என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இருக்கன்குடி"
- பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.
- இதில் ரூ.27 லட்சத்து 76 ஆயிரம் 54 கிராம் தங்கம் இருந்தது.
சாத்தூர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடியில் மாரியம் மன் கோவில் சக்தி ஸ்தலங்க ளில் பிரசித்தி பெற்ற கோவி லாகும். இங்கு ஒவ்வொரு மாதமும் உண்டியல் திறக்கப் பட்டு எண்ணப்படுவது வழக்கம்.
அதன்படி இம்மாதமும் நேற்று கோவிலில் உள்ள 11 நிரந்தர உண்டியல் மற்றும் கோசாலை உண்டி யல் 1, அன்னதான உண்டியல் 1 என மொத்தம் 13 உண்டி யல்கள் திறந்து எண்ணப் பட்டன.
திருப்பரங்குன்றம் சுப்பிர மணிய சுவாமி கோவில் துணை ஆணையர் சுரேஷ், இருக்கன்குடி கோவில் உதவி ஆணையாளர் வளர் மதி (பொறுப்பு) ஆகியோர் முன்னிலையில் கோவில் பரம்பரை அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்தி பூசாரி ஆகியோர் தலைமை யில் காணிக்கை உண்டியல் திறக்கப்பட்டு பொருட்கள் மற்றும் பணம் எண்ணப்பட் டன.
ரூ.27 லட்சம் காணிக்கை
கோவில் மண்டபத்தில் வைத்து உண்டியல் எண் ணப்பட்டதில் பக்தர்கள் காணிக்கையாக நிரந்தர உண்டியல் மூலம் ரூ.25 லட்சத்து 81 ஆயிரத்து 969-ம் கோசோலை உண்டியல் மூலம் ரூ.41 ஆயிரத்து 810-ம், அன்னதான உண்டியல் மூலம் ரூ.1 லட்சத்து 52 ஆயிரத்து 614 என மொத்தம் ரூ.27 லட்சத்து 76 ஆயிரத்து 393 ரொக்கமும், 54 கிராம் தங்கமும், 255 கிராம் வெள்ளி இனங்களும் கிடைக்கப்பெற்றது.
மேலும் காணிக்கை எண்ணும் பணியில் ராஜபா ளையம் சரக ஆய்வாளர், மகளிர் சுய உதவிக் குழுவினர், பக்தர் சேவா சங்க உறுப்பினர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
- இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் இன்று பக்தர்கள் குவிந்தனர்.
- அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
சாத்தார்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தென் தமிழகத்தில் பிரசித்திபெற்ற கோவிலா கும். இங்கு ஆண்டு முழு வதும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
அதிகாலை 4 மணி முதல் அம்மனுக்கு பால், பன்னீர், திருமஞ்சனம், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், போன்ற 16 வகையான சிறப்பு அபிஷே கம் நடந்தது. கோடை விடுமுறையின் காரணமாக பக்தர்கள் கோவிலில் நேர்த்திகடன் செலுத்தி அம்மனுக்கு தீச்சட்டி, அங்க பிரதட்சணம், பால்குடம், ஆயிரம் கண் பானை, கரும்பு தொட்டி, மாவிளக்கு போன்ற நேர்த்திக்கடனை செலுத்தினர்,
தென் மாவட்டங்களான தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
சங்கரன்கோவில், திருவேங்கடம், தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில் பட்டி போன்ற பல ஊர்க ளில் இருந்து திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு கழிப்பறை வசதி, குடிநீர் தொட்டி, மருத்துவ வசதி, ஆகிய வற்றை கோவில் நிர்வாகம் சார்பில் செயல் அலுவலர் கருணாகரன், பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பி னர்கள், கோவில் பணியா ளர்கள் செய்திருந்தனர்.
- அம்மனை தரிசித்தால் நிச்சயம் அருள் புரிகிறாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
- ஆடி கடைசி வெள்ளியன்று பெருந்திருவிழா நடைபெறும்
இந்தியாவிலேயே தொன்மை வாய்ந்த கோயில்கள் மற்றும் அவற்றின் கலாச்சாரச் சிறப்புகளுக்குப் பெயர்பெற்றது தமிழகம் என்றால் மிகையில்லை. அந்த வகையில் கிராமங்களும், அவற்றில் கடைபிடிக்கப்படும் கலாச்சாரங்களும் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இன்றளவும் தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இயற்கையோடு ஒருங்கிணைந்த ஏராளமான கிராமதேவதைகள் மற்றும் ஒவ்வொரு ஊருக்கும் உரிய சிறப்புப் பெற்ற அம்மன் கோயில்கள் அந்தந்தப் பகுதிகளுக்கே உரிய சிறப்புகளுடன் திகழ்கின்றன. அதுபோன்று, இயற்கை சூழ்நிலையில் அமைந்த ஒரு மாரியம்மன் கோயில் இருக்கன்குடி என்ற சிற்றூரில் அமைந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி என்ற இடத்தில் உள்ள இக்கோயில், சிறியதாக இருந்தாலும் பெரும் புகழ் பெற்று விளங்கி வருகிறது.
திருச்சி, மதுரை, விருதுநகர் வழியாக சாத்தூரிலிருந்து நேர் கிழக்கே விளாத்திகுளம் வழியே திருச்செந்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இருக்கன்குடி மாரியம்மன் கோயில்.
தல வரலாறு :
சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் இந்தப்பகுதியில் சாணம் சேகரிப்பதற்காக வந்த ஒரு சிறுமி, தற்போது அம்மன் இருக்கும் இடத்தில் தான் கொண்டுவந்த சாணக் கூடையை வைத்தாள். மீண்டும் அந்தக்கூடையை அவளால் எடுக்க முடியாமல் திண்டாடினாள். கூட்டம் கூடியது. அப்போது அந்தச் சிறுமியின் மீது அம்பாள் அருள் வந்து, தனது திருமேனி சிலை இங்கே புதைந்து கிடக்கின்றது, அதை எடுத்து இந்த இடத்திலேயே நிலைநாட்டி வழிபடுங்கள் என்று வாக்கருளினாள்.
அங்ஙனமே பூசாரிகள் பூமியைத் தோண்டிப் பார்த்தபோது அங்கு தற்போதுள்ள அம்மன் திருவுருவத்தைக் கண்டெடுத்தனர். அச்சிலையை ஊருக்குள் உள்ள கோயிலில் வைத்து வழிபட்டார்கள்.
மூன்று தினங்களில் மீண்டும் அச்சிறுமியின் மீது அருள் வந்து, தான் வீற்றிருக்கும் இடத்தில் சேவல் கூவக்கூடாது என்றும், தூய்மையைக் கடைபிடிக்கும் பொருட்டு தனது திருஉருவத்தை பூமியைத் தோண்டி முன்பு எடுத்த இடத்திலேயே மீண்டும் கொண்டு போய் வைத்து வழிபடுங்கள் என்று கூறினாள். இதைத்தொடர்ந்து அம்மனை மீண்டும் ஊருக்குள் இருந்து தற்போது திருக்கோயில் அமைந்து உள்ள இடத்தில் பிரதிட்டை செய்தனர். அதுமுதல் தொடர்ந்து வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.
மூன்று நாட்கள் ஊருக்குள் இருந்து விட்டு திருக்கோயில் உள்ள இடத்திற்கு மீண்டும் அம்மன் கொண்டுவரப்பட்டதன் ஞாபகார்த்தமாக அம்மனின் உற்சவர் சிலை உருவாக்கப்பட்டு, ஒவ்வொரு ஆடிமாதமும் கடைசி வெள்ளியன்று அந்த சிலை ஊரில் உள்ள கோயிலில் இருந்து எழுந்தருளி, மூலவர் உள்ள இடத்திற்கு வந்து தங்கவைக்கப்படுகிறது. மறுநாள் இங்கிருந்து புறப்பட்டு ஊருக்குள் உள்ள உற்சவர் கோயிலை அடைகிறது. இருக்கன்குடி கோயிலுக்கு தமிழகமெங்கும் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் வந்து அம்மனை தரிசித்து அருள் பெற்று செல்கின்றனர்.
தல அமைப்பு :
கருவறையின் நுழைவாசலின் உயரம் குறைவாக இருப்பதால் குனிந்து உள்ளே போக வேண்டியதிருக்கிறது. அம்மன் பொன் ஆபரணங்கள் அணிந்து தங்க மேனி உடையவளாக மின்னுகிறாள். அம்மனின் கருணை விழிகளைக் கண்டாலே மெய் சிலிர்க்கிறது.
பிரகாரத்தைச் சுற்றி காத்தவராயன், பைரவன், வீரபத்திரர், பேச்சியம்மன், முப்பிடாரி அம்மன் ஆகிய சிறிய சன்னதிகள் இருக்கின்றன. இங்கு வந்து பிரார்த்தனை செய்யும் பக்தர்களுக்கு அவர்களின் கோரிக்கைகள் அனவீத்தும் நிறைவேறுகின்றன.
தலச் சிறப்பு :
குறை நிவர்த்தி வேண்டி திருக்கோயிலில் தங்கி வயனம் காக்கும் பார்வையேற்றோர்க்கு பார்வையளித்தும், தீராத நோய்களைத் தீர்த்து வைத்தும், குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை வரம் அளித்தும், திருமண பாக்கியம் வேண்டியோருக்கு மாங்கல்ய வரம் அளித்தும் அருளாட்சி செய்யும் அம்மனை தரிசித்தால் நிச்சயம் அருள் புரிகிறாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தீர்த்தங்கள் :
வைப்பாறு, அர்ச்சுனா ஆறு
திருவிழாக்கள் :
இடுக்கண் களையும் இருக்கன்குடியாளுக்கு ஆடி கடைசி வெள்ளியன்று நடைபெறும் பெருந்திருவிழாவை முன்னிட்டு, அதற்கு முந்தைய வெள்ளியன்று கொடியேற்றம் நடைபெற்று, ஆடி கடைசி வெள்ளி அன்று உற்சவர் கோயிலில் இருந்து அன்னையின் திருமேனி இடப வாகனத்தில் எழுந்தருளி, அர்ச்சுனா நதியில் உலாவி திருக்கோயிலில் எழுந்தருள்வாள். இந்த விழாவில் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது, மாநிலம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் இருக்கன்குடியில் கூடி அம்மனை தரிசித்து அருள் பெறுகிறார்கள்.
தை கடைசி வெள்ளியிலும், பங்குனி கடைசி வெள்ளியிலும் பெருந்திரளான மக்கள் அம்மன் அருள் பெறக் கூடுவது கண்கொள்ளாக் காட்சி ஆகும். விழாக்காலங்களில் அம்மன் அருள் பெற அர்ச்சுனா நதியிலும், வைப்பாறு நதியிலும் கூடும் மக்கள் வெள்ளம் வண்டிகளிலும் பிற வாகனங்களிலும் வந்து நேர்த்திக்கடனைச் செலுத்துவது மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்ச்சியாகும்.
அம்மனுக்கு அக்கினிச்சட்டியும், ஆயிரங்கண்பானையும், உருவம் எடுத்தல், போன்ற நேர்த்திக் கடன்களை செலுத்தி இருக்கன்குடி அம்மனின் அருளைப் பெற்று, பக்தர்கள் வாயாற வேண்டிச் சென்று வாழ்க்கையில் வளம் பெறுவது இத்திருக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.
- இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ரூ.81 லட்சம் உண்டியல் வசூலானது.
- உண்டியல் என்னும் பணியில் சாத்தூர், துலுக்கப்பட்டி.ஆகிய ஊர்களை சேர்ந்த ஓம்சக்தி பக்தர் குழு மற்றும் மதுரை ஐயப்ப சேவா சங்கம், கோயில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
சாத்தூர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு மாதம் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம். அதன்படி 10 நிரந்தர உண்டியல், 4 தற்காலிக உண்டியல்கள் உள்பட 14 உண்டியல்கள் திறக்கப்பட்டது. அதில் ரூ. 81 லட்சத்து ஆயிரத்து 488-ம். தங்கம்- 309 கிராம்.வெள்ளி- 1014 கிராம் கிடைத்தது. உண்டியல் என்னும் பணியில் சாத்தூர், துலுக்கப்பட்டி.ஆகிய ஊர்களை சேர்ந்த ஓம்சக்தி பக்தர் குழு மற்றும் மதுரை ஐயப்ப சேவா சங்கம், கோயில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இந்து அறநிலைய துறை விருதுநகர் கோவில்களின் உதவி ஆணையர் வளர்மதி, இருக்கன்குடி கோவில் ஆணையர் கருணாகரன், தலைமையில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி, சவுந்திர ராஜன், ஹரிராம், மகாராஜன், நவரத்தினம், மற்றும் அறங்காவலர் குழுவினர் ஆய்வாளர்கள், உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
- இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.80 லட்சத்து 79 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது.
- தங்கம் 176 கிராமும், வௌ்ளி 822 கிராமும் கிடைத்தது.
சாத்தூர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது.இங்கு ஆடி மாதத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
இந்த வருடம் ஆடி மாத திருவிழா விமரிசையாக நடந்தது. விழா நேற்று முடிந்த நிலையில் ேகாவிலில் வைக்கப்பட்டிருந்த 4 தற்காலிக உண்டியல், 10 நிரந்தர உண்டியல், ஒரு கால்நடை உண்டியல், ஒரு அன்னதானம் உண்டியல் ஆகியவை கோவில் மண்டபத்தில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன.
பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எண்ணப்பட்டது. இதில் ரொக்கமாக ரூ.80 லட்சது 79 ஆயிரத்தி 888 பக்தர்களின் காணிக்கையாக கிடைத்தது. தங்கம் 176 கிராமும், வௌ்ளி 822 கிராமும் கிடைத்தது.
இந்த பணியில் சாத்தூர், துலுக்கப்பட்டி ஆகிய ஊர்களை சேர்ந்த ஓம்சக்தி பக்தர் குழு மற்றும் தன்னார்வலர்கள் கோவில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர், இந்து அறநிலைய துறை கோவில்களின் உதவி ஆணையர் வளர்மதி, இருக்கன்குடி கோவில் ஆணையர் கருணாகரன், தலைமையில் கோவில் அறங்காவலர் குழு தலை வர் ராமமூர்த்தி பூசாரி மற்றும் அறங்காவலர் குழு வினர், ஆய்வாளர்கள், உள்ளிட்டோர் பார்வை யிட்டனர்.
- வேலை வாங்கி தருவதாக ரூ. 3 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
- ராமர் பூசாரி மீது இருக்கன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
விருதுநகர்
இருக்கன்குடியை சேர்ந்தவர் குருசாமி. இவரது மகளுக்கு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வாங்கி தருவதாக அதே பகுதியை சேர்ந்த ராமர் பூசாரி என்பவர் கூறியுள்ளார். இதனை நம்பி குருசாமி ரூ.3 லட்சம் கொடுத்ததாக தெரிகிறது.
பணத்தை பெற்றுக்கொண்ட அவர் வேலையும் வாங்கி கொடுக்கவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. இதுகுறித்து சாத்தூர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் ராமர் பூசாரி மீது இருக்கன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்