search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுமி டானியா"

    • சிறுமி வீடு திரும்பினாலும் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்தார்.
    • பள்ளி செல்ல தொடங்கிய சிறுமி டான்யாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

    திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வீராபுரம் ஶ்ரீ வாரிநகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் - சௌபாக்யா தம்பதி. இவர்களின் மூத்த மகளான ஒன்பது வயதான சிறுமி டான்யா அரிய வகை முகச்சிதைவு நோயால் அவதிப்பட்டு வந்தது குறித்து செய்திகள் வெளியாகின.

    அதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், சிறுமி டான்யாவின் வீட்டுக்கு சென்று பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதையடுத்து சிறுமிக்கு முக அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சிறுமியை சந்தித்து நலம் விசாரித்தார்.

    இதனை தொடர்ந்து சிறுமி வீடு திரும்பினாலும் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்தார். இதில் சிறுமியின் முகம் இயல்பு நிலைக்கு திரும்ப மேலும் சில அறுவை சிகிச்சைகள் நடைபெற்றது. இந்த அறுவை சிகிச்சைகளும் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து சிறுமி டானியா பள்ளி செல்லத்தொடங்கினார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

    இந்த நிலையில், முக சீரமைப்பு அறுவை சிகிச்சை பெற்று பயனடைந்த சிறுமி டான்யாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வீடு வழங்கினார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் முறையான சிகிச்சை வழங்கப்பட்டு தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள சிறுமி டான்யாவுக்கு வீடு வழங்கப்பட்டுள்ளது. 

    • மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம், சிறுமி டானியாவை தனியார் பள்ளியில் சேர்த்துள்ளார்.
    • சிறுமி டானியா பள்ளியில் சேர்ந்தது குறித்து அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    சென்னை:

    ஆவடி ஸ்ரீவாரி நகரைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் – சௌபாக்கியம் தம்பதியரின் 9 வயது மகள் டானியா அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டார். முகச்சிதைவு நோய்க்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உதவிக்கரம் நீட்டுமாறு, சிறுமி டானியா கோரிக்கை விடுத்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறுமிக்கு உடனடியாக சிகிச்சையளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.

    இதையடுத்து சிறுமி டானியாவுக்கு பூந்தமல்லி அருகே தண்டலம் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 2 கட்டங்களாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து வீடு திரும்பிய சிறுமி டானியவை, அவரது வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்த முதலமைச்சர் நலம் விசாரித்து படிக்கிறாயா என கேட்டதற்கு படிப்பதாக மகிழ்ச்சியுடன் சிறுமி தெரிவித்து இருந்தார். ஏற்கனவே சிறுமி டானியாவின் கல்வி படிப்பு மற்றும் அதற்கான செலவினை ஏற்று கொள்வதாக திமுக பிரமுகர் ஒருவர் உறுதி அளித்திருந்தார்.


    இந்நிலையில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம், சிறுமி டானியாவை தனியார் பள்ளியில் சேர்த்துள்ளார். சிறுமி டானியா பள்ளியில் சேர்ந்தது குறித்து அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில்,

    அன்புள்ள டானியாவுக்கு,

    பள்ளிக்குச் செல்லத் தொடங்கிவிட்டாய் என்றறிந்தேன். மகிழ்ச்சி!

    ஆசிரியர்களோடு அன்பான நண்பர்களும் உனது உயர்வுக்கு உறுதுணையாக அமைய வாழ்த்துகிறேன்! என கூறியுள்ளார்.

    • சிறுமி டானியாவுக்கு கடந்த 23ம் தேதி முக சீரமைப்பு அறுவை சிகிச்சை நடைபெற்றது.
    • அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள சிறுமி டானியாவை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார்.

    சென்னை:

    ஆவடியை அடுத்த மோரை, வீராபுரம் ஸ்ரீவாரி நகரைச் சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ். இவரது மனைவி சவுபாக்யா. இவர்களது 9 வயது மகள் டானியா. 4-ம் வகுப்பு படித்து வருகிறார். எல்லா குழந்தைகளும் போல டானியாவும் 3 வயது வரை இயல்பாக வளர்ந்தார்.

    இதற்கிடையே, 3½ வயதுக்கு பின்னர் டானியாவின் முகத்தில் தோன்றிய சிறிய கட்டி அவரது வாழ்க்கையை புரட்டிப்போட்டது. பல்வேறு மருத்துவப் பரிசோதனைக்கு பின்னர் சிறுமி டானியாவுக்கு அரிய வகை முகச்சிதைவு நோய் பாதிப்பு இருப்பது தெரிந்தது. நாட்கள் செல்ல செல்ல டானியாவின் ஒரு பக்க முகம் முழுவதும் சிதையத் தொடங்கியது. இதனால் பள்ளியிலும் டானியாவிடம் மற்ற சிறுமிகள் பாகுபாடு காட்டியதால் அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். மேலும் டானியாவுக்கு அறுவை சிகிச்சை செய்ய போதுமான பண வசதி இல்லை. அவருக்கு அரசு உதவ வேண்டும் என்று பெற்றோர் வேண்டுகோள் விடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் சிறுமி டானியாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் சிறுமிக்கு தேவையான சிகிச்சை அளிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    தண்டலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிறுமி டானியாவுக்கு அறுவை சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 23-ம் தேதி சிறுமி டானியாவுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சை முடிந்து சிறுமி டானியா மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில், முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு முக சீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள சிறுமி டானியாவைச் சந்தித்து முதலமைச்சர் முக.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

    இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், சிறுமி டானியாவை அன்புடன் நலம் விசாரித்து, புன்னகையைப் பரிமாறிக் கொண்டேன். வலுவான நம்முடைய மருத்துவக் கட்டமைப்பால் இது சாத்தியமாகி உள்ளது. இந்தப் புன்னகையைவிட எது இன்றைய நாளை முழுமையாக்கியிருக்க முடியும்? நம் மருத்துவக் கட்டமைப்பைக் காத்து, புன்னகைகளைப் பரிசாகப் பெறுவோம் என பதிவிட்டுள்ளார்.

    • சிறுமி டானியாவுக்கு இன்று காலை அறுவை சிகிச்சை தொடங்கியது. இந்த சிகிச்சை சுமார் 8 மணி நேரம் நடைபெறும் என்று டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
    • அறுவை சிகிச்சையில் 9 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

    திருநின்றவூர்:

    ஆவடியை அடுத்த மோரை, வீராபுரம் ஸ்ரீவாரி நகரை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ். இவரது மனைவி சவுபாக்யா. இவர்களது 9 வயது மகள் டானியா. 4-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    எல்லா குழந்தைகளும் போல டானியாவும் 3 வயது வரை இயல்பாக வளர்ந்தார். இந்த நிலையில் 3½ வயதுக்கு பின்னர் டானியாவின் முகத்தில் தோன்றிய சிறிய கட்டி அவரது வாழ்க்கையை புரட்டிப்போட்டது.

    பல்வேறு மருத்துவப் பரிசோதனைக்கு பின்னர் சிறுமி டானியாவுக்கு அரியவகை முகச்சிதைவு நோய் பாதிப்பு இருப்பது தெரிந்தது. நாட்கள் செல்ல செல்ல டானியாவின் ஒரு பக்க முகம், முழுவதும் சிதையத் தொடங்கியது.

    இதனால் பள்ளியிலும் டானியாவிடம் மற்ற சிறுமிகள் பாகுபாடு காட்டியதால் அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். மேலும் டானியாவுக்கு அறுவை சிகிச்சை செய்ய போதுமான பண வசதி இல்லை. அவருக்கு அரசு உதவ வேண்டும் என்று பெற்றோர் வேண்டுகோள் விடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து கடந்த வாரம் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் சிறுமி டானியாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் சிறுமிக்கு தேவையான சிகிச்சை அளிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    தண்டலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிறுமி டானியாவுக்கு அறுவை சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி கடந்த சில நாட்களாக டானியாவுக்கு பல்வேறு கட்ட மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது.

    இன்று காலை 8 மணிக்கு சிறுமி டானியாவுக்கு அறுவை சிகிச்சை தொடங்கியது. இந்த சிகிச்சை சுமார் 8 மணி நேரம் நடைபெறும் என்று டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். இதில் 9 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

    முன்னதாக அறுவை சிகிச்சைக்கு செல்லும் சிறுமி டானியாவை அமைச்சர் சா.மு.நாசர் நேரில் சந்தித்து நம்பிக்கையூட்டி பேசினார். அவருக்கு சிறுமியின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.

    அப்போது மாதவரம் எம்.எல்.ஏ. சுதர்சனம், மோரை ஊராட்சி தலைவர் திவாகர், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றிய செயலாளர் துரை வீரமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    சிறுமி டானியாவுக்கு அறுவை சிகிச்சை இன்று மாலை 5.30 மணி வரை நடைபெறும் என்று தெரிகிறது. இதன் பின்னர் சிறுமியின் முகம் பழைய நிலைக்கு திரும்பும் என்று டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இது குறித்து சிறுமி டானியாவின் தந்தை ஸ்டீபன் ராஜ் கூறியதாவது:-

    எனது குழந்தையின் இந்த நோய் பாதிப்பால் நான் பல்வேறு கஷ்டங்களை அடைந்தேன். ரூ.10 லட்சத்துக்கு மேல் செலவு செய்தும் எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை. தற்போது என் குழந்தைக்கு முதல்வர் காப்பீடு திட்டத்தின் மூலம் அறுவை சிகிச்சை இன்று நடைபெறுகிறது.

    இன்று காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை இந்த முகம் மாற்று அறுவை சிகிச்சை நடைபெறுகிறது. முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவி இருக்கிறார். இதை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. அவருக்கு மிகப்பெரிய நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

    அறுவை சிகிச்சை முடித்து ஒரு வாரத்துக்கு பின்னர் மருத்துவமனையில் இருந்து டானியா வீடு திரும்ப இருக்கிறாள்.

    இவ்வாறு அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    ×