என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கோவை செல்வராஜ்"
- கோவை செல்வராஜ் அவர்கள் திடீரென்று மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு போதிர்ச்சிக்குள்ளானேன்.
- மகனின் திருமணம் நடந்தேறி வந்து கொண்டிருந்தபோதே. அவருக்குத் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று உயிரிழந்தார்.
இவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திராவிட முன்னேற்றக் கழக செய்தித் தொடர்பு துணைச் செயலாளருமான கோவை செல்வராஜ் அவர்கள் திடீரென்று மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு போதிர்ச்சிக்குள்ளானேன்.
அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு. கழகத்தின் கொள்கைகளை,
கருத்துகளை விவாதங்களிலும், மேடைப் பேச்சுகளிலும் ஆணித்தரமாக எடுத்து வைத்தவர்.
சமீபத்தில் நான் கோவை சென்றிருந்தபோது, அங்கு அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஆர்வத்துடன் பங்கேற்ற அவர், நிகழ்ச்சி நிறைவு பெற்றதும் என்னைச் சந்தித்து, "நிகழ்ச்சி மிகச் சிறப்பாக அமைந்திருந்தது" என்று நெஞ்சாரப் பாராட்டிவிட்டு, "மகனின் திருமணத்தை வைத்திருக்கிறேன். திருமணம் முடிந்து மணமக்களுடன் வந்து தங்களிடம் சென்னையில் வாழ்த்து பெறுகிறேன்" என்றார்.
ஆனால் இன்று மகனின் திருமணம் நடந்தேறி வந்து கொண்டிருந்தபோதே. அவருக்குத் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார் என்ற செய்தி, என்னை ஆழ்ந்த வேதனையிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது.
கோவை செல்வராஜ் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கழகத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும். ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே செல்வராஜின் உயிர் பிரந்துள்ளது.
- நாளை காலை அவரது உடல் கோவை கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று உயிரிழந்துள்ளார்.
திருப்பதியில் தனது மகனின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்த அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டது.
ஆனால், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே செல்வராஜின் உயிர் பிரிந்துள்ளது.
நாளை காலை அவரது உடல் கோவை கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அதிமுகவில் இருந்தபோது எம்.எல்.ஏ.வாக இருந்த செல்வராஜ் பின்னர் திமுகவில் இணைந்தார்.
இதைதொடர்ந்து, கோவை செல்வராஜ் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- காங்கிரசை பொறுத்தவரை கோஷ்டி பூசலுக்கும் பஞ்சமில்லை, பதவி போட்டிக்கும் பஞ்சமில்லை.
- அதே போன்றதொரு சூழ்நிலையில்தான் கோவை செல்வராஜ் காங்கிரசுக்கு குட்பை சொல்லிவிட்டு அ.தி.மு.க.வில் இணைந்தார்.
அரசியலில் பல சுவாரசியங்கள் அடிக்கடி அரங்கேரும். அந்த வகையில் முன்னாள் எம்.எல்.ஏ. கோவை செல்வராஜ் தி.மு.க.வில் இணைந்ததோடு மக்களிடம் பாவ மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறியிருக்கிறார். இரண்டு முறை காங்கிரசில் எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார்.
காங்கிரசை பொறுத்தவரை கோஷ்டி பூசலுக்கும் பஞ்சமில்லை, பதவி போட்டிக்கும் பஞ்சமில்லை. அதே போன்றதொரு சூழ்நிலையில்தான் கோவை செல்வராஜ் காங்கிரசுக்கு குட்பை சொல்லிவிட்டு அ.தி.மு.க.வில் இணைந்தார்.
அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் அணியாக இயங்கத்தொடங்கியதும் ஓ. பன்னீர்செல்வம் தலைமையை ஏற்று செயல்பட்டு வந்தார். இப்போது தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார். இணைத்தது மட்டுமல்ல எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்தில் தமிழகம் சீரழிந்து விட்டதாகவும், அப்போது உடனிருந்த பாவத்துக்காக பாவ மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் சொல்லி இருக்கிறார். இது எப்படி இருக்கு?
- திமுக அரசு சிறப்பாக செயல்படுவதாக பாராட்டு
- அதிமுக கம்பெனியாக மாறி விட்டதாக பேட்டி
அ.தி.மு.க செய்தி தொடர்பாளராக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ.கோவை செல்வராஜ், ஒபிஎஸ், இபிஎஸ் இடையேயான மோதலை அடுத்து ஓ.பன்னீர்செல்வம் பக்கம் சென்றார். இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து அ.தி.மு.க.வில் இருந்து விலகி விட்டதாக அவர் அறிவித்தார். திராவிட பாரம்பரியமுள்ள கட்சியிலேயே சேருவேன் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்த கோவை செல்வராஜ், திமுகவில் இணைந்தார். அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, செந்தில் பாலாஜி ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக அரசு சிறப்பாக செயல்படுவதாகவும், இலவச பேருந்து பயண சலுகை, கல்லூரி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவி உள்ளிட்ட திட்டங்கள் பெண்களிடையே வரவேற்பை பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். மின்சார தட்டுப்பாடு இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதிமுக தற்போது கம்பெனி போல் மாறி விட்டதாகவும், திமுக அரசை விமர்சிக்க அதிமுகவினருக்கு தகுதி இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
- அ.தி.மு.க. அழிவதற்கு முக்கிய காரணமே வைத்திலிங்கம் தான்.
- ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் கோவை மாவட்டத்தை 4 ஆக பிரித்து புதிய மாவட்ட செயலாளர்களும் அறிவிக்கப்பட்டனர்.
கோவை:
அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் இடையே மோதல் ஏற்பட்டு இரு பிரிவாக செயல்பட்டு வருகின்றனர்.
இதில் அ.தி.மு.க செய்தி தொடர்பாளராக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ.கோவை செல்வராஜ் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் சென்றார்.
இதையடுத்து அவருக்கு கோவை மாநகர் மாவட்ட செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. கடந்த சில நாட்களாகவே பன்னீர்செல்வம் அணி சார்பில் நடக்கும் எந்த ஒரு கூட்டத்திலும் கோவை செல்வராஜ் பங்கேற்காமல் இருந்து வந்தார். இதனால் அவர் கட்சியில் இருந்து விலகி விட்டதாகவும் தகவல் பரவி வந்தது.
இதற்கிடையே ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் கோவை மாவட்டத்தை 4 ஆக பிரித்து புதிய மாவட்ட செயலாளர்களும் அறிவிக்கப்பட்டனர். இதில் மாநகர் மாவட்ட செயலாளராக இருந்த கோவை செல்வராஜ் பதவியும் பறிக்கப்பட்டு வேறு ஒருவருக்கு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் கோவை செல்வராஜ் தான் அ.தி.மு.க.வில் இருந்து விலகி விட்டதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மாலைமலர் நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நான் 1972-ல் அ.தி.மு.க.வில் இணைந்து கட்சிக்காக கடுமையாக உழைத்து வந்தேன். கோவையில் அரங்கநாதன் என்பவர் எம்.எல்.ஏ. தேர்தலில் நின்றபோது அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்தேன். அப்போது எதிர்கட்சிகள் என்னை தாக்கி மண்டையை உடைத்தனர்.
இதையடுத்து அரங்கநாதன் என்னை எம்.ஜி.ஆரை சந்திக்க அழைத்து சென்றார். அப்போது எனக்கு 16 வயது. முதல் முறையாக எம்.ஜி.ஆரை சந்தித்ததும் மகிழ்ச்சி அடைந்தேன். 1984-ம் ஆண்டு எம்.எல்.ஏ. சீட் கேட்டேன். ஆனால் அங்கு மறுக்கப்பட்டது. காங்கிரசில் சேர்ந்து எம்.எல்.ஏ. ஆனேன். அப்போது ஒருமுறை ஜெயலலிதா என்னை அழைத்து பேசினார். இதனை தொடர்ந்து நான் மீண்டும் அ.தி.மு.கவில் இணைந்தேன். தொடர்ந்து கட்சிக்காக பணியாற்றி வந்தேன்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க எடப்பாடி பழனிசாமி தலைமயில் ஒரு அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும் செயல்பட்டது. இதில் நான் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் இருந்தேன். இதுவரை அவருக்கு விசுவாசமாகவே இருந்து வந்தேன்.
இந்தநிலையில் தான் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகச்சாமி ஆணைய விசாரணை அறிக்கை வெளியானது. அந்த அறிக்கையில், வெளிநாட்டிற்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தால் ஜெயலலிதா உயிர் பிழைத்திருப்பார் என்ற தகவல் தெரியவந்தது. இதை கேட்டதும் தான் எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.
ஏனென்றால் அப்போது அ.தி.மு.க.தான் ஆட்சியில் இருந்தது. முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் நினைத்திருந்தால் ஜெயலலிதாவை காப்பாற்றி இருக்க முடியும். ஆனால் அவர்கள் அனைவரும் ஜெயலலிதா உயிரை விட தங்கள் பதவியே முக்கியம் என நினைத்து செயல்பட்டுள்ளனர். இப்படிபட்டவர்களுடன் இதுவரை நான் இணைந்து பணியாற்றியதை நினைத்து வேதனை அடைந்தேன்.
எனவே இவர்களோடு இனியும் பணியாற்ற விரும்பவில்லை. அதன் காரணமாகவே ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து மட்டுமில்லை. அ.தி.மு.க.வில் இருந்தே விலகுகிறேன்.
அ.தி.மு.க. அழிவதற்கு முக்கிய காரணமே வைத்திலிங்கம் தான். ஆனால் ஓ.பன்னீர்செல்வமும், வைத்திலிங்கமும் சேர்ந்து தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு பதவிகளை கொடுத்து வருகிறார்கள். ஓ.பி.எஸ் அணியில் இருந்து அவர்கள் என்னை நீக்கவில்லை. நான் கடந்த 2 மாதங்களாகவே எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் ஒதுங்கியே இருந்தேன். நேற்று என்னிடம் கோவை மாநகர் மாவட்டத்திற்கு வேறு பொறுப்பாளரை நியமிக்கட்டுமா என கேட்டனர். அதற்கு நான், தாராளமாக நியமித்து கொள்ளுங்கள். எனக்கும், உங்களுக்கும் தொடர்பு இல்லை என தெரிவித்து விட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அ.தி.மு.க.வில் இருந்து விலகி விட்டதால் தி.மு.க.வில் இணைவீர்களா என்ற கேள்விக்கு, நான் எந்த ஒரு மதவாத கட்சியிலும், தேசிய கட்சியிலும் இணைய மாட்டேன். திராவிட பாரம்பரியத்தில் இருந்தும் விலக மாட்டேன். அப்படியே சேர்ந்தாலும் திராவிட பாரம்பரியமுள்ள கட்சியிலேயே சேருவேன். எனக்கு தமிழகம் முழுவதும் ஏராளமான ஆதரவாளர்கள் உள்ளனர். அவர்களுடன் ஆலோசித்து விரைவில் நல்ல முடிவை தெரிவிப்பேன் என்றார்.
- முனுசாமி செய்தியாளர் சந்திப்பில் ஓ.பி.எஸ்.சை தவறாக கொச்சைப்படுத்தி பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
- முனுசாமிக்கு கட்சியில் 2-ம் தலைவராக வாய்ப்பு வாங்கி கொடுத்தவர் ஓ.பி.எஸ்.
கோவை
அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியின் கோவை மாநகர், மாவட்ட செயலாளர் கோவை செல்வராஜ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
முனுசாமி செய்தியாளர் சந்திப்பில் ஓ.பி.எஸ்.சை தவறாக கொச்சைப்படுத்தி பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.அம்மாவால் விரட்டி அடிக்கப் பட்டவர் முனுசாமி. முனுசாமிக்கு கட்சியில் 2-ம் தலைவராக வாய்ப்பு வாங்கி கொடுத்தவர் ஓ.பி.எஸ்.
ஓ. பன்னீர்செல்வம் அ.தி.மு.க வில் உழைக்கவில்லை என்று சொல்கிறார்.ஆனால் ஜெயலலிதா, ஓபிஎஸ் கட்சிக்கு கிடைத்தது தான் செய்த பாக்கியம் என்றார். விசுவாசம் மிக்க தொண்டன் என்ற பெயரை ஜெயலலிதாவிடம் வாங்கியவர் ஓ. பன்னீர்செல்வம். அவரை பற்றி பேச யாருக்கும் தகுதி யோக்கியதை கிடையாது.
எடப்பாடி பழனிசாமி அனைத்தையும் நிறுத்திக் கொள்ள வேண்டும் இல்லை என்றால் அவரது ஆட்சியில் நடந்த ஊழல் பட்டியலை வெளியிடுவேன்.
கட்சி அலுவலகத்தில் விலை உயர்ந்த பொருட்கள் திருட்டுப்போனதாக புகார் தெரிவித்துள்ளார்கள். ஆனால் கட்சி அலுவலகத்தில் விலை உயர்ந்த பொருட்கள் எதுவும் இல்லை. கடந்த தேர்தலில் கட்சியின் தோல்விக்கு காரணம் எடப்பாடி பழனிச்சாமி.
சசிகலா தற்போது கட்சியின் உறுப்பினர். எப்போதும் போல அவர் இருப்பார். மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டிய அவசியம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்