search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விதிக்கப்பட்ட"

    • வாலிபர் கொலை வழக்கு விசாரணை ஈரோடு இரண்டாம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
    • இதையடுத்து அவர்கள் 5 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு ஆர்.என்.புதூர் மாதேஸ்வரன் நகரை சேர்ந்தவர் சித்துராஜ்(35). பழைய துணி வியாபாரி. மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்து தலையில் அடிபட்டு மனநலம் பாதிக்கப்பட்டார்.

    இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 7-ந் தேதி அவர் வீட்டு அருகே உள்ள பொதுக் குழாயில் பெண்கள் சிலர் குடிநீர் குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்ற சித்துராஜ் குடத்தை நகர்த்தி விட்டு கை கால் கழுவியுள்ளார்.

    அப்போது தண்ணீர் பிடிக்க வந்திருந்த அதே பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரின் மனைவி பானுமதி (47), அவரது மகள் சிவரஞ்சனி (25), உறவினர்களான ராஜேந்திரன் மனைவி சித்ரா (33), லட்சுமணன் மனைவி கல்யாணி (55), முருகேசன் மனைவி சகுந்தலா (36) ஆகியோர் கண்டித்து வாக்குவாதம் செய்தனர்.

    அப்போது சிவரஞ்சினியின் கணவரான ரங்கநாதன் (29) அங்கு வந்தார். சித்துராஜிடம் தகராறில் ஈடுபட்டார். ஆத்திரம் அடைந்த சித்துராஜ் தான் மறைத்து வைத்திருந்த சிறு கத்தியால் ரங்கநாதன் உடம்பில் குத்தி கிழித்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த 5 பெண்களும் விறகு கட்டையால் சித்துராஜை தாக்கினர்.

    மேலும் அவர் வைத்திருந்த கத்தியை பறித்து குத்தியதில் சித்துராஜ் இறந்தார். இது தொடர்பாக சித்தோடு போலீசார் 5 பெண்கள் உள்பட 6 பேரை கைது செய்தனர். இதில் 2021 இல் கல்யாணி என்பவர் இறந்துவிட்டார்.

    இந்த வழக்கு விசாரணை ஈரோடு இரண்டாம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதி மாலதி தீர்ப்பு வழங்கினார். அதில் பானுமதி, சிவரஞ்சனி, சித்ரா, சகுந்தலா மற்றும் ரங்கநாதன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.

    மேலும் தலா 5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து அவர்கள் 5 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ×