search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீ பிடித்து"

    • ஆம்னி வேன் எதிர்பாராத விதமாக தீ பிடித்து எரிந்தது.
    • பங்களாப்புதூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அடுத்த அரக்கன் கோட்டை நேதாஜி நகரை சேர்ந்தவர் சாமிய ப்பன் (48). இவர் சொந்தமாக ஆம்னி வைத்துள்ளார். இந்த வேனில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டு உள்ளது.

    இதனை சரி செய்வதற்காக கள்ளிப்பட்டி பகுதிக்கு ஆம்னி வேனை சாமியப்பன் ஓட்டி சென்றார். இதையடுத்து வேன் கள்ளிப்பட்டி சின்னாரி தோட்டம் அருகே வந்து கொண்டு இருந்தது.

    அப்போது திடீரென அந்த ஆம்னி வேன் எதிர்பாராத விதமாக தீ பிடித்து எரிந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சாமியப்பன் வேனை அருகே இருந்த மின் கம்பத்தில் மோதி நிறுத்தி விட்டு காரை விட்டு இறங்கி உயிர் தப்பினார்.

    இது குறித்து தகவலறி ந்து கோபி தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் ஆம்னி வேன் முழுமையாக எரிந்தது.

    இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ஆம்னி வேனில் ஏற்பட்ட பெட்ரோல் கசிவே தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என தெரிய வந்தது.

    • திடீரென வேனில் இருந்து கரும்பு புகை ஏற்பட்டு தீ பற்றியது.
    • தீ எரிவதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் தீயை அணைக்க முற்பட்டனர்.

    சிவகிரி, ஆக. 25-

    சிவகிரி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பட்டேல் தெருவை சேர்ந்தவர் மெய்யப்பன் (வயது 48).

    இவர் தனது மாருதி வேனில் மாலை 4 மணிக்கு சிவகிரியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் தன் மகன் ஹரிஹரன் (வயது 16). என்பவரை அழைத்து வர பள்ளி நுழைவு வாயில் முன் தனது மாருதி வேனை நிறுத்திவிட்டு நின்று கொண்டிருந்தார்.

    பின்னர் பள்ளி முடிந்து வந்த தன் மகனை அழைத்து கொண்டு மீண்டும் மாருதி வேனில் ஏறி வேனை இயக்க முயன்றார். அப்போது திடீரென வேனில் இருந்து கரும்பு புகை ஏற்பட்டு தீ பற்றியது.

    உடனே சுதாரித்து கொண்ட மெய்யப்பன் தன் மகனை வேகமாக கீழே இறக்கி விட்டார். மேலும் பள்ளி குழந்தைகள் பள்ளியில் இருந்து வெளிவராமல் இருக்க ஓடி சென்று தடுத்து நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    தீ எரிவதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் தீயை அணைக்க முற்பட்டனர். அப்போது அவ்வழியே வந்த சமூக ஆர்வலர் பாப்புலர்பழனிச்சாமி என்பவரின் தண்ணீர் வாகனத்தில் இருந்த தண்ணீரை கொண்டு மாருதி வேனில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×