search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "10 மழைநீர் உறிஞ்சு குழிகள்"

    • வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜி.தும்மலபட்டி ஊரா ட்சியில் 7 நாட்களில் 10 மழைநீர் சேகரிப்பு உறிஞ்சு குழி அமைக்கப்பட்டுள்ளது.
    • புதிதாக அமைக்கப்பட்ட மழைநீர் சேகரிப்பு உறிஞ்சு குழிகளை உலக சாதனை ஆய்வாளர் பார்வையி ட்டார்.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜி.தும்மலபட்டி ஊரா ட்சியில் 7 நாட்களில் 10 மழைநீர் சேகரிப்பு உறிஞ்சு குழி அமைக்கப்பட்டுள்ளது.

    ஒரு குழிசெலவு தொகை ரூ.22ஆயிரம் மதிப்பில் 10 மழைநீர் சேகரிப்பு உறிஞ்சு குழிகள் உருவாக்கப்பட்டது. இதனால் மழைநீர் வீணா காமல் முழுவதும் மீண்டும் பயன்படும். புதிதாக அமைக்கப்பட்ட மழைநீர் சேகரிப்பு உறிஞ்சு குழிகளை உலக சாதனை ஆய்வாளர் மனோபரத் பார்வையி ட்டார்.

    அவருடன் ஜி.தும்மல பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயப்பிரியா நடராஜன், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பரமேஸ்வரி முருகன், துணை தலைவர் முத்து, வட்டார வளர்ச்சி அலுவல ர்கள் உதயகுமார், இந்தி ராணி, துணைத் தலைவர் சங்கரேஸ்வரி கவியரசு, ஊராட்சி செயலர் சோலை மலை,

    ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவி பொறியா ளர்கள் ஜான் பிரிட்டோ, டெல்லி ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.மழைநீர் சேகரிப்பு உறிஞ்சு குழிகளைபராமரிப்பது பற்றி மனோபரத் விளக்கி னார்.

    ×