.
- திருமணமான தம்பதியர்கள் நவநீதகிருஷ்ணனிடம் குழந்தை பேறு வேண்டி பிரார்த்தனை செய்கிறார்கள்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மேலவீதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற நவநீதகிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தஞ்சாவூர் மேலவீதியில் புகழ்பெற்ற நவநீதகிருஷ்ணன் கோவில் அமைந்துள்ளது. ருக்மணி மற்றும் சத்யபாமா சமேதராக நவநீத கிருஷ்ணன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.சத்யபாமா பூமாதேவி அம்சம் ஆகும். ருக்மணி லெட்சுமி அம்சம் ஆகும்.
பூமாதேவி பூலோகத்தில் உள்ள மக்களின் பிரார்த்தனைகளை வானத்தில் உள்ள லெட்சுமி தேவியிடம் எடுத்துரைக்கிறார். அதனை லெட்சுமி தேவி பகவானிடம் சமர்ப்பித்தது பக்தர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றி தருகிறார்.
இதனை உணர்த்தும் வண்ணம் நவநீத கிருஷ்ணன் ருக்மணி மற்றும் சத்யபாமா சமேதராக காட்சி அளிக்கிறார் என்பது ஐதீகம்.
இத்தகைய சிறப்புகள் வாய்ந்த இக்கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு வழிபாடு இன்று வெகுவிமரிசையாக நடந்தது. காலை பல்வேறு திரவியங்களால் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.பின்னர் சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது.
இன்று மாலை 6மணிக்கு கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு ஆராதனை, தீபாராதனை நடைபெறுகிறது.
இக்கோயிலில் பக்தர்கள் ஐந்து தீபமேற்றி 5முறை வலம் வந்து நவநீதகிருஷ்ணரை வழிபாடு செய்கிறார்கள்.தொடர்ந்து ரோகிணி நட்சத்திரத்தில் நவநீதகிருஷ்ணனை வழிப்பட்டால் குழந்தை பேறு கிட்டும் என்பது ஐதீகம்.திருமண தோஷங்கள் நீங்கும்.
கலியுக உபாதைகள் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கோயிலில் பல்லாண்டுகளாக குருவாயூர் போன்று துலாபாரம் நடைபெற்று வருகிறது.
திருமணம் ஆன தம்பதியர்கள் நவநீதகிருஷ்ணனிடம் குழந்தை பேறு வேண்டி பிரார்த்தனைகள் செய்கிறார்கள்.
குழந்தை பிறந்தவுடன் 5 வயதுக்குள் துலாபாரம் ஆக வெண்ணெய் மற்றும் வாழைப்பழங்கள், வெல்லம், கல்கண்டு என விரும்பும் பொருட்களை கொண்டு துலாபாரம் நேர்த்திக்கடனை நிறைவேற்றி வருவது தனிச்சிறப்பு ஆகும்.
கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே மற்றும் உதவி ஆணையர் கவிதா, கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.