என் மலர்
நீங்கள் தேடியது "சரபோஜி மார்க்கெட்"
- அண்ணாசாலையின் பின்புறம் சாலையோரம் இருந்த கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு வடிகால் கட்டப்பட்டது.
- சரபோஜி மார்க்கெட் வளாகத்துக்குள் தரைக்க டைகள், தள்ளுவண்டி கடைகள் அமைத்து வியாபாரம் செய்யலாம் என ஆணையர் கூறினார்.
தஞ்சாவூர்:
தஞ்சை அண்ணா சாலை யில் மழைநீர் வடிகால் கட்டும் பணி நடந்து வருகி றது. முதல் கட்டமாக அண்ணாசாலையின் பின்புறம் சாலையோரம் இருந்த கடைகள் அப்புற ப்படுத்தப்பட்டு வடிகால் கட்டப்பட்டது.
அடுத்த கட்டமாக அங்குள்ள தியேட்டர் முதல் சரபோஜி மார்க்கெட் வரை வடிகால் கட்ட முடிவு செய்யப்பட்டது.
இதனால் சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது.
அப்போது தரைக்கடை வியாபாரிகள், தள்ளுவண்டி கடை வியாபாரிகள், தங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் என ஆணையரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து சரபோஜி மார்க்கெட் வளாகத்துக்குள் தரைக்க டைகள், தள்ளுவண்டி கடைகள் அமைத்து வியாபாரம் செய்யலாம் என ஆணையர் கூறினார்.
இதற்கு சரபோஜி மார்க்கெட் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மார்க்கெட்டுக்கு வெளியே சாலையில் அமர்ந்து மறியல்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவா ர்த்தை நடத்தினர் அதன் பின்னர் மறியல் கைவிடப்பட்டது.
இந்த மறியல் தொடர்பாக தஞ்சை போலீஸ் நிலைய த்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் மறியலில் ஈடுபட்ட 25 வியாபாரிகள் மீது போலீசார் வழக்கு ப்பதிவு செய்தனர்.