search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழுக்குமரம் ஏறிய இளைஞர்கள்"

    • கிருஷ்ணஜெயந்தி விழாவையையொட்டி 30 அடி உயர வழுக்குமரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இளைஞர்கள் போட்டி போட்டுக்கொண்டு வழுக்குமரம் ஏறினர்.

    தேவதானப்பட்டி:

    தேவதானப்பட்டி பாலகிருஷ்ணசாமி கோவில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவிலாகும்.

    இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன் படி இந்த ஆண்டு 3 நாட்கள் திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நிறைவு நாள் நிகழ்ச்சியாக வழுக்குமரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக கோவில் முன்பு 30 அடி உயரம் கொண்ட தேக்குமரம் ஊன்றப்பட்டது.

    அதன்பின் இளைஞர்கள் போட்டி போட்டுக்கொண்டு வழுக்குமரம் ஏற முயன்றனர். அவர்கள் மீது மஞ்சள் நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் கம்பத்தின் உச்சியில் இருந்த பரிசை இளைஞர்கள் எடுத்து வந்தபோது பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இந்த திருவிழாவை காண ஏராளமான பக்தர்கள் கூடி இருந்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி அருணாசேகர் தலைமையில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

    • தேவதானப்பட்டி மெயின் ரோட்டில் பாலகிருஷ்ணசாமி கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தி உற்சவ திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.
    • விழாவின் முக்கிய நிகழ்வாக இரவு உறியடி மற்றும் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தேவதானப்பட்டி:

    தேவதானப்பட்டி மெயின் ரோட்டில் பாலகிருஷ்ணசாமி கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தி உற்சவ திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.

    அதன்படி இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்ச்சியாக இளைஞர்கள் வழுக்குமரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    3-ம் நாள் முடிவில் டெய்லர் சங்கம் சார்பில் பூப் பல்லக்கில் சாமி ஊர்வலம் வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக இரவு உறியடி மற்றும் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுழற்சி முறையில் நடைபெற்ற வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியில் மேட்டு வளைவு நாட்ட கள்ளர் இளைஞர்கள் ஏறினர்.

    சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் இறுதியாக மரத்தின் உச்சியில் வைக்கப்பட்டுள்ள திருக்கோயில் பிரசாத பொட்டலத்தை இளைஞர்கள் எடுத்தனர். இந்த நிகழ்ச்சியை ஏராளமான மக்கள் பார்வையிட்டனர்.

    திருவிழாவிற்கு தேவதானப்பட்டி காவல்துறை ஆய்வாளர் சங்கர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா நிறைவாக திருக்கோயில் சார்பில் திருக்கோயில் நிர்வாகிக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டு விழா நிறைவு செய்யப்பட்டது. திருவிழா ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகி அருணாசேகர் மற்றும் விழாக்கமிட்டியினர் செய்தனர்.

    ×