search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வருமுன் காப்போம் திட்டம்"

    • முகாமிற்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்குகிறார்.
    • பல்வேறு நோய்களுக்கு இலவசமாக மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கி மருந்து, மாத்திரைகள் வழங்குகின்றனர்.

    முத்தூர்:

    முத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட இலவச சிறப்பு மருத்துவ முகாம் வள்ளியரச்சல் ஊராட்சிக்குட்பட்ட வ.கணபதிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது.முகாமிற்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்குகிறார்.

    முகாமை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறார்.முகாமில் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர்.க.ஜெகதீஷ் குமார் அறிவுரையின்படி வெள்ளகோவில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.ராஜலட்சுமி தலைமையில் முத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், செவிலியர்கள் குழுவினர் நோயாளிகள்,கிராம பொதுமக்களுக்கு பல்வேறு நோய்களுக்கு இலவசமாக மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கி மருந்து, மாத்திரைகள் வழங்குகின்றனர்.

    முகாமில் மேல் சிகிச்சை, அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்படும் நோயாளிகள் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் உரிய சிகிச்சை பெற மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

    • லீபுரம் பஞ்சாயத்து தலைவி ஜெயக்குமாரிலீன் தொடங்கி வைத்தார்
    • பாரம்பரிய உணவு வகைகள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சியையும் நடத்தினர்.]

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் ஆரோக்கியபுரம் புனித ஆரோக்கிய அன்னை நடுநிலைப்பள்ளியில் நடந்தது.

    முகாமை லீபுரம் பஞ்சாயத்து தலைவி ஜெயக்குமாரி லீன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். ஆரோக்கியபுரம் பங்குத்தந்தை மதன், அகஸ்தீஸ்வரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் அகஸ்தீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ரவீனா, டாக்டர் சிலி, லீபுரம் பஞ்சாயத்து துணைத்தலைவர் மணிகண்டன், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் சக்திவேல், கனி, லட்சுமி பாய், ஜெகன், ஜெனி புரூஸ், ஜெராபின், சுமதி, டெல்சி உள்பட பலர் கலந்து கொண்டனர். அங்கன்வாடி பணியாளர்கள் பாரம்பரிய உணவு வகைகள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சியையும் நடத்தினர்.]

    • வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் தொடர்ந்து 2 முகாம்கள் நடத்தப்படும்.
    • 12 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தலைமையில் திருப்பூர் மண்டலம் - 2, வார்டு19, திருநீலகண்டபுரம், மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் முன்னிலையில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமை மேயர் தொடங்கி வைத்து பேசியதாவது :- பொதுமக்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மற்றும் சிறப்பு மருத்துவ சிகிச்சை எளிதில் கிடைக்கச் செய்தல், நோய்களுக்கான பரிசோதனை மற்றும் உடல்நலம் குறித்த ஆலோசனை வழங்குதல், அதிநவீன பரிசோதனை சாதனங்களால் நோய்களை கண்டறிதல், நோய்கண்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளித்தல், சுகாதார விழிப்புணர்வு கல்வி வாயிலாக உடல்நல மேம்பாடு மற்றும் தனிநபர் ஆரோக்கியத்தை உருவாக்குதல் போன்றவற்றை நோக்கமாக கொண்டு "கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்" செயல்படும்.

    இத்திட்டத்தின் மூலம் தொடர்ந்து 2 முகாம்கள் நடத்தப்படும். இம்முகாம்கள் 26.11.2022 அன்று 1ம் மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்-24, ஈபி காலனி, அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் 3:12.2022 அன்று 4ம் மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்- 40 இடுவம்பாளையம், அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் சனிக்கிழமை தோறும் சிறப்பாக நடைபெறும்.

    பொதுமக்கள் இந்த முகாம்களை பயன்படுத்தி சுகாதாரமாக வாழ வாழ்த்துகிறேன் என்றார். தொடர்ந்து, 7 நபர்களுக்கு மக்களை தேடி மருத்துவ மருந்து பெட்டகம், 5 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் என மொத்தம் 12 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முகாமில் துணை மேயர் பாலசுப்ரமணியம், சுகாதார குழு தலைவர் கவிதா நேதாஜி கண்ணன், மாநகர நல அலுவலர் அலுவலர் கௌரி சரவணன், மண்டல தலைவர் கோவிந்தராஜ், மாமன்ற உறுப்பினர்கள், சுகாதார அலுவலர், சுகாதார ஆய்வாளர், மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் 61 சிறப்பு மருத்துவ முகாம்களின் மூலம் 43,400 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
    • 1.99 லட்சம் பயனாளிகள் கண்டறியப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம், வீரசோழபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் வட்டார அளவிலான சிறப்பு மருத்துவ முகாமினை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். அப்போது செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியதாவது:- திருப்பூர் மாவட்டத்தில் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் 61 சிறப்பு மருத்துவ முகாம்களின் மூலம் 43,400 நபர்களும், மக்களைத் தேடி மருத்துவத்தின் கீழ் 18,70 லட்சம் பயனாளிகள் பரிசோதனை செய்யப்பட்டு 1.99 லட்சம் பயனாளிகள் கண்டறியப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது. நம்மை காக்கும் 48 இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் இதுவரை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளின் மூலம் 1298 நபர்கள் பயனடைந்துள்ளனர் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் கலெக்டர் வினீத், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) சக்திவேல் பாண்டியன், வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • வட்டார அளவிலான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • அமைச்சர் மு.பெ. சாமிநாதன் துவக்கி வைத்தார்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் வட்டார அளவிலான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது, இந்த முகாமை தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் துவக்கி வைத்தார்.

    முகாமில் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் அ. கணேசமூர்த்தி, திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் இல.பத்மநாபன்,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெகதீஷ் குமார் மற்றும் திமுக ஒன்றிய செயலாளர் மோளகவுண்டன்வலசு கே.சந்திரசேகரன், லக்கமாநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பி. பழனிச்சாமி உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள் தி.மு.க. நிர்வாகிகள், மருத்துவத்துறை அலுவலர்கள், வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.முகாம் ஏற்பாடுகளை வெள்ளகோவில் வட்டார மருத்துவ அலுவலர் டி.ராஜலட்சுமி தலைமையிலான மருத்துவக் குழுவினர் செய்திருந்தனர்.

    ×