என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நர்சிங் மாணவர்"
- விடுதியில் இருந்து வெளியேறிய மாணவர்கள்
- பெற்றோர் அழைத்துச் சென்றதால் பரபரப்பு
கன்னியாகுமரி:
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஆலம்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் சுமித்திரன் (வயது 19). இவர் குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள படந்தாலுமூடு பகுதியில் செயல்பட்டு வரும் கிரேஸ் நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார்.
கல்லூரி விடுதியில் தங்கியிருந்த இவர் நேற்று முன்தினம் மர்மமான முறையில் விடுதியின் மேல் மாடியில் தூக்கில் பிணமாக தொங்கினார். இந்த சம்பவம் மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாணவர் சுமித்திரன் உடலை களியக்காவிளை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த நிலையில் சுமித்திரன் சாவில் சந்தேகம் இருப்ப தாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் களியக்கா விளை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து போலீசார் கல்லூரி நிர்வாகத்திடமும் அங்கு படிக்கும் மாணவ மாணவிகளிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலை யில் மாணவர் சுமித்திரன் உடல் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய ப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த சூழலில் கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் சக மாணவர்களின் பெற்றோர் திரண்டு வந்து கல்லூரி நிர்வாகத்திடம் தங்கள் பிள்ளைகளின் பாது காப்பு குறித்து விளக்கம் கேட்டுள்ளனர்.
அதற்கு கல்லூரி நிர்வா கம் கொடுத்த விளக்கத்தால் திருப்தி அடையாத சில பெற்றோர், தங்கள் பிள்ளை களை வீட்டிற்கு அழைத்து சென்று வருகின்றனர்.மேலும் சில மாணவர்கள் தாங்களாகவே வெளியேறியதாக கூறப்படுகிறது. இதனால் கல்லூரி வளாகத்தில் பர பரப்பு ஏற்பட்டது.
- வங்கி கணக்குகளை முடக்க நடவடிக்கை
- மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கஞ்சா விற்பனை செய்ததாக 50-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை விற்பனை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
தனிப்படை போலீசாரும் கஞ்சா விற்பனையை கண்காணித்து வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கஞ்சா விற்பனை செய்ததாக 50-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் வடசேரி சப்-இன்ஸ்பெக்டர் சத்திய சோபன் தலைமையிலான போலீசார் புத்தேரி மேம்பா லத்தின் கீழ் ரோந்து பணி யில் ஈடுபட்டார். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்ற 3 பேரை பிடிக்க முயன்றனர். இதில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மற்ற 2 பேரை போலீசார் பிடித்தனர்.
பிடிப்பட்ட 2 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.விசாரணையில் அவர்கள் கலுங்கடி பகுதியைச் சேர்ந்த ரெக்ஸ்பெரின் (வயது 21), ஆல்பன் செல்வா (24) என்பது தெரிய வந்தது.தப்பி ஓடியவர் நெல்லை மாவட்டம் வள்ளியூரை சேர்ந்த ஆறுமுகம் என்பதும் தெரியவந்தது. பிடிபட்டவர்களிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட ரெக்ஸ் பெரின், ஆல்பன் செல்வா இவர்களது வங்கி கணக்குகளை போலீசார் முடக்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். மேலும் ஆல்பன் செல்வா தாயாரின் வங்கி கணக்கையும் போலீசார் முடக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட ரெக்ஸ்பெரின் நர்சிங் மாணவர், ஆல்பன் செல்வா என்ஜினீயரிங் பட்டதாரி ஆவார்கள். தலை மறைவான ஆறுமுகத்தை பிடிக்க போலீசார் நடவ டிக்கை மேற்கொண்டு உள்ள னர். அவர் மீது ஏற்க னவே கோட்டார், அஞ்சு கிராமம் போலீஸ் நிலையங்களில் கஞ்சா வழக்கு உள்ளது.
புதுக்கடை அருகே தேங்காப்பட்டணம் பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை நடப்ப தாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நேற்று புதுக்கடை போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் சேகர் தலைமையில் அந்த பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தேங்காப்பட்டணம் பழைய பள்ளிக்கூடம் தெருவில் சந்தேகப்படும் படியாக இரு சக்கர வாகனத்துடன் நின்ற ஒருவர் போலீசை கண்டதும் ஓட முயற்சி செய்துள்ளார். போலீசார் தடுத்து, அவரை பிடித்து விசாரித்தனர்.
அவரிடம் எடை தராசு மற்றும், 100 கிராம் கஞ்சா, கஞ்சா பார்சல் செய்ய பயன்படுத்தும் பாலிதீன் பைகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை பறிமுதல் செய்து, போலீஸ் நிலையம் கொண்டு விசாரித்தனர். விசாரணையில் சம்மந் தப்பட்டவர் கீழ்குளம் பகுதி மரகதம் மகன் ஜெரோம் மேக்ஸ் (27) என தெரிய வந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்