என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "14-ந் தேதி போராட்டம்"

    • கூட்டத்திற்கு விவசாய சங்கங்கள் வருத்தம் தெரிவித்தனர்.
    • குறைந்தபட்சம் விலை நிர்ணயம் செய்யக்கோரி போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

    கோவை:

    நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலைக்கு குறைந்தபட்சம் விலை நிர்ணயம் செய்யக்கோரி நாக்குபெட்டா விவசாய சங்கம் மற்றும் மலை மாவட்ட சிறு குறு விவசாய சங்க சார்பில் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

    இந்நிலையில் ஊட்டியில் பச்சை தேயிலைக்கு விலை நிர்ணய குறித்து கூட்டம் நடைபெற்றது. இதில் வனத்துறை அமைச்சர், மாவட்ட கலெக்டர், மற்றும் தேயிலை வாரியா இயக்குனர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

    ஆனால் விவசாய சங்கங்களை அழைக்காமல் இந்த கூட்டம் நடைபெற்றதாக தெரிகிறது. இந்த கூட்டத்திற்கு விவசாய சங்கங்கள் வருத்தம் தெரிவித்தனர். இது குறித்து மலை மாவட்ட சிறு குழு விவசாய தலைவர் தும்பூர் போஜன் கூறியதாவது:-

    கடந்த 2, 3 மாதங்களாக நாக்குபெட்டா மற்றும் சிறு குறு விவசாய சங்கம் குறைந்தபட்சம் விலை நிர்ணயம் செய்யக்கோரி பலக்கட்ட ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடத்தி வருகின்றன.

    இவர்கள் விவசாய சங்கங்களை அழைத்துப் பேசாமல் அவர்களாகவே பேசியதில் மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. எனவே அறிவித்தபடி 14-ந் தேதி குன்னூர் தேயிலை வாரியத்திற்கு முன்பாக அனைத்து விவசாய சங்கங்களும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

    ×