என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பெயிண்டர் கொலை"
- கொலை செய்யப்பட்ட முத்துப்பாண்டிக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
- போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 42). இவர் பெயிண்டராகவும், பணம் கொடுக்கல்-வாங்கல் தொழில் செய்தும் வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று இரவு முத்துப்பாண்டி வீரவாஞ்சி நகரில் உள்ள அவரது தாய் மாரியம்மாள் வீட்டில் இருந்தபோது அவரை தேடி சிலர் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது அவரிடம், கொஞ்சம் பேச வேண்டும் என்று கூறி வெளியே அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே முத்துப்பாண்டி பாட்டிலால் குத்திக்கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலைய போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் முத்துப்பாண்டியை தேடி வந்த நபர்கள் யார்? முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? பணம் கொடுக்கல் வாங்கலில் கொலை செய்யப்பட்டாரா ? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று முன்தினம் டாஸ்மாக் பாரில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட மறுநாளே இந்தக் கொலைச் சம்பவம் நடைபெற்று இருப்பது கோவில்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொலை செய்யப்பட்ட முத்துப்பாண்டிக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
- முன் விரோதம் காரணமாக பெயிண்டர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பூதப்பாண்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசில் சரணடைந்த ரிச்சரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள நாவல் காடு நம்பியான் குளம் பகுதியைச் சேர்ந்தவர் நெல்சன் (வயது 50), பெயிண்டர். அதே பகுதியை சேர்ந்தவர் விவசாயி ரிச்சர் (43). இவர்கள் இருவருக்கும் இடையே சொத்து பிரச்சனை உள்ளது. இதன் காரணமாக அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்தது.
மேலும் கடந்த 2021-ம் ஆண்டு ரிச்சரை தாக்கியதாக நெல்சன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு கோர்ட்டில் விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் அவர்களுக்கு இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று இரவு நாவல் காடு பகுதியில் நெல்சன் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ரிச்சர் அவரை வழிமறித்து தகராறு செய்தார். இருவரும் தகாத வார்த்தையால் மாறி மாறி பேசினார்கள். இதில் ஆத்திரம் அடைந்த ரிச்சர் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து நெல்சனை சரமாரியாக வெட்டினார்.
கன்னம், வயிறு, மணிக்கட்டு பகுதிகளில் வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த நெல்சன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து ரிச்சர், பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். நெல்சனை கொலை செய்த தகவலை போலீசாரிடம் அவர் தெரிவித்தார்.
இன்ஸ்பெக்டர் திருமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். நெல்சன் கொலை செய்யப்பட்டது பற்றி தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். பிணமாக கிடந்த நெல்சனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்யப்பட்ட நெல்சனின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் திரண்டு இருந்தனர். இதற்கிடையில் போலீசில் சரணடைந்த ரிச்சரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். முன் விரோதம் காரணமாக பெயிண்டர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பூதப்பாண்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தலையில் படுகாயம் அடைந்த மாரிதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
- பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெயிண்டரை கொலை செய்த வாலிபரை தேடி வந்தனர்.
கவுண்டம்பாளையம்:
ராஜபாளையத்தை சேர்ந்தவர் மாரிதுரை (வயது 45). பெயிண்டர். இவர் குடும்பத்தை பிரிந்து கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நம்பர் 4 வீரபாண்டி பிரிவில் வசித்து வருகிறார். இவருக்கு வீடு இல்லாததால் அந்த பகுதிகளில் உள்ள கடைகளின் முன்பு படுத்து தூங்கி வந்தார்.
குடிப்பழக்கத்துக்கு அடிமையான மாரிதுரை அவரது நண்பரான ஜெரோ மியா (27) என்பவருடன் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றார். போதை தலைக்கேறிய நிலையில் இருந்த இவர்கள் 2 பேரும் கோவை-மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு கடை முன்பு அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் மாரிதுரையிடம் மது குடிக்க பணம் கேட்டார். அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் மாரிதுரையை கீழே தள்ளி அங்கு கிடந்த கல்லால் அவரது தலையில் தாக்கினார். பின்னர் அங்கு இருந்து தப்பிச் சென்றார். இதில் தலையில் படுகாயம் அடைந்த மாரிதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த தகவல் கிடைத்ததும் பெரிய நாயக்கன்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் கொலை செய்யப்பட்ட மாரிதுரையின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெயிண்டரை கொலை செய்த வாலிபரை தேடி வந்தனர். அப்போது போலீசார் அந்த பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு மேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் வாலிபர் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனை வைத்து மாரிதுரையை கல்லால் தாக்கி கொலை செய்த திருமலை நாயக்கன்பாளையத்தை சேர்ந்த சக்திவேல் (19) என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
சம்பவத்தன்று நான் வேலை முடித்து விட்டு அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றேன். போதை தலைக்கேறிய நிலையில் கோவை-மேட்டுப்பாளையம் ரோட்டில் நடந்து சென்றேன். அப்போது எனக்கு ஏற்கனவே அறிமுகமான மாரிதுரை அந்த பகுதியில் உள்ள கடை முன்பு படுத்து இருந்தார். அவரிடம் நான் மது குடிக்க பணம் கேட்டேன். அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார். அப்போது எங்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நான் அவரை கீழே தள்ளி அங்கு கிடந்த கல்லால் அவரது தலையில் தாக்கினேன். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் பரிதாபமாக இறந்தார்.
பின்னர் நான் தலைமறைவாக இருந்தேன். போலீசார் விசாரணை நடத்தி என்னை கைது செய்து விட்டனர். இவ்வாறு அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறி உள்ளார். போலீசார் கைது செய்யப்பட்ட சக்திவேலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- போலீசார் சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- பெயிண்டரை மனைவியின் கள்ளக்காதலன் வெட்டி கொலை செய்த சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவெறும்பூர்:
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள கீழ குமரேசபுரம் மாரியம்மன் கோவில்தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 48). பெயிண்டர்.
இவருக்கு சமுத்திரவள்ளி (45) என்ற மனைவியும் ஆஷா சர்மிலி, சுவாதி, ஹரிணி ஆகிய 3 மகள்களும் உள்ளனர்.ஆஷா சர்மிலி சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியிலும், சுவாதி சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாகவும் வேலை பார்த்து வருகிறார்கள். ஹரிணி திருவெறும்பூரில் ஐடிஐ படித்து வருகிறார்.
சரவணனின் மனைவி சவுந்தரவள்ளி எழில் நகர் பகுதியில் ஒரு பந்தல் காண்ட்ராக்டரிடம் வேலை பார்த்து வருகிறார்.
இதில் மேலாளராக வேலை பார்க்கும் லால்குடியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (55) என்பவருடன் சவுந்தரவள்ளிக்கு பழக்கம் ஏற்பட்டது.
பின்னர் அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இதை அறிந்த சரவணன், மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனை கண்டித்தார். இதனால் ராதாகிருஷ்ணனுக்கு சரவணன் மீது தீராத ஆத்திரம் ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு ராதாகிருஷ்ணன் கள்ளக்காதலி வீட்டிற்கு சென்றார். அப்போது சவுந்திரவள்ளி தனது மகள்களை பார்ப்பதற்காக சென்னைக்கு சென்றிருந்தார். அங்கு தனியாக சரவணன் இருந்துள்ளார். பின்னர் அங்கிருந்த சரவணனிடம் பேச்சுக்கொடுத்து, அவரை மது குடிக்க வைத்தார். அப்போது சரவணன், ராதாகிருஷ்ணனிடம் தனது மனைவியுடனான உறவை துண்டித்து விடுமாறு கூறியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த ராதாகிருஷ்ணன், பெயிண்டர் சரவணனை சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்தார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடினார்.
பின்னர் ராதாகிருஷ்ணன் சென்னைக்கு சென்றிருந்த கள்ளக்காதலி சவுந்தரவள்ளிக்கு போன் செய்து சரவணனை வெட்டி கொன்று விட்டதாக கூறியுள்ளார்.அதிர்ச்சியடைந்த சவுந்திரவள்ளி உடனடியாக தான் வேலை பார்க்கும் பந்தல் காண்ட்ராக்டர் பால்ராஜ் என்பவருக்கு தகவல் சொல்லி வீட்டிற்கு சென்று பார்க்கும்படி கூறியுள்ளார்.
உடனடியாக பால்ராஜ், சரவணன் வீட்டிற்கு சென்றார். அங்கு சரவணன் ரத்த வெள்ளத்தில் வெட்டி கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டு திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த திருவெறும்பூர் போலீசார் சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மது போதையில் ஏற்பட்ட தகராறில் பெயிண்டரை மனைவியின் கள்ளக்காதலன் வெட்டி கொலை செய்த சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மோகன்ராஜ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது.
- கொலை சம்பவம் வெள்ளகோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
வெள்ளகோவில்:
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கே.வி.பழனிசாமி நகரில் உள்ள ஒரு வீட்டில் நாமக்கல் மாவட்டம் பரமத்தியை சேர்ந்த மோகன்ராஜ்(வயது 31), திருப்பூர் திருமுருகன்பூண்டியை சேர்ந்த உசேன் (35), அவரது சகோதரர் காதர்(40) மற்றும் கரூரை சேர்ந்த அருண் (25) ஆகியோர் தங்கியிருந்து பெயிண்டர்களாக வேலை பார்த்து வந்தனர்.
இந்தநிலையில் இன்று காலை அவர்கள் தங்கியிருந்த வீடு நீண்டநேரமாகியும் திறக்கப்பட வில்லை. இதையடுத்து பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் வீட்டின் ஜன்னல் கதவை திறந்து பார்த்த போது உள்ளே மோகன்ராஜ் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். உசேன் பலத்த காயமடைந்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பொது மக்கள் உடனே இதுகுறித்து வெள்ளகோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் ரமாதேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் மோகன்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். உசேனையும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மோகன்ராஜ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. இதனால் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவருடன் தங்கியிருந்த அருண், காதர் ஆகியோரை காணவில்லை. இதனால் அவர்கள் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாமா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து தலைமறைவான அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். போதையில் ஏற்பட்ட தகராறில் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். வேறு ஏதேனும் காரணமா என்றும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 2பேரும் பிடிபட்டால் இந்த கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். கொலை நடந்த இடத்தில் தடயவியல் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆய்வு செய்தார். இந்த கொலை சம்பவம் வெள்ளகோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
- ரகுநாத்தை கொலை செய்த வெள்ளையன் மற்றும் அவனது கூட்டாளிகளான பிரபல ரவுடி மூர்த்தி, பிரகாஷ் ஆகிய 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மூர்த்தி மீது கொலை வழக்கு மற்றும் அடிதடி வழக்கு போலீஸ் நிலையத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் தொட்டில் பட்டி பகுதியை சேர்ந்தவர் ரகு என்கிற ரகுநாத் (வயது 29). இவர் பெயிண்டராக பணியாற்றி வந்தார்.
அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி வெள்ளையன் என்கிற மாரி கவுண்டர் (37). இவர்கள் இருவருக்கும் இடையே நேற்று வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் இது கைக்கலப்பாக மாறியதில், ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
இதனால் காயமடைந்த ரகுநாத், மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக நேற்று இரவு சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளை ஆஸ்பத்திரி நர்சுகள் செய்து வந்தனர்.
அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற வெள்ளையன் மற்றும் அவரது கூட்டாளிகளான மேட்டூர் ஜீவா நகர் பகுதியை சேர்ந்த மூர்த்தி (36), மேட்டூர் நாட்டாமங்கலம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (30) ஆகியோர் மேட்டூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்த ரகுநாத்தை, கத்தியால் குத்தியும் கழுத்தை அறுத்தும் கொடூரமாக கொலை செய்தனர். இதனால் ரத்த வெள்ளத்தில் ரகுநாத் அங்கே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதையடுத்து பிரபல ரவுடி வெள்ளையன் உள்பட அவனது கூட்டாளிகள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்தவுடன் மேட்டூர் டிஎஸ்பி விஜயகுமார், மேட்டூர் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ஆஸ்பத்திரி ஊழியர்கள் மற்றும் அங்கிருந்த நோயாளிகளிடம் கொலை குறித்து விசாரித்தனர்.
இதையடுத்து, ரகுநாத்தை கொலை செய்த வெள்ளையன் மற்றும் அவனது கூட்டாளிகளான பிரபல ரவுடி மூர்த்தி, பிரகாஷ் ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் மூர்த்தி மீது கொலை வழக்கு மற்றும் அடிதடி வழக்கு போலீஸ் நிலையத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் ரவுடி பட்டியலிலும் உள்ளார். தற்போது மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருவதால் அங்கு பாதுகாப்புக்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
கொலையுண்ட ரவுடி ரகுநாத்துக்கு மனைவியும், 5 வயதில் ஒரு மகளும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர். ஆஸ்பத்திரியில் கணவரின் உடலை பார்த்து மனைவி கதறி அழுத சம்பவம் பார்ப்பவர்கள் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
- ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய கனகராஜை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- கனகராஜூக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
கோவை:
கோவைப்புதூர் அருகே உள்ள குளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 38). பெயிண்டர். இவருக்கு திருமணமாகி சாந்தி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
சம்பவத்தன்று கனகராஜூம், அவரது நண்பரான புளியம்பட்டியை சேர்ந்த எலக்ட்ரிசீயனான வெங்கடேஷ் (31) ஆகியோர் பொள்ளாச்சி ராஜா மில் ரோட்டில் உள்ள லாரி அசோசியேசன் சங்க அலுவலகம் முன்பு அமர்ந்து மது குடித்து கொண்டு இருந்தனர். அப்போது வெங்கடேஷ் தனது செல்போன் மற்றும் பணத்தை காணவில்லை என கனகராஜிடம் தகராறு செய்தார்.
அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வெங்கடேஷ் அங்கு கிடந்த செங்கலை எடுத்து கனகராஜின் தலையில் அடித்தார். இதில் நிலைகுலைந்த அவர் மயங்கி கீழே விழுந்தார். இதனையடுத்து வெங்கடேஷ் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய கனகராஜை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு கனகராஜை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.
இது குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரை கொலை செய்த வெங்கடேஷை தேடி வருகிறார்கள்.
- 500 மீட்டர் தொலைவுக்கு எந்த ஒரு மின் இணைப்பும் இல்லை.
- சந்தேக மரணம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ருத்திராயம்பாளையத்தை சேர்ந்தவர் சுஜித் (வயது 22). பெயிண்டர். இவரது மனைவி மகேஷ்(21). இவர்களுக்கு கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
சம்பவத்தன்று மது போதையில் இருந்த சுஜித் தனது மனைவியிடம் கஞ்சம்பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் அவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனையடுத்து அவரை அவரது மனைவி தேடினார். அப்போது கஞ்சம்பள்ளியில் உள்ள சென்னியப்பன் என்பவரது தோட்டத்தில் மின்சாரம் தாக்கி இறந்து கிடந்தார். இது குறித்து அவர் அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது சுஜித் இறந்து கிடந்த பகுதியில் இருந்த 500 மீட்டர் தொலைவுக்கு எந்த ஒரு மின் இணைப்பும் இல்லை. எனவே அவரை யாராவது மின்சாரம் பாய்ச்சி கொலை செய்து விட்டு இங்கு தூக்கி வீசி விட்டு சென்றார்களா? என்பது தெரிய வில்லை.
பின்னர் போலீசார் சுஜித்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அன்னூர் போலீசார் சந்தேக மரணம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த, மாரிமுத்துவை அக்கம், பக்கத்தினர் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- மாரிமுத்துவுக்கு முதலுதவி அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மாதப்பூரை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 45). பெயிண்டர். இவர் அவரது நண்பரான பல்லடம் வடுகபாளையத்தை சேர்ந்த முத்துவேல் (வயது 52) என்பவருடன் சேர்ந்து பெயிண்டிங் வேலை செய்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருவரும் பல்லடம் பஸ் நிலையம் எதிரே உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்தனர்.
இந்தநிலையில் முத்துவேலின் சம்பள பணம் மாரிமுத்துவிடம் இருந்துள்ளது. அந்த பணத்தை தா என்று மாரிமுத்துவிடம், முத்துவேல் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது இவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த முத்துவேல் பீர் பாட்டிலை உடைத்து மாரிமுத்துவை குத்தினார்.
இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த, மாரிமுத்துவை அக்கம், பக்கத்தினர் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக பல்லடம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து முத்துவேலை கைது செய்தனர். இந்தநிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மாரிமுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பஸ் நிலைய வளாகத்தில் வைத்து சரவணக்குமாரை 5 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிக் கொன்றது.
- சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், டி.எஸ்.பி. சத்தியராஜ் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி பிரைண்ட்நகரை சேர்ந்தவர் சரவணக்குமார் (வயது28). பெயிண்டர்.
கொலை
நேற்று இரவு இவர் தனது உறவினரை வழியனுப்புவதற்காக தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்திற்கு சென்றார்.
அப்போது பஸ் நிலைய வளாகத்தில் வைத்து அவரை 5 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிக் கொன்றது. பஸ் நிலையத்தில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எஸ்.பி.விசாரணை
சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், டி.எஸ்.பி. சத்தியராஜ் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
கொலை தொடர்பாக வடபாகம் இன்ஸ்பெக்டர் ரபிசுஷின்ஜோஸ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணக்குமாரை கொலை செய்தவர்கள் யார்?, எதற்காக கொலை செய்தனர்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 பேரை பிடித்து விசாரணை
சரவணக்குமாருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளது. இவர் தாளமுத்துநகரில் வசித்து வந்துள்ளார். அப்போது சரவணக்குமாருக்கும், சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் பிரைண்ட்நகருக்கு வந்துள்ளார்.
இதன் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம்? என போலீசார் வந்தேகிக்கிறார்கள். அதன்பேரில் 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்