search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்கள் ஓட்டம்"

    • மின் கம்பி அறுந்து விழுந்த காரணம் என்ன? என்பதனை பார்வையிட்டனர்.
    • முன்னெ ச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் பாஷ்யம் தெருவில் இன்று காலை மின் கம்பத்தில் இருந்த மின் கம்பி திடீரென்று அறுந்து சாலையில் விழுந்தது. அப்போது அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இதனை பார்த்து அலறியடித்து ஓடினர் இதனை தொடர்ந்து மின் கம்பி அறுந்து விழுந்த காரணத்தினால் உடனடியாக மின்தடை ஏற்பட்டது. இதனையடுத்து மின்சார துறை அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் கொடுத்ததின் பேரில் மின் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மின் கம்பி அறுந்து விழுந்த காரணம் என்ன? என்பதனை பார்வையிட்டனர். பின்னர் அறுந்து விழுந்த மின் கம்பியை மீண்டும் சரி செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் இந்த தெருவில் தனியார் மருத்துவமனைகள், ஆயிரக்கணக்கான வீடுகள், மற்றும் தொழில் நிறுவனங்கள் இருப்பதால் ஆயிரக்கணக்கான மக்கள் தினந்தோறும் வாகனங்க ளிலும், நடந்தும் சென்று வருகின்றனர். மேலும் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள், நோயாளிகள், குழந்தைகள் வந்து செல்லும் பகுதியாக உள்ளது . இதன் காரணமாக மிக முக்கியசாலையாக கருத ப்படும் பகுதியில் இன்று காலை மின் கம்பி அறுந்து விழுந்தது அனைவரின் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் கடலூர் மாவட்டத்தில் தற்போது தொடர்ச்சியாக இடி மின்னலுடன் கூடிய கனமழைபெய்து வருகின்றது. மேலும் இரவு நேரங்களில் வழக்கத்தை விட அதிக அளவில் காற்றும் வீசி வருவதால் ஆங்காங்கே தற்போது மின் கம்பிகள் பழுது ஏற்பட்டு தளர்ந்து உள்ளது . இது போன்ற தொடர்ச்சியாக மழை பெய்யும் சமயங்களில் மின்சாரத்துறை அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி ஒவ்வொரு பகுதியாக உள்ள மின்கம்பிகள், டிரான்ஸ்பார்மர்கள், மின் கம்பங்கள் போன்றவற்றை உரிய முறையில் ஆய்வு செய்து இது போன்ற மின்கம்பி அறுந்து விழும் நிகழ்வுகளை தவிர்க்காமல் இருந்து வருவது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் கடலூர் மாவட்ட ம் பேரிடர் மாவட்டமாக உள்ளதால் எந்நேரத்திலும் மழை அதிகளவிலும், காற்று சூறாவளி காற்றா கவும் மாறக்கூடிய அவல நிலையில் உள்ள பகுதியாக இருப்பதினால் மின்சாரத்துறை அதிகாரிகள் மழைக்காலங்கள் தொடங்கு வதற்கு முன்பு முன்னெ ச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.  கடலூர் மஞ்சக்குப்பம் பாஷ்யம் தெருவில் திடீரென்று மின் கம்பி சாலையில் அறுந்து விழுந்து பொதுமக்கள் அலறியடித்து ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×