search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நமீதா"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சகோதரி நமீதா மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலில் நடைபெற்ற சம்பவம் குறித்தும் என்னையும் அதில் இணைத்தும் பதிவிட்டிருந்தார்.
    • திராவிட மாடல் அரசு அன்னைத் தமிழில் குடமுழுக்கை அழுத்தம் தந்து செயல்படுத்தும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்பி.கே.சேகர்பாபு இன்று சென்னை, புரசைவாக்கம், கங்காதரேசுவர் கோவிலில் ரூ.3.86 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திருப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் தெரிவித்ததாவது:-

    முதலமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், 39 மாத கால நிறைவில் கோவில் திருப்பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்து அவற்றை தொடர்ந்து ஆய்வு செய்து பக்தர்களுடைய தேவைகளை நிறைவேற்றி வருகின்றோம். அந்த வகையில் புரசைவாக்கம், கங்காதரேசுவர் கோவிலில் ரூ.81 லட்சம் மதிப்பீட்டில் செய்யப்பட்டு வரும் மரத்தேர் உட்பட ரூ.3.86 கோடி மதிப்பீட்டில் 29 பணிகள் நடைபெற்று வருகின்றன.

    அன்பிற்கினிய சகோதரி நமீதா நேற்றைய தினம் மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலில் நடைபெற்ற சம்பவம் குறித்தும் என்னையும் அதில் இணைத்தும் பதிவிட்டிருந்தார். ஏற்கனவே பழனி கோவிலில் இதுபோன்ற பிரச்சனை தொடர்பான வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் அவர் இஸ்லாமியராக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தால் அந்த சம்பவம் நேற்றைய தினம் நடைபெற்றுள்ளது.

    இதுகுறித்து விசாரணை செய்வதற்கு ஆணையர் உத்தரவிட்டுள்ளார். சகோதரி நமீதா மனது புண்படும்படியாகவோ அல்லது விரும்ப தகாத அளவிற்கு சட்டத்திற்கு புறம்பாக ஏதாவது நடந்திருந்தாலோ அதுகுறித்து விசாரித்து நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

    அவர் வருத்தப்பட வேண்டாம். அப்படி அவர் பெரிய அளவிற்கு வருத்தப்படுவதாக இருந்தால் எங்களுடைய வருத்தத்தையும் பதிவு செய்து கொள்கிறோம்.

    முதலமைச்சர் இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினரை இரண்டு கண்களாக கரங்களாக பார்ப்பவர். சிறுபான்மையினர் அழைக்கின்ற போதெல்லாம் அவர்களின் மாநாடாக இருந்தாலும், விழாக்களாக இருந்தாலும் கலந்து கொள்கின்றார்.

    அதேபோல் தான் முத்தமிழ் முருகன் மாநாட்டினை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். அதனை ஆன்மிக பெருமக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்றுள்ளனர். முதலமைச்சர் எல்லோருக்கும் எல்லாம் என்ற நிலையிலேயே தொடர்ந்து செயல்பட்டு வருகின்றார்.

    அன்னை தமிழில் அர்ச்சனை என்ற திட்டத்தை செயல்படுத்தியதோடு, 14 போற்றி புத்தகங்களையும் தமிழில் வெளியிட்டு தமிழில் குடமுழுக்கு நடத்தும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகின்றோம். அந்த வகையில் பழனி கோவில் குடமுழுக்கு அன்னைத் தமிழில் நடத்தப்பட்டது. இது தொடரும். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என செயல்பட்டு வரும் திராவிட மாடல் அரசு அன்னைத் தமிழில் குடமுழுக்கையும் அழுத்தம் தந்து செயல்படுத்தும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், இணை ஆணையர் ஜ.முல்லை, அறங்காவலர் குழுத் தலைவர் வெற்றிக்குமார் மற்றும் அறங்காவலர்கள், செயல் அலுவலர் ராமராஜா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்று இருந்தேன்.
    • கோவில் நிர்வாகத்தினர் தன்னிடம் கடுமையாக நடந்து கொண்டனர்.

    பாஜக உறுப்பினரும் நடிகையுமான நடிகை நமீதா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்று இருந்தார்.

    அப்போது அதிகாரி ஒருவர் அவரிடம் உங்களுடைய மதம் என்ன, எந்த வகுப்பை சேர்ந்தவர் என்று கேள்வி எழுப்பியதாக புகார் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில்,

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்று இருந்தேன். அப்போது பெண் அதிகாரி ஒருவர் தன்னிடம் உங்களுடைய மதம் என்ன, எந்த வகுப்பை சேர்ந்தவர் என்று கேட்டார். கோவில் நிர்வாகம் தன்னிடம் இந்து என்பதற்கான சான்றிதழ் கேட்டனர்.

    தான் இந்து மதத்தை சேர்ந்தவள். என் திருமணம் திருப்பதியில் நடந்தது. என் குழந்தைக்கு கூட கிருஷ்ணனின் பெயர் தான் வைத்துள்ளேன். கோவில்களில் இதுபோன்ற நடவடிக்கைகள் நடப்பது என்பது வருத்தமாக உள்ளது.

    இந்தியாவில் எந்த கோவிலிலும் தன்னிடம் இந்த கேள்வியை கேட்டதில்லை.

    மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் தன்னிடம் கடுமையாக நடந்து கொண்டனர். அமைச்சர் சேகர்பாபுவிடம் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

    • விஜய் அரசியலுக்கு வந்தற்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
    • திறமையான போட்டியாளர் உருவாவதாக நினைக்கிறோம்.

    அவினாசி:

    நீலகிரி பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து திரைப்பட நடிகை நமீதா திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டி பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் பயனாளிகளை சந்தித்து வாக்கு சேகரித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க., 243 தொகுதிகளில் மக்களை சந்தித்து அவர்களின் தேவைகளை கேட்டுள்ளதா? ஆனால் பா.ஜ.க., மாநில தலைவர் அண்ணாமலை அனைத்து தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் அடிப்படை தேவைகளை கேட்டுள்ளார். தி.மு.க., மக்களை பிரித்தாலும் முயற்சியில் இறங்கியுள்ளது. அவர்களின் தோல்வி உறுதி செய்யப்பட்டுள்ளது.

    விஜய் அரசியலுக்கு வந்தற்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். அவர் ஒரு புத்திசாலி. திறமையான போட்டியாளர் உருவாவதாக நினைக்கிறோம். கச்சத்தீவு விவகாரத்தில் பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெற்று நல்ல ஒரு நடவடிக்கையை மேற்கொள்வார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிறுவர்கள் நமீதாவை பார்த்து அக்கா எங்களுக்காக ஒரு பாட்டு பாடுங்கள் என கேட்டனர்.
    • வருகிற தேர்தலில் தாமரை சின்னத்துக்கு வாக்களித்து மத்திய மந்திரி எல்.முருகனை வெற்றி பெறச் செய்யுங்கள்.

    மேட்டுப்பாளையம்:

    நீலகிரி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து அன்னூர் அருகே உள்ள பொகலூர் பகுதியில் நடிகையும், பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினருமான நமீதா பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    நடிகை நமீதா வருவதை அறிந்த அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் பொகலூர் பகுதியில் திரண்டிருந்தனர். நமீதா திறந்த வேனில் நின்றபடி வந்ததை பார்த்ததும் பொதுமக்கள் உற்சாக மிகுதியில் சத்தம் போட்டு ஆரவாரம் செய்தனர். இளைஞர்கள் விசில் அடித்து வரவேற்றனர்.

    அங்கு நின்ற சிறுவர்கள் நமீதாவை பார்த்து அக்கா எங்களுக்காக ஒரு பாட்டு பாடுங்கள் என கேட்டனர். மேலும் நமீதாவுடன் சிறுவர்களும், பெண்களும் செல்பி எடுக்க முயற்சித்தனர். அதற்கு சிரமம் வேண்டாம், நானே உங்களுடன் செல்பி எடுத்துக் கொள்கிறேன் என பிரசார வாகனத்தில் நின்றபடியே சுற்றி, சுற்றி செல்பி எடுத்துக் கொண்டார்.

    பொதுமக்கள் மத்தியில் நடிகை நமீதா பேசியதாவது:-

    மத்தியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த பா.ஜ.க. அரசு சிறப்பான ஆட்சியை கொடுத்துள்ளது. கூகுள் பே, பே.டி.எம் போன்ற டிஜிட்டல் பணபரி வர்த்தனை மூலம் வங்கிகளில் காத்திருக்கும் நிலையை எளிமையாக்கி பொது மக்களுக்கு கால நேர விரயத்தையும், சிரமங்களையும் குறைத்துள்ளது. செல்போன் பயன்பாட்டினை பொறுத்தவரை உலகத்தில் எங்கும் இல்லாத வகையில் செல்போன் டேட்டா உபயோகத்துக்கான கட்டணம் இந்தியாவில் மட்டுமே குறைந்த அளவில் உள்ளது.

    வெளிநாட்டில் ஒரு ஜீ.பி டேட்டா ரூ.300ஆக உள்ள நிலையில் இந்தியாவில் ரூ.10 மட்டுமே. நீலகிரி தொகுதியில் தற்போது எம்.பி.யாக இருக்கும் நபரின் பெயரை கூட தனக்கு சொல்ல விருப்பமில்லை. நம்பி வாக்களித்த மக்களை அவர் தொடர்ந்து அவமானப்படுத்துகிறார். மக்களின் நம்பிக்கையான கடவுள் வழிபாட்டினை கொச்சைப்படுத்துகிறார். எனவே வருகிற தேர்தலில் தாமரை சின்னத்துக்கு வாக்களித்து மத்திய மந்திரி எல்.முருகனை வெற்றி பெறச் செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • சென்னை மாநகரமே வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது.
    • மக்களை மீட்கும் முயற்சியை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

    மிச்சாங் புயல் எதிரொலியால், சென்னை மாநகரமே வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் அதிக கனமழை பெய்துள்ளது. இதனால், வீட்டிற்குள் வெள்ள நீர் புகுந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மக்களை மீட்கும் முயற்சியை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.


    மீட்கப்பட்ட நமீதா குடும்பம்

    இந்நிலையில், சென்னை, துரைப்பாக்கத்தில் 6 அடி உயர வெள்ளத்தில் சிக்கியிருந்த நடிகை நமீதா அவரது கணவர் மற்றும் இரட்டை குழந்தைகள், நாய்க்குட்டிகளை படகில் சென்ற தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • முத்துராமன், கோபால்சாமியிடம் ரூ.3 கோடி தந்தால் தமிழ்நாடு அரசில் உயர்பதவி வாங்கி தருவதாக கூறி உள்ளார்.
    • அரசு முத்திரை, தேசிய கொடி ஆகியவற்றை பயன்படுத்தியதும் தெரிய வந்தது.

    சேலத்தைச் சேர்ந்த கோபால்சாமி என்பவரிடம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த முத்துராமன் மற்றும் முபாரக் ஆகியோர் சிறு, குறு, நடுத்தர தொழில் அமைப்பின் தேசிய தலைவர் என தங்களை அறிமுகப்படுத்தி கொண்டனர்.

    அப்போது முத்துராமன், கோபால்சாமியிடம் ரூ.3 கோடி தந்தால் தமிழ்நாடு அரசில் உயர்பதவி வாங்கி தருவதாக கூறி உள்ளார். இதை உண்மை என்று நம்பி கோபால்சாமி 2 தவணைகளில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த முத்துராமனின் நண்பர் துஷ்யந்த் யாதவ் என்பவரிடம் ரூ.50 லட்சம் கொடுத்துள்ளார்.

    பணத்தை பெற்று கொண்ட அவர்கள் அரசு பதவி வாங்கி தரவில்லை. இதையடுத்து கோபால்சாமி சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். கடந்த வாரம் சேலத்தில் எம்.எஸ்.எம்.இ. புரொமோஷன் கவுன்சில் என்ற அமைப்பின் கூட்டம் நடந்தது. இதில் அந்த அமைப்பின் தேசிய தலைவர் முத்துராமன், செயலாளரான துஷ்யந்த் யாதவ், தமிழக தலைவர் நடிகை நமீதாவின் கணவர் வீரேந்திர சவுத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதுபற்றி தெரியவந்ததும் சூரமங்கலம் போலீசார் விரைந்து சென்று முத்துராமன், துஷ்யந்த் யாதவ் ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். மேலும் அரசு முத்திரை, தேசிய கொடி ஆகியவற்றை பயன்படுத்தியதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த பண மோசடி வழக்கு தொடர்பாக நடிகை நமீதாவின் கணவர் வீரேந்திர சவுத்ரி ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதற்கிடையே வீரேந்திர சவுத்ரி சேலம் போலீசாருக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார்.

    அதில் தனக்கு தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதால் விசாரணைக்கு வர முடியவில்லை. உடல்நிலை சரியானதும் விசாரணைக்கு ஆஜராக வருவதாக தெரிவித்து இருந்தார். இதற்கிடையே இந்த மோசடி வழக்கு சூரமங்கலம் போலீசில் இருந்து சேலம் மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சேலம், ஜாகீர் அம்மா பாளையம் பகுதியைச் சேர்ந்த கோபால் சாமி என்பவர் காவல் துறையில் புகாரளித்துள்ளார்.
    • இந்த அமைப்பின் தலைவரும், செயலாளரும் பணம் வாங்கிக் கொண்டு பல மோசடிகளில் ஈடுப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.

    சேலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக MSME புரொமோஷன் கவுன்சிலிங் என்ற அமைப்பின் பெயரில் நிறுவன உறுப்பினர்கள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி கடந்த வாரம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அந்த அமைப்பின் தேசிய தலைவரான மதுரை, உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த முத்துராமன், அமைப்பின் தேசிய செயலாளரான பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த துஷ்யந்த் யாதவ் மற்றும் தமிழகத்தின் தலைவராக இருந்த நமீதாவின் கணவர் வீரேந்திர சவுத்ரி ஆகியோர் கலந்து கொண்டு சிறு, குறு தொழில் நிர்வாகிகளுடன் மத்திய அரசு கடன் விவகாரம் குறித்து பேசினார்கள்.

    இதில், சிறப்பு அழைப்பாளராக நமீதாவும் கலந்து கொண்டார். இதன் பேனரில் இந்திய அரசின் அசோக முத்திரை பயன்படுத்தப்பட்டிருந்தது. மேலும், கவுன்சிலிங் தலைவர் மற்றும் செயலாளர் ஆகிய இருவரும் இந்திய அரசின் அரசு முத்திரையை தவறாக பயன்படுத்தியதோடு தேசிய கொடியை வாகனத்தில் பொருத்தியிருந்தது குறித்து புகார் எழுந்தது.

    மேலும், சேலம், ஜாகீர் அம்மா பாளையம் பகுதியைச் சேர்ந்த கோபால் சாமி என்பவர் ரூ.41 லட்சம் பணத்தை தன்னிடம் பெற்றுக் கொண்டு மோசடி செய்துவிட்டதாக முத்துராமன் மற்றும் துஷ்யந்த் யாதவ் மீது புகார் அளித்திருந்தார். இது குறித்து சேலம் சூரமங்கலம் காவல் துறையினர் விசாரணை நடத்தி அந்த அமைப்பின் தேசிய தலைவர் முத்துராமன் மற்றும் துஷ்யந்த் யாதவ் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும், இந்த அமைப்பின் தலைவரும், செயலாளரும் பணம் வாங்கிக் கொண்டு பல மோசடிகளில் ஈடுப்பட்டுள்ளதாக புகார் எழுந்த நிலையில் இருவரையும் நீதிமன்ற காவலில் எடுத்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். புகார் கொடுத்த கோபால் சாமி, தமிழக தலைவர் பதவியை வாங்குவதற்காக நடிகை நமீதாவின் கணவர் ரூ.4 கோடி வரை பணம் கொடுத்துள்ளதாக புகாரில் தெரிவித்துள்ளார்.

    அதன்பேரில் தற்போது நமீதாவின் கணவர் மற்றும் முத்துராமின் உதவியாளர் மஞ்சுநாத் ஆகிய இருவரும் இன்று இரவு ஆஜராகும் படி சூரமங்கலம் காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். ஆனால் இதுவரை மஞ்சுநாத் மற்றும் நடிகை நமீதாவின் கணவர் இருவரும் ஆஜராகவில்லை. இது தொடர்பாக காவல் துறையின் விசாரணை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • நடிகை நமீதா முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார்.
    • இவர் தற்போது அரசியலில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறார்.

    2004-ம் ஆண்டு வெளியான நடிகர் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நமீதா. விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார். இதைத்தொடர்ந்து பட வாய்ப்புகள் குறைந்து சின்னத்திரை நிகழ்ச்சிகளில் மட்டுமே தலைக்காட்டி வந்த நமீதா, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.

    அதிலிருந்து வெளியில் வந்ததும் தனது காதலர் வீரேந்திர சவுத்ரி என்பவரை 2017-ம் ஆண்டு மணந்து கொண்டார். இவருக்கு அண்மையில் கிருஷ்ணா ஆதித்யா மற்றும் கியான் ராஜ் என்ற இரட்டை குழந்தைகள் பிறந்தது. நமீதா தற்போது நடிப்பிற்கு முழுக்குப்போட்டு விட்டு முழு நேரமாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார். பா.ஜனதா கட்சியின் கூட்டங்களில் கலந்துகொண்டு பேசி வருகிறார்.


    நமீதா

    இந்த நிலையில் அவர் இன்று சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், "பொதுவாக நாம் ஆங்கிலப்புத்தாண்டு அன்று நண்பர்களுடன் வெளியே சென்று புத்தாண்டு கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறோம். நண்பர்களுடன் சேர்ந்து பெரிய அளவில் இந்தக்கொண்டாட்டத்தைச் செய்கிறோம். ஆனால் அது நம்முடைய கலாச்சாரம் கிடையாது. பண்பாடு கிடையாது.

    நம்முடைய புத்தாண்டு என்பது வரும் ஏப்ரல் 14-ந் தேதி வரும் சித்திரை முதல் தேதிதான். ஜனவரி 1-ந் தேதி நம்முடைய புத்தாண்டு கிடையாது. அதனால் வரும் 14-ந் தேதி சித்திரை முதல் தேதியில் காலையில் எழுந்து புத்தாடை அணிந்து கோவிலுக்கு சென்று புது வருடத்தை வரவேற்போம். எல்லோருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்" என்று பேசினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


    • நடிகை நமீதா காதலர் வீரேந்திர சவுத்ரி என்பவரை 2017-ம் ஆண்டு மணந்து கொண்டார்.
    • இவர்களுக்கு அண்மையில் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது.

    2004-ம் ஆண்டு வெளியான நடிகர் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நமீதா. முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்த அவர் இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தார்.


    நமீதா

    விஜய், அஜித் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்த நமீதா, கவர்ச்சி நடிகையாகவும் வலம் வந்தார். ஒரு கட்டத்தில் உடல் எடை அதிகரித்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறினார். மன அழுத்தத்தால் தான் தனது உடல் அவ்வாறு மாறியதாக, நமீதா குறிப்பிட்டு இருந்தார்.


    வீரேந்திர சவுத்ரி - நமீதா

    பட வாய்ப்புகள் குறைந்து சின்னத்திரை நிகழ்ச்சிகளில் மட்டுமே தலைக்காட்டி வந்த நமீதா, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். அதிலிருந்து வெளியில் வந்ததும் தனது காதலர் வீரேந்திர சவுத்ரி என்பவரை 2017-ம் ஆண்டு மணந்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்த நமீதா கடந்த மே மாதம், தான் கர்ப்பமாக இருப்பதை வலைத்தளத்தில் அறிவித்து, கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டார்.


    மகன்களுடன் நமீதா

    அண்மையில் இவருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. இந்நிலையில், நடிகை நமீதா தன் இரட்டை குழந்தைகளுக்கு கிருஷ்ணா ஆதித்யா மற்றும் கியான் ராஜ் என பெயர் வைத்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "கிருஷ்ணா ஆதித்யா' மற்றும் 'கியான் ராஜ்' இருவரும் என் கிருஷ்ணரால் பரிசளிக்கப்பட்ட விலையுயர்ந்த பரிசுகள். எனது சொந்த ஊரான சூரத்தில் நெருக்கமான மற்றும் என் அன்புக்குரியவர்கள் மத்தியில் பெயர் சூட்டும் விழா நடந்தது. உங்கள் அனைவரின் அன்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி" என தெரிவித்துள்ளார்.

    • நடிகை நமீதாவிற்கு சமீபத்தில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன.
    • இவர் திருப்பதிக்கு தன் கணவருடன் சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார்.

    2004-ம் ஆண்டு வெளியான நடிகர் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நமீதா. முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்த அவர் இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தார். விஜய், அஜித் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்த நமீதா, கவர்ச்சி நடிகையாகவும் வலம் வந்தார்.


    நமீதா

    பட வாய்ப்புகள் குறைந்து சின்னத்திரை நிகழ்ச்சிகளில் மட்டுமே தலைக்காட்டி வந்த நமீதா, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். அதிலிருந்து வெளியில் வந்ததும் தனது காதலர் வீரேந்திர சவுத்ரி என்பவரை 2017-ம் ஆண்டு மணந்து கொண்டார். இவருக்கு அண்மையில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன.


    நமீதா

    இந்நிலையில், இவர் தனது கணவருடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த நமீதா, தன் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டி கோவிலுக்கு வந்ததாகவும் வருங்காலங்களில் முழுமையாக அரசியலில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளார். இவர் பா.ஜ.க.வில் உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விஜயகாந்த், விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமடைந்தவர் நமீதா.
    • இவர் தனது காதலர் வீரேந்திர சவுத்ரி என்பவரை 2017-ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார்.

    2004-ம் ஆண்டு வெளியான நடிகர் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நமீதா. முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்த அவர் இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தார்.

     

    விஜய், அஜித் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்த நமீதா, கவர்ச்சி நடிகையாகவும் வலம் வந்தார். ஒரு கட்டத்தில் உடல் எடை அதிகரித்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறினார். மன அழுத்தத்தால் தான் தனது உடல் அவ்வாறு மாறியதாக, நமீதா குறிப்பிட்டு இருந்தார்.

     

    நமீதா

    நமீதா

    பட வாய்ப்புகள் குறைந்து சின்னத்திரை நிகழ்ச்சிகளில் மட்டுமே தலைக்காட்டி வந்த நமீதா, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். அதிலிருந்து வெளியில் வந்ததும் தனது காதலர் வீரேந்திர சவுத்ரி என்பவரை 2017-ம் ஆண்டு மணந்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்த நமீதா கடந்த மே மாதம், தான் கர்ப்பமாக இருப்பதை வலைத்தளத்தில் நமீதா அறிவித்து, கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டார்.

    இந்நிலையில் நேற்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சென்னை சோழிங்கநல்லூர் அக்கரையில் உள்ள கிருஷ்ணர் கோவிலுக்கு நமீதாவும், அவரது கணவரும் 2 கைக்குழந்தைகளை கையில் தூக்கிக்கொண்டு வந்து, சாமி தரிசனம் செய்தனர்.

    நமீதா

    நமீதா

     

    இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. "நமீதாவுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதா?" என்று பலர் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து நமீதா தரப்பில் விசாரித்தபோது, நமீதாவுக்கு கடந்த ஜூலை மாதமே இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்ததாகவும், குழந்தைகள் எடை குறைவாக இருந்ததால், பிரசவமான தகவலை வெளியே தெரிவிக்காமல் சிகிச்சை அளித்து வந்ததாகவும், பெயர் சூட்டு விழாவில் குழந்தை பிறந்த விவரத்தை அறிவிக்கலாம் என்று இருந்தாகவும் தெரிவித்தனர்.

    கிருஷ்ண ஜெயந்தி என்பதால் குழந்தைகளை கோவிலுக்கு கொண்டு வந்து சாமி தரிசனம் செய்ய வந்த நமீதாவுக்கும், இரட்டை குழந்தைகளுக்கும் ரசிகர்கள் வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

    ×