search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடவடிக்கை எடுக்க"

    • பஸ்ஸை ஓட்டி வந்த ஊஞ்சலூரை சேர்ந்த சங்கர் என்ற டிரைவர் பஸ்சை நிறுத்தாமல் சென்று விட்டார்.
    • கொடுமுடி சென்ற பஸ் மீண்டும் திரும்ப வந்தபோது பஸ்சை வழிமறித்து டிரைவர் சங்கரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    கொடுமுடி:

    கொடுமுடி அரசு பஸ் டிப்போவை சேர்ந்த 43 எண் வழித்தட டவுண் பஸ் கொடுமுடியில் இருந்து ஈரோடு வரை 2 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் சம்பவத்தன்று காலை 11 மணியளவில் ஈரோட்டில் இருந்து கொடுமுடி செல்லும் போது ஊஞ்சலூர் அருகில் மணிமுத்தூர் பஸ் நிறுத்தத்தில் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் கொடுமுடி செல்வதற்கு பஸ்சை நிறுத்தி உள்ளனர்.

    பஸ்ஸை ஓட்டி வந்த ஊஞ்சலூரை சேர்ந்த சங்கர் என்ற டிரைவர் பஸ்சை நிறுத்தாமல் சென்று விட்டார். இதனால் கோபம் அடைந்த பெண்கள் ஊஞ்சலூர் வரை நடந்தே சென்று பஸ் திரும்பி வரும் வரை காத்து இருந்தனர்.

    கொடுமுடி சென்ற பஸ் மீண்டும் திரும்ப வந்தபோது பஸ்சை வழிமறித்து டிரைவர் சங்கரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்ததால் பஸ்சை பெண்கள் விட்டு விட்டனர்.

    இது போன்ற ஊழியர்கள் மீது உடனடியாக நடவடி க்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இதனையடுத்து கொடுமுடி கிளை மேலாளர் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க ஈரோடு மண்டல அலுவலகத்திற்கு பரிந்துரை செய்துள்ளார்.

    ×