search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலாங்குளம்"

    • குளக்கரைகளில் பூங்கா அமைத்தல், நகரில் மாதிரி சாலைகள், பூங்கா உருவாக்கம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    • அனைத்துப் படகு சவாரிகளுக்கும் 20 சதவீதம் கட்டணம் தள்ளுபடி அளிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

    கோவை:

    கோவை மாநகராட்சியில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமான நிதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குளக்கரைகளில் பூங்கா அமைத்தல், நகரில் மாதிரி சாலைகள், பூங்கா உருவாக்கம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இதில் வாலாங்குளம் மற்றும் உக்கடம் பெரிய குளத்தில் படகு சவாரி அமைக்கப்பட்டுள்ளது. உக்கடம் புறவழிச் சாலையில் உள்ள வாலாங்குளத்தில் மிதவை பாலம், நடைபாதை, பூங்காங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வாலாங்குளத்தில் ரூ.45 லட்சத்தில் படகும் இல்லம் அமைக்கப்பட்டுள்ளது.

    இதனை பொது மக்கள் பயன்பாட்டுக்கு நேற்று ஈச்சனாரியில் நடந்த அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் மற்றும் மாநகராட்சி சாா்பில் படகு இல்லம் நிா்வகிக்கப்படுகிறது.

    பெடல் படகு, துடுப்புப் படகு, மோட்டாா் படகு மற்றும் சைக்கிளிங் படகு என 4 வகையான படகு சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் பெடல் படகில் பயணம் செய்ய 30 நிமிடத்துக்கு ரூ.300, துடுப்புப் படகில் 30 நிமிடத்துக்கு ரூ.400, சைக்கிளிங் படகில் 15 நிமிடத்துக்கு ரூ.200, மோட்டாா் படகில் 8 பேருக்கு 20 நிமிடத்துக்கு ரூ.1000 கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

    திறப்பு விழாவை முன்னிட்டு, தற்காலிகமாக அனைத்துப் படகு சவாரிகளுக்கும் 20 சதவீதம் கட்டணம் தள்ளுபடி அளிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

    • படகு சவாரியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்
    • தண்ணீரில் நடந்து செல்லும் வகையில் மிதவை நடைபாதை உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

    கோவை:

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மாநகரில் உக்கடம் பெரிய குளம், வாலாங்குளம், குறிச்சி குளம் உள்ளிட்ட குளக்கரைகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன.

    இதில் உக்கடம்- சுங்கம் பைபாஸ் சாலையில் உள்ள வாலாங்குளத்தின் கரைப்ப குதியில் நடைபாதை, சிறார்களுக்கான விளையா ட்டு உபகர ணங்கள், இருக்கைகள், தண்ணீரில் நடந்து செல்லும் வகையில் மிதவை நடைபாதை உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

    இந்தநிலையில் மாநகரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள இந்த வாலாங்குளத்தில் பொழுது போக்கு பயன்பாட்டுக்காக படகு சவாரி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்களும், பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    அதைத்தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தினருடன் இணைந்து ரூ.45 லட்சம் மதிப்பில் படகு இல்லம் ஏற்படுத்தப்பட்டது. இதற்கான படகுகளும் கொண்டு வரப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

    இந்த படகு இல்லத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (24-ந் ேததி) திறந்து வைக்கிறார். ஈச்சனாரியில் நடைபெறும் விழாவில் பங்கேற்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்தபடியே இந்த படகு இல்லத்தை திறந்து வைக்க உள்ளார். இதுகுறித்து மாநகராட்சி மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழக அதிகாரிகள் கூறியதாவது:-

    வாலாங்குளம் படகு இல்லத்தில் பெடல் படகுகள், துடுப்பு படகுகள், மோட்டார் படகுகள் என மொத்தம் 20 படகுகள் இயக்கப்பட உள்ளன. பெடல் படகில் 2 பேர் செல்லலாம். துடுப்பு படகில் ஓட்டுபவர் உள்பட 4 பேர் செல்லலாம். மோட்டார் படகில் ஒரே சமயத்தில் 8 பேர் செல்லலாம்.

    30 நிமிடத்துக்கு பெடல் படகுக்கு ரூ.300, துடு ப்பு படகுக்கு ரூ.350, மோட்டார் படகுக்கு ரூ.1000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டணத்தில் தற்காலிகமாக 20 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது என்றனர்.   

    ×