என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அஷ்வினி வைஷ்ணவ்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 5ஜி தொலைத் தொடர்பு சேவையில் கதிர் வீச்சு அளவு குறைவாகவே உள்ளது.
    • ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரெயில்களை வடிவமைக்க நடவடிக்கை.

    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற மாணவர்களுடனான உரையாடல் நிகழ்ச்சியில் பேசிய மத்திய தொலைத் தொடர்புத்துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ், 5ஜி சேவையின் வேகம் 4ஜி சேவையை விட 10 மடங்கு அதிகமாக இருக்கும் என்றார்.

    5ஜி ஆய்வகம் சென்னை ஐஐடியில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், 5ஜி தொலைத் தொடர்பு சேவையின்போது வெளிப்படும் கதிர் வீச்சின் அளவு உலக சுகாதார ஆணையம் பரிந்துரைந்த அளவை விட குறைவாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    நாடு முழுவதும் முதல் கட்டமாக 13 நகரங்கள் 5ஜி சேவையைப் பெற வாய்ப்பு உள்ளதாகவும், அதில் ஒடிசாவும் இருக்கும் என்றும் அவர் கூறினார். ​​தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் தங்கள் சேவையின் தரத்தை மேம்படுத்துமாறு மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது என்றும் அவர் குறிபிப்பிட்டார்.

    2023 ஆம் ஆண்டிற்குள் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் வகையில் ரெயில்களை வடிவமைக்க முயற்சி நடைபெறுவதாகவும், கதி சக்தி கொள்கையின் மூலம் நாட்டின் இணைக்கப்படாத பகுதிகளை ரெயில்வே மூலம் இணைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

    • 5ஜி சேவையை பொறுத்த வரை 4ஜி இணைப்புகளை விட 10 மடங்கு வேகத்தில் செயல்படும்.
    • அக்டோபருக்குள் 5ஜி சேவை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மந்திரி தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    5ஜி அலைக்கற்றை ஏலம் சமீபத்தில் நடந்து முடிந்தது. ஜியோ, ஏர்டெல், அதானி குழுமம் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்றன. கடந்த ஜூலை 26-ம் தேதி இணையதளம் வாயிலாக தொடங்கி 7 நாளாக 40 சுற்றுகளாக ஏலம் நடந்தது. மொத்தம் ரூ.1.50 லட்சம் கோடிக்கு 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் போனது.

    ஏலம் எடுத்த தொலைத் தொடர்பு நெட்வொர்க்குகளுக்கு ஸ்பெக்ட்ரம் ஒப்புதல் மற்றும் ஒதுக்கீடு பணி நடந்து வருகிறது. முதல் கட்டமாக 13 நகரங்களில் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

    இந்நிலையில், 5ஜி சேவை தொடர்பாக மத்திய தொலை தொடர்புத்துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் கூறுகையில், 5ஜி சேவைகளை வெளியிட தீவிரம் காட்டி வருகிறோம். அக்டோபர் 12-ம் தேதிக்குள் அறிமுகப்படுத்துவோம். அதன்பிறகு மற்ற நகரங்களில் மேலும் விரிவுபடுத்தப்படும். அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் 5ஜி சேவை சென்றடைய வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு என தெரிவித்தார்.

    ×