search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சரவண பொய்கை"

    • கார்த்திகைப் பெண்கள் முருகனை சரவணப் பொய்கையிலிருந்து எடுத்து வளர்த்தார்கள்.
    • கந்தனை வளர்த்ததற்காக சிவபெருமான் கார்த்திகைப் பெண்களுக்கு ஒரு வரம் அளித்தார்.

    கார்த்திகைப் பெண்கள் முருகனை சரவணப் பொய்கையிலிருந்து எடுத்து வளர்த்தார்கள்.

    அவ்வாறு கந்தனை சீராட்டி பாராட்டி வளர்த்ததற்காக சிவபெருமான் கார்த்திகைப் பெண்களுக்கு ஒரு வரம் அளித்தார்.

    'கார்த்திகை பெண்களே, நீவிர் எம் குமாரனை இனிது வளர்த்த காரணத்தால்

    உங்கள் நாளான கிருத்திகா நட்சத்திரத்தன்று, விரதம் இருந்து குமரனை வழிபடுவோர்கள்

    செல்வம், கல்வி, ஆயுள், உத்த பத்தினி, நன் மக்கட்பேறு முதலிய நலன்களை அடைவர்'

    என்று அருள் புரிந்தார்.

    கார்த்திகை மாதத்தில் வரும் பரணியன்று இரவில் உண்ணாதிருந்து கார்த்திகையன்று அதிகாலை நீராடி

    முருகனை வழிபாடு செய்ய வேண்டும்.

    அன்று பகலில் உறங்குதல் கூடாது.

    விநாயகரின் கட்டளைப்படி நாரதமுனிவர் பன்னிரெண்டு ஆண்டுகள் கார்த்திகை விரதமிருந்து

    கந்தனை வழிபட்டு தேவ முனிவர்களில் முதன்மை பெற்றார்.

    • திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் துணிகளை துவைக்க அனுமதிக்ககோரி பொதுமக்கள் உண்ணாவிரதம் நடந்தது.
    • இதில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு உட்பட்டது சரவணப் பொய்கை. புனித தீர்த்தமான இங்கு பொதுமக்கள் துணிகளை துவைக்கவும், குளிக்கவும், ரசாயன கலவைகள் உபயோகப்படுத்துவதால் தண்ணீர் மாசடைந்து அசுத்தம் ஏற்பட்டது.

    இதனை தடுக்கும் வகையில் இந்த பகுதி மக்கள் சலவை செய்ய ரூ.44 லட்சம் மதிப்பீட்டில் சரவணப் பொய்கை அருகில் குளியலறை மற்றும் சலவை கூடம் கட்டப்பட்டது. அதில் பொதுமக்கள் சலவை செய்ய அறிவுறுத்தப்பட்டனர்.

    இந்த நிலையில் சலவை கூடத்தில் துவைக்க செல்ல மாட்டோம், பாரம்பரியமாக சரவணப்பொய்கையில் துணிகளை துவைத்து வருகிறோம். மீண்டும் எங்களுக்கு அந்த பகுதியில் துணிகளை துவைக்க அனுமதியளிக்க வேண்டும் என்றுகூறி பொதுமக்கள் சில நாட்களுக்கு முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதை தொடர்ந்து அேத கோரிக்கையை வலியுறுத்தி இன்று சரவணப் பொய்கை பகுதியில் 100-க்கும் மேற்பட்ட ெபாதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பக்தர்கள் புனித தீர்த்தமாக பயன்படுத்தும் சரவணப்பொய்கை பகுதியில் சலவை செய்து அசுத்தம் ஏற்படுத்துவதால் சில ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் முற்றிலும் மாசடைந்து, அதில் உள்ள மீன்கள் செத்து மிதந்தன. இதையடுத்து மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி விஞ்ஞானிகள் சரவணப் பொய்கையை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    தற்போது சரவணப் பொய்கை தூய்மையாக இருக்கும் நிலையில் அதனைப் பாதுகாக்கும் நடவடிக்கையாக கோவில் நிர்வாகம் சரவணப் பொய்கை பகுதியில் ரசாயன கலவைகள் கொண்டு துணிகள் துவைப்பதற்கு தடை விதித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் முதியவர் மூழ்கி இறந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    திருப்பரங்குன்றம், சரவணப் பொய்கை குளத்தில் அடையாளம் தெரியாத முதியவர் உடல் மிதப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். அங்கு குளத்துக்குள் உடல் மிதந்த நிலையில் கிடந்தது. இது குறித்து பெரியார் பஸ் நிலைய தீயணைப்பு அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    நிலைய அலுவலர் கண்ணன் தலைமையில் வீரர்கள், பாதுகாப்பு உபகரணங்களுடன் சம்பவ இடத்துக்கு சென்றனர். சரவண பொய்கை குளத்துக்குள் பிணத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அது 60 வயது மதிக்கத்தக்க முதியவர் சடலம் என்பது தெரிய வந்தது.

    திருப்பரங்குன்றம் போலீசார் குளக்கரையில் இருந்த உடைமைகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். சரவண பொய்கையில் மூழ்கி இறந்தவர், மதுரை டி.ஆர்.ஓ காலனியை சேர்ந்த வெங்கடேசன் (வயது 62) என்பது தெரிய வந்தது. இவர் சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பின் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் வெங்கடேசன் நேற்று இரவு திருப்பரங்குன்றத்தில் தங்கி இருந்தார். அவர் காலை 10 மணி அளவில் குளிக்க சென்றதை அங்கு உள்ளவர்கள் பார்த்து உள்ளனர்.

    சரவண பொய்கை குளத்தில் முதியவர் வெங்க டேசன், மூச்சை அடக்கிய நிலையில் தற்கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×