என் மலர்
நீங்கள் தேடியது "தக்காளி காய்ச்சல்"
- 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையே அதிகம் தாக்குகிறது.
- சுகாதாரமற்ற முறையில் இருப்பதால் ஏற்படுகிறது.
கை, கால் மற்றும் வாய் நோய் என்று அழைக்கப்படும் `தக்காளி காய்ச்சல்' பெரும்பாலும் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையே அதிகம் தாக்குகிறது. குறிப்பாக, கோடை காலங்களில் இந்த காய்ச்சலின் பாதிப்பு அதிகமாக இருக்கும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
உடலில் சிவப்பு நிறத்தில் தக்காளி போல் சிறிய கொப்புளங்கள் தோன்றுவதால் இந்த பாதிப்பை தக்காளி காய்ச்சல் என பேச்சு வழக்கில் அழைக்கின்றனர்.

இதுதொடர்பாக குழந்தைகள் நல டாக்டர் ஒருவர் கூறியதாவது:-
கை, கால் மற்றும் வாய் நோயால், குழந்தைகளுக்கு தோல் வெடிப்பு மற்றும் எரிச்சல், அதிக காய்ச்சல் மற்றும் சிலருக்கு மூட்டு வலி, உடல் வலி, கடுமையான நீரிழப்பு, சோர்வு, வாந்தி, வயிற்று போக்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். இந்த காய்ச்சல் ஒரு வாரத்தில் தானாகவே சரி ஆகிவிடும்.
மேலும், இதனால் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. கை, கால் மற்றும் வாய் நோய் சுகாதாரமற்ற முறையில் இருப்பதால் ஏற்படுகிறது.
பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகள், நண்பர்களுடன் விளையாடி விட்டு வீட்டிற்கு வரும்போதும் அவர்கள் கை, கால், முகம் ஆகியவற்றை சுத்தமாக வைத்திருப்பதை பெற்றோர் உறுதிப்படுத்த வேண்டும். இதன் மூலம் இந்த காய்ச்சலை தவிர்க்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தொற்று பரவல் அதிகரித்து, உடல் சோர்வை உண்டாக்கும்.
- பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது.
சென்னை:
தமிழகத்தில் தக்காளி காய்ச்சல் பரவி வருகிறது. இதுகுறித்து பொது சுகாதாரத்துறை நிபுணர் குழந்தைசாமி கூறியதாவது:-
தக்காளி காய்ச்சல், சுகாதாரமின்மையால் பரவுகிறது. எப்போதும் அனைவரும் சுகாதாரத்துடன் இருப்பது அவசியம். பள்ளி செல்லும் குழந்தைகள், ஒவ்வொரு முறை நண்பர்களுடன் விளையாடி விட்டு வீட்டிற்கு வரும்போதும், கை, கால், முகம் கழுவுவது அவசியம். தக்காளிக் காய்ச்சலை பொறுத்தவரையில் ஒரு வாரத்திற்குள் தானாகவே சரியாகி விடும். அதே நேரம் பாதிப்புக்கு ஏற்ப சிகிச்சை பெறுவது அவசியம்.
இந்த காய்ச்சல் தீவிர பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் தொற்று பரவல் அதிகரித்து, உடல் சோர்வை உண்டாக்கும். எனவே அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தக்காளி காய்ச்சலை தடுக்க குறிப்பிட்ட மருந்து எதுவும் இல்லை.
- அறிகுறி தோன்றியதிலிருந்து 5 முதல் 7 நாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டும்.
கேரளாவில் பரவிய தக்காளி காய்ச்சல் நோய், கர்நாடகா, தமிழகம், அரியானா, ஒடிசா மாநிலங்களில் பரவ வாய்ப்பு உள்ளதாக புவனேஸ்வர் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து, மத்திய சுகாதாரத்துறை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
நாடு முழுதும் 82க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இது பெரும்பாலும் 1 முதல் 10 வயதுடைய குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு குறைபாடுள்ள பெரியவர்கள் ஆகியோரை பாதிக்கிறது.
காய்ச்சல், உடலில் அரிப்பு, தடிப்புகள், மூட்டுகளில் வலி, சோர்வு, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை தக்காளி காய்ச்சலுக்கான அறிகுறிகள். இதற்கு சிகிச்சையளிக்க குறிப்பிட்ட மருந்து எதுவும் இல்லை. நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்க அறிகுறி தோன்றியதிலிருந்து ஐந்து முதல் 7 நாட்களுக்குப் பாதிக்கப்பட்டவர் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
இந்த வைரஸ் குரங்கு அம்மை, டெங்கு மற்றும் சிக்குன்குனியாவுடன் தொடர்புடையது அல்ல. சுகாதாரத்தை கடைப்பிடித்தல், சுற்றுப்புறத்தை சுத்தப்படுத்துதல் ஆகியவை சிறந்த தடுப்பு முறை ஆகும். இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.