search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சினிமா நடிகர்"

    • தனது ஒரே மகன் ஆத்திரத்தில் தெரியாமல் தவறு செய்து விட்டதாக கூறி அவரது தாயும் உறவினர்களும் சேர்ந்து கொலையை மறைத்துவிட்டனர்.
    • சங்கவி பள்ளிப் பருவம் முதல் ஒன்றாக பழகியதால் உன்னை நண்பனாக தான் கருதுகிறேன் என தெரிவித்தார்.

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், எல்.பி.நகரை சேர்ந்தவர் சிவக்குமார். அதே பகுதியை சேர்ந்தவர் சங்கவி. அவரது சகோதரர் பிருத்வி. இவர்கள் 3 பேரும் பள்ளி பருவம் முதல் ஒன்றாக படித்து வந்தனர்.

    இதனால் 3 பேரும் நட்பாக பழகி வந்தனர். பின்னர் பள்ளிப்படிப்பு முடிந்து கல்லூரியில் படித்த சிவகுமார் கடந்த 2018-ம் ஆண்டு பட்டப் படிப்பில் மாநில அளவில் முதலிடம் பிடித்து தேர்ச்சி பெற்றார்.

    பிறகு டாக்டருக்கு படிக்க விரும்பிய சிவகுமார் 2 ஆண்டுகள் பயிற்சி பெற்ற பிறகும் தேர்வில் போதிய மதிப்பெண் பெற முடியவில்லை. இதனால் ஹோமியோபதி டாக்டருக்கு படித்தார். சினிமா மீது ஆர்வம் கொண்ட சிவகுமார் தமிழ் படம் ஒன்றில் நடித்தார். அதன்பின் சினிமா வாய்ப்புகள் கிடைக்காததால் ஊர் சுற்றி வந்தார். இதனை அவரது தந்தை கண்டித்ததால் அவரை சுத்தியலால் அடித்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சில நாட்கள் சிகிச்சை பெற்று பின்னர் இறந்தார்.

    தனது ஒரே மகன் ஆத்திரத்தில் தெரியாமல் தவறு செய்து விட்டதாக கூறி அவரது தாயும் உறவினர்களும் சேர்ந்து கொலையை மறைத்து விட்டனர்.

    இந்நிலையில் எதிர்பாராத விதமாக சங்கவியை சந்தித்த சிவகுமார் அவரிடம் தனது காதலை வெளிப்படுத்தினார். அதற்கு சங்கவி பள்ளிப் பருவம் முதல் ஒன்றாக பழகியதால் உன்னை நண்பனாக தான் கருதுகிறேன் என தெரிவித்தார்.

    இருப்பினும் சிவகுமார் தன்னை காதலிக்கும்படி சங்கவியிடம் வற்புறுத்தி வந்தார். நேற்று முன்தினம் சங்கவி வீட்டிற்கு சென்ற சிவகுமார் மீண்டும் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தினார்.

    அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சிவக்குமார் தான் தயாராக எடுத்து வந்த கத்தியை எடுத்து சங்கவியை வெட்டினார்.

    இதனைக் கண்ட அவரது சகோதரர் பிருத்வி சிவகுமாரை தடுத்து நிறுத்தினார். அவரை சிவகுமார் வெட்டினார். படுகாயம் அடைந்த பிருத்வி ரத்த வெள்ளத்தில் துடித்துடுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதனைக் கண்ட சங்கவி கத்தி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து சிவகுமாரை பிடித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சிவகுமாரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • நடிகர் ராமராஜன் நடித்த நம்ம ஊரு ராசா, சுப்பிரமணிய புரம், திண்டுக்கல் சாரதி, வியூகம், மோசடி உள்ளிட்ட பல படங்களில் சிறிய வேடங்களில் நடித்து ள்ளேன்.
    • தற்போது வேலை இல்லாத காரணத்தால் பாட்டில் சேகரித்து அதனை விற்று பிழைப்பு நடத்தி வருகிறேன்.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள டாஸ்மாக் கடைகள் முன்பு பாட்டில் சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருபவர் அந்தோணி (வயது 40). இவர் அதே பகுதியில் பல மாதங்களாக இதே பணியில் ஈடுபட்டு வரு கிறார். பாட்டில் கிடைக்காத சமயங்களில் திரைப்பட பாடல்களை பாடியபடியும், ரஜினி ஸ்டைலில் தீக்குச்சியை தன் உடலில் பற்ற வைத்தும் அப்பகுதி மக்களை மெய்சிலிர்க்க வைத்தார்.

    இது குறித்து அவர் தெரிவிக்கையில், நடிகர் ராமராஜன் நடித்த நம்ம ஊரு ராசா, சுப்பிரமணிய புரம், திண்டுக்கல் சாரதி, வியூகம், மோசடி உள்ளிட்ட பல படங்களில் சிறிய வேடங்களில் நடித்து ள்ளேன்.

    பட வாய்ப்பு இல்லாத சமயங்களில் எனது சொந்த ஊருக்கு வந்து விடுவேன். தற்போது வேலை இல்லாத காரணத்தால் பாட்டில் சேகரித்து அதனை விற்று வருகிறேன். நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் பலரை தனக்கு தெரியும் என்றும், தன்னால் மிமிக்கிரி உள்ளிட்ட பல திறமைகளை செய்து காட்ட முடியும் என கூறினார்.

    குறிப்பாக ரஜினிகாந்த் படத்தில் வரும் பல்வேறு வசனங்களை பேசிய அந்தோணி அவரைப் போலவே தீக்குச்சியை தனது உடலில் பற்ற வைத்து எரிய வைத்தார். தனக்கு வருவாய் கிடைத்தால் அதில் பாதியை இல்லாதவர்களுக்கு உதவுவேன் என்று தெரிவித்தார்.

    தற்போது கிடக்கும் வருவாய் போதுமானதாக இருந்தபோதிலும் சினிமாவில் நடித்து பெயர் ெபற வேண்டும் என்பதே தனது ஆசை என்றார்.

    • மகிழ் வனம் 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகின்றனர்.
    • நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.

     பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையம் ஊராட்சி சங்கோதி பாளையத்தில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் இளைஞர் நற்பணி மன்றத்தினர் மகிழ் வனம் என்ற பெயரில் சுமார் 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மகிழ் வனத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. கோடங்கிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் காவி. பழனிச்சாமி தலைமை வகித்தார். லிட்ரசி பள்ளி தாளாளர் ராமமூர்த்தி, தாய்மண் அறக்கட்டளை பாலசுப்பிரமணியம், விநாயகர் கோயில் அறக்கட்டளை தலைவர் சின்னசாமி, மகிழ் வனம் செயலாளர் பாலசுப்பிரமணியம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சினிமா நடிகர் தாமு மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில், மாணிக்கம், பூபதி, ராமகிருஷ்ணன், மற்றும் லிட்ரசி பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×