என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஊராட்சி பகுதிகளில் குடிநீர்"
- அடிப்படை வசதிகள் செய்துதர ரூ.88 லட்சம் நிதி ஒதுக்கீடு
- ஒன்றிய குழு தலைவர் தகவல்
திருப்பத்தூர்:
கந்திலி ஒன்றிய குழு கூட்டம் கந்திலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் திருமதி திருமுருகன் தலைமை வகித்தார்.
அனைவரையும் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாவதி வரவேற்றார், ஒன்றிய குழு துணை தலைவர் ஜி மோகன் குமார் முன்னிலை வகித்தார், கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் வருமாறு:-
திருமதி திருமுருகன் ஒன்றிய குழு தலைவர்; ஒன்றியக் குழு உறுப்பினர்கள் தங்கள் ஊராட்சி பகுதிகளில் குடிநீர், சாலை, பள்ளி கட்டிடம், உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க தலா ரூ4, லட்சம் வீதம் ரூ.88 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சின்னத்தம்பி (அதிமுக) மட்றபள்ளி கிராமத்தில் வார சந்தைக்கு குறைந்தது 1000 மாடுகள், ஆடுகள், விற்பனைக்கு வருகிறது மாடுகளை லாரியில் இருந்து இறக்க சாய்வு தளம் ஏற்படுத்தி தர வேண்டும்
டாக்டர் லீலா சுப்ரமணியம் (அதிமுக;) ஆதியூரிலிருந்து எலவம்பட்டி செல்லும் சாலையில் மின்சார கம்பிகள் 3 அடி மேலே கையில் தொடும் அளவில் உள்ளது. இதனால் விபத்துக்கள் நேரலாம் உடனடியாக கந்திலி ஒன்றியம் சார்பில் மின்சார துறைக்கு கடிதம் எழுதி மின்சார கம்பிகளை உயர்த்தி கட்ட வேண்டும், மேலும் ஆதியூர் முதலியார் தெரு பகுதியில் தண்ணீர் ஏற்படுத்தி தர வேண்டும், ஆலமரத்து வட்டம் பகுதிக்கு சாலை அமைத்து தர வேண்டும்
சாந்தகுமார் (திமுக;) : அருந்ததியர் காலனி வீடுகள் முழுவதும் பழுதடைந்து உள்ளது உடனடியாக புதிய வீடு கட்டி தர வேண்டும் அல்லது அந்த வீடுகளை பழுது பார்த்து தர வேண்டும், ஒன்றிய கவுன்சிலர்களுக்கு வழங்கப்படும் நிதியை உயர்த்தி தரவேண்டும், லக்கினநாரக்கன்பட்டியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் போடப்பட்டு வரும் தார் சாலை இரண்டு வருடமாக போடப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது உடனடியாக சாலை போட நெடுஞ்சாலைத்து றையினருக்கு கடிதம் எழுத வேண்டும்.
தலைவர் அனைத்து கோரிக்கைகளும் உடனடியாக செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்
கந்திலி ஊராட்சி உடையாமுத்தூர் சமத்துவபுரத்தில் வீடுகள் புனரமைப்பு செய்ய வெளிப்புறத்தில் கம்பி வேலிகள் அமைக்கவும் அங்கன்வாடி கழிப்பறைகள் பழுது பார்ப்போம். பெரியார் சிலைக்கு சுற்று சுவர் அமைக்க ரூ 6 லட்சத்து 25 ஆயிரம் செலவு செய்ய பொது நிதியிலிருந்து நிதி ஒதுக்கலாம். உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது இறுதியில் வட்டார வளர்ச்சி அலுவலர் துரை நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்