என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ் நிலையம்"

    • 2 பேரும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. நாளடைவில் 2 பேரும் காதலித்து வந்தனர்..
    • காதலர்கள் கோவளத்தில் உள்ள தர்காவில் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

    விழுப்புரம்:

    செங்கல்பட்டு பகுதியை சேர்ந்தவர் திவ்யா (வயது. 21). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிறுவனத்தில் திண்டிவனம் பகுதியைச் சேர்ந்தவர் முஹம்மத் அசன் (22) என்பவரும் ேவலை பார்த்து வருகிறார். அப்போது 2 பேரும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. நாளடைவில் 2 பேரும் காதலித்து வந்தனர்.  இந்த காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் காதலர்கள் கோவளத்தில் உள்ள தர்காவில் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

    அதன்பின்னர் இருவரும் பாதுகாப்பு கேட்டு திண்டிவனம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    • முத்துவுக்கும் பிரியாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறி உள்ளது.
    • காதல் பெற்றோருக்கு தெரிய வந்த நிலையில் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது .

    கள்ளக்குறிச்சி: 

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தாலுகா கீழ் ஒரத்தூர் கிராமத்தை சேர்ந்த முத்து (வயது 22). இவர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் வேலை பார்க்கும் அதே பகுதியில் பிரியா (19) வசித்து வருகிறார். அப்போது முத்துவுக்கும் பிரியாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறி உள்ளது. கடந்த இரண்டு வருடமாக காதலித்து வந்தனர்.

    இந்த காதல் பெற்றோருக்கு தெரிய வந்த நிலையில் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது . இதனால் வீட்டை விட்டு சென்று திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு எடுத்தனர் காதல் ேஜாடி கடந்த 11-ந் தேதி அன்று சேலம் மாவட்டத்தில் உள்ள பவானி முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றது சின்னசேலம் அருகே உள்ள கணியாமூர் என்ற கிராமத்தில் உறவினர் வீட்டில் தங்கி உள்ளனர். ஆனால் பெற்றோரால் நமக்கு ஆபத்து வரலாம் என எண்ணி சின்னசேலம் போலீஸ் இன்று தஞ்சம் அடைந்தனர். அப்எபோது 2 பேரும் மேஜர் என்பதால் பெற்றோர்களை அழைத்து இவர்களது திருமணமட சட்டப்படி செல்லும்.இவர்களுக்கு நீங்கள் ஏதாவது இடையூறு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். 

    • நேற்றிரவு சுமார் ஒரு மணிநேரம் குளச்சல் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு
    • மகனின் நிலையை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோரும் அவரை கட்டுப்படுத்த முயன்றனர்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் அண்ணாசிலை சந்திப்பு அருகில் மெயின் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் நேற்று மாலை மது அருந்திய 2 வாலிபர்களிடையே தகராறு ஏற்பட்டு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வெளியே வந்த அவர்களிடையே கை கலப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஒரு வாலிபரின் சட்டை கிழிந்தது. இதனால் அவர் குளச்சல் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்றார்.

    அவருக்கு பின்னால் கை கலப்பு செய்த வாலிபரும் சென்றார். இருவரும் அதிக போதையில் இருந்ததால்மறுநாள் காலை வருமாறு போலீசார் கூறினார். சட்டை கிழிந்த வாலிபர் போலீசார் சொல்லுக்கு கட்டுப்பட்டு திரும்பி சென்று விட்டார். உடன் வந்த வாலிபர் காவல் நிலையத்தில் அமர்ந்து போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் ஓரிடத்தில் நிற்காமல் போலீஸ் நிலையத்திற்குள்ளேயே ரகளையில் ஈடுப்பட்டார்.

    அவரை கட்டுப்படுத்திய போலீசாரையும் வாலிபர் தாக்கியதாக கூறப்படுகிறது. போலீசாரின் பிடியில் கட்டுப்படாத அந்த வாலிபர் தொடர்ந்து அங்குமிங்கும் திமிறி கொண்டிருந்தார். விசாரணையில் அந்த வாலிபர் கருங்கல் அருகே மிடாலம் பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்தது. இதற்கிடையே தகவலறிந்த வாலிபரின் பெற்றோர் குளச்சல் போலீஸ் நிலையத்திற்கு விரைந்து வந்தனர். மகனின் நிலையை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோரும் அவரை கட்டுப்படுத்த முயன்றனர்.ஆனால் அந்த வாலிபர் அவரது தந்தையையும் அவதூறாக பேசினார்.

    இதனால் செய்வதறியாத தந்தை வாலிபரை கட்டுப்படுத்தி வீட்டிற்கு அழைத்து செல்ல முயன்றார். இதனால் தந்தை - மகனிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஒரு வழியாக வாலிபரின் நண்பர்களின் உதவியால் பெற்றோர் வாலிபரை ஆட்டோவில் ஏற்றி வீட்டிற்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தினால் நேற்றிரவு சுமார் ஒரு மணிநேரம் குளச்சல் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×