search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பவானிசாகர் அணையிலிருந்து"

    • கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் தொடர்ந்து பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்படுவதால் பவானிசாகர் அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
    • காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் 300 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் தொடர்ந்து பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்படுவதால் பவானிசாகர் அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 77.53 அடியாக சரிந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 192 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் 300 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கனஅடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,305 கன அடி நீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.

    • நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் இன்று காலை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,822 கன அடியாக குறைந்தது.
    • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101.10 அடியாக உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் கொள்ளளவு 105 அடி ஆகும். அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி முதல் தொடர்ந்து 56 நாட்களுக்கு பவானிசாகர் அணை 102 அடியில் நீடித்தது. இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வந்தது.

    நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர்வர த்து அதிகரித்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 6,521 கன அடியாக நீர்வரத்து அதிகரித்து வந்தது.

    இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் இன்று காலை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,822 கன அடியாக குறைந்தது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101.10 அடியாக உள்ளது.

    பாசனத்திற்காக கீழ் பவானி வாய்க்காலில் 1,500 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் 1,600 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் மற்ற அணை களின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. 41.75 அடி கொண்ட குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 37.75 அடியாக உள்ளது.

    இதேபோல் 33.50 அடி கொண்ட வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33.46 அடியாக உள்ளது. 30 அடி கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 21.10 அடியாக உள்ளது.

    • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியில் உள்ளது.
    • அணையில் இருந்து குடிநீருக்காகவும், பாசனத்திற்காகவும் 3,400 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு, ஆக. 25-

    பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கன மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது.

    இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கடந்த 5-ந் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது. இதனை தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வந்த நீர் அப்படியே உபரி நீராக வெளியேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது.

    இதன் காரணமாக அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவும் குறைய தொடங்கியது. எனினும் பவானிசாகர் அணை தொடர்ந்து 102 அடியிலேயே நீடித்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியில் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3600 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீருக்காகவும், பாசனத்திற்காகவும் 3,400 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

    ×