என் மலர்
நீங்கள் தேடியது "உள்ளாட்சி அமைப்பு"
- கல்வி நிதியை பெறாமல் தி.மு.க. அரசு அரசியல் செய்கிறது.
- நிதியை மத்திய அரசு மறுப்பது நியாயம் அல்ல.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் 24,338 அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு இணைய வசதி பெறுதல் மற்றும் 14,665 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி களுக்கும், 4,934 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கும் இணைப்புக் கட்டணம் மற்றும் ஒரு முறைக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.
இதற்குத் தேவையான ரூ.189.11 கோடியை பள்ளிக் கல்வித்துறை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், பேரூராட்சிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் ரூ.5.49 கோடியை மாநில நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்துள்ள பள்ளிக்கல்வித்துறை, மீதமுள்ள ரூ.183.62 கோடியை உள்ளாட்சி அமைப்புகள் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் போதிய நிதியும், வருவாயும் இல்லாமல் வளர்ச்சிப் பணிகள் முடங்கிக் கிடக்கின்றன.
இந்த நிலையில் இணைய வசதிக் கட்டணத்தையும் உள்ளாட்சி அமைப்புகளே ஏற்க வேண்டும் என்றால், அதை ஊரக உள்ளாட்சி அமைப்புகளால் ஏற்கமுடியாது. அதனால், ஊரக உள்ளாட்சிகளில் அடிப்படை வசதிகளைக் கூட செய்ய முடியாத நிலை உருவாகும். அதை அரசு தவிர்க்க வேண்டும்.
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளுக்கான இணைய வசதிக் கட்டணம் ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதியிலிருந்து வழங்கப்பட்டு வந்தது. மும்மொழிக் கொள்கையை செயல்படுத்த தமிழக அரசு மறுத்து விட்டதையடுத்து அந்த நிதியை மத்திய அரசு நிறுத்தி விட்டது.
அத்தகைய சூழலில் இணையவசதிக் கட்டணத்தை தமிழக அரசு தான் ஏற்றுக்கொள்ள வேண்டுமே தவிர உள்ளாட்சி அமைப்புகள் மீது திணிக்கக் கூடாது.
தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு மறுப்பது நியாயம் அல்ல.
உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தமிழகத்திற்கு நிதியையும், நீதியையும் பெறுவதை விட, இந்த சிக்கலை வைத்து அரசியல் செய்வதில் தான் திமுக அரசு தீவிரம் காட்டுகிறது.
ஒருங்கிணைந்தக் கல்வித் திட்ட நிதியை மத்திய அரசிடமிருந்து பெறாதது தமிழக அரசின் தோல்வி. அதற்காக உள்ளாட்சி அமைப்புகளைத் தண்டிப் பது எந்த வகையிலும் நியாயமல்ல.
எனவே, அரசு பள்ளிகளுக்கான இணைய வசதிக் கட்டணத்தை உள்ளாட்சி அமைப்புகள் தான் ஏற்க வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட அரசாணையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.
உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதியைப் பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- 70 குடும்பத்தினரின் ஓட்டுரிமையை உள்ளாட்சி அமைப்புக்கு மாற்ற வேண்டும் என்று கவுன்சிலர் ராஜாராம் பாண்டியன் கோரிக்கை விடுத்தார்.
- அவர்களுக்கு தேவையான அடிப்படை வச திகளை செய்து தர வேண்டும்.
ராமநாதபுரம்
மாவட்ட காங்கிரஸ் பொறுப்புக்குழு உறுப்பின ரும், மாவட்ட காங்கிரஸ் பொருளாளரும், ராமநாத புரம் நகர்மன்ற 5-வது வார்டு உறுப்பினருமான ராஜாராம் பாண்டியன் என்ற கோபால் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-
ராமநாதபுரம் நகராட்சி 5, 6-வது வார்டுகளில் அல்லிக்கண்மாய் பகுதியில் 300-க்கும் மேற்பட்டவர் கள் நீர்நிலை புறம்போக்கு பகுதியில் வசித்தனர். அரசு விதிமுறை மற்றும் கோர்ட்டு உத்தரவுப்படி அவர்கள் அங்கிருந்து காலி செய்யப் பட்டு 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பட்டினம்காத்தான் கிழக்கு கடற்கரை சாலை குடிசை மாற்று வாரிய குடியிருப்பு களுக்கு மாற்றப்பட்டனர்.
இவர்களுக்கு ஓட்டுரிமை ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ரா மநாதபுரம் நகராட்சியில் உள்ளது. ஆனால் இவர்கள் குடியமர்த்தப்பட்டு இருப்பது திருவாடானை தொகுதிக்கு உட்பட்ட பட்டினம் காத்தான். இத னால் இவர்களுக்கு தேவை யான அடிப்படை வசதி களை ராமநாதபுரம் நக ராட்சியால் செய்ய முடியாத நிலை உள்ளது.
மேலும் ஓட்டுரிமை நகராட்சியில் இருப்பதால் ஊராட்சி நிர்வாகத்தினரும் தேவையான வசதிகளை முழுமையாக நிறைவேற்றி தர முடியவில்லை. எனவே அவர்களது ஓட்டுரிமையை ஊராட்சி பகுதிக்கு மாற்றம் செய்து ஊராட்சி நிர் வாகத்தின் சார்பில் அடிப் படை வசதிகளை செய்து தரவேண்டும்.
மேலும் அவர்களுக்கு கூடுதல் பஸ் வசதி, குடிநீர், சாலை, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதி களை செய்துதர வேண்டும். திருவாடானை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கரு மாணிக்கம் நடவடிக்கையின் பேரில் இந்த குடியிருப்பு பகுதியில் பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது.
எனவே கலெக்டர் இது குறித்து நடவடிக்கை எடுத்து குடிசை மாற்று வாரியத்தில் உள்ள 70 குடும்பத்தினரின் ஓட்டுரிமையை அப்பகுதி யில் உள்ள உள்ளாட்சி அமைப்பிற்கு மாற்றம் செய்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வச திகளை செய்து தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும்.
- கிராம ஊராட்சிகளுக்கு ரூ.424 கோடியும், ஊராட்சி ஒன்றியங்களுக்கு ரூ.270 கோடியும், மாவட்ட ஊராட்சிகளுக்கு ரூ. 50 கோடியும் ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
சென்னை:
தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்காக அடிப்படை மானியமாக மாநில நிதி ஆணையத்தின் பரிந்துரையின்படி நிதி விடுவிக்கப்பட்டு உள்ளது.
பட்ஜெட்டில் நடப்பு ஆண்டுக்கு ஒதுக்கப்பட்டு உள்ள ரூ .5080 கோடியில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கு மட்டும் ரூ.752 கோடி விடுவிக்கப்பட்டு இருக்கிறது.
உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும்.
கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சிகளில் பல்வேறு அடிப்படை வசதிகள் இதன் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளன.
கிராம ஊராட்சிகளுக்கு ரூ.424 கோடியும், ஊராட்சி ஒன்றியங்களுக்கு ரூ.270 கோடியும், மாவட்ட ஊராட்சிகளுக்கு ரூ. 50 கோடியும் ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான நிதி, தடையற்ற குடிநீர், மழைநீர் சேகரிப்பு திட்டங்கள், உள்ளிட்ட பல திட்டங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும்.
ஊழியர்களுக்கு நிதி, புதிய கழிவறைகள் கட்டுதல், நூலகங்களை ஏற்படுத்துதல், அங்கன்வாடி மையங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், ஊரக பகுதிகளில் உள்ள பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துதல், தெருவிளக்குகள், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்தலும் இந்த நிதியின் கீழ் நடைபெறும்.