என் மலர்
நீங்கள் தேடியது "சரி செய்யப்பட்டது"
- அந்தியூர் அடுத்த செம்பளிச்சம்பாளையம் காலனி பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புதியதாக கழிவுநீர் வடிகால் அமைக்கப்பட்டது.
- இதனால் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் அவதிப்பட்டு வந்தனர்.
அந்தியூர்:
அந்தியூர் அடுத்த செம்பளிச்சம்பாளையம் காலனி பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புதியதாக கழிவுநீர் வடிகால் அமைக்கப்பட்டது.
இந்தப் பணி 2 மாதங்களாக நடந்து முடிந்தும் கழிவுநீர் வெளியே செல்ல முடியாத நிலையில் அப்படியே தேங்கி கிடந்தது. அந்த கழிவு நீர் சாலையில் சென்று துர் நாற்றம் வீசியது. இதனால் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் அவதிப்பட்டு வந்தனர்.
இதனால் அந்த பகுதி பொதுமக்களும் மிகுந்த வேதனையோடு இருந்து வந்தனர்.
இந்த நிலையில் மாலை மலரில் இது தொடர்பான செய்தி வெளியிடப்பட்டது. இதையொட்டி ஒட்ட பாளையம் ஊராட்சி தலைவர் பெருமாள்சாமி, ஊராட்சி செயலாளர் (கிளார்க்) குருசாமி வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் அதை சரி செய்ய நட வடிக்கை எடுத்தனர்.
இதை தொடர்ந்து பணியாளர்கள் மூலம் அந்த இடத்தில் மண் கொண்டு வரப்பட்டு சாலையில் நீர் தேங்கிய பகுதிகளில் கொட்டப்பட்டு ஜே.சி.பி. எந்திரத்தின் மூலம் சமன்படுத்தப்பட்டு சரி செய்யப்பட்டது.