என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "எம்.எஸ்.எம்.இ."
- மாணவர்கள், பெண் தொழில் முனைவோர்கள் தங்களது தொழில் உக்தி யோசனைகளை வழங்கவேண்டும்.
- போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நெல்லை:
நெல்லை வண்ணார்பேட்டை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் தொழில் முனைவோருக்கான எம்.எஸ்.எம்.இ. இன்குபேஷன் மையம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் தொழில் முனை வோர்களுக்கு ஆலோசனைகள் அளிக்கப்ப டுகின்றன.
புதிய கட்டிட திறப்பு விழா
இந்நிலையில் கல்லூரியில் நடந்த எம்.எஸ்.எம்.இ. மைய புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. இதில் ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு அறிவுறுத்தலின் படி கல்லூரி முதல்வர் வேல்முருகன் கலந்து கொண்டார். விழாவில் சென்னை தலைமையக எம்.எஸ்.எம்.இ. இணை இயக்குநர் சுரேஷ்பாபு, உதவி இயக்குநர்கள் (நெல்லை) சிமியோன், ஜெரினாபபி மற்றும் அதிகாரி கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற னர்.
நிகழ்ச்சியில் சுரேஷ்பாபு பேசுகையில், எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் எம்.எஸ்.எம்.இ. செயல்பாடுகள் நன்றாக உள்ளது. மாணவர்கள், பெண் தொழில் முனைவோர்கள் தங்களது தொழில் உக்தி யோசனைகளை வழங்கவேண்டும் என்றார்.
கல்லூரி பொதுமேலாளர் ஜெயக்குமார் பேசுகையில், மத்திய, மாநில அரசுகள் ஆதரவுடன் இன்குபேஷன் மையத்தில் பல்வேறு வசதிகள் செய்யப்பட உள்ளன. மாணவர்கள் தங்களது திறன்மிக்க யோசனைகளை வழங்க முன்வர வேண்டும் என்றார். தொடர்ந்து மாணவர்களுடன் கலந்துரை யாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவர்களுக்கு ஆலோசனை கள் வழங்கப்பட்டன.
மேலும் மத்திய அரசு நடத்தும் ஹேக்கத்தான் போட்டிகள், தமிழக அரசின் ஸ்டார்ட்-அப் போட்டிகளில் எப்.எக்ஸ். கல்லூரி சார்பில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இதில் பொதுமேலாளர் ஜெயக்குமார், கிருஷ்ணகுமார், கல்லூரி முதல்வர் வேல்முருகன், இயக்குநர் ஜான்கென்னடி, தொழில் முனைவோர்துறை இயக்குநர் லூர்தஸ் பூபாலராயன், எம்.எஸ்.எம்.இ. இன்குபேஷன் மைய தலைவர் லக்ஷ்மி நாராயணன் மற்றும் மதுரை எம்.எஸ்.எம்.இ. உதவி இயக்குநர்கள் உமா சந்திரிகா, ஜெயசெல்வம், தமிழ்நாடு ஸ்டார்ட்-அப் மிஷன் திட்ட தலைவர் ராகுல், பயிற்றுவிப்பாளர்கள் ராஜ், முத்துக்குமார் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியர் பிரியா நன்றி கூறினார்.
- பட்டைய கணக்காளர்கள் குழுமம் நாடு முழுவதும் 165 கிளைகளை கொண்டுள்ளது.
- தொழில் நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் எங்களால் செய்ய இயலும்.
திருப்பூர் :
சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பில் தோள் கொடுப்போம் தொழில்களுக்கு, எனும் மண்டல மாநாடு திருப்பூரில் நடந்தது. இதில் தமிழக முதல்-அமைச்சர் மு .க. ஸ்டாலின் பங்கேற்று பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொண்டார். அந்த வகையில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி பொருளாதார சட்டத்திற்கு உட்பட்டு இருக்கும் வகையில், இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டட் அக்கவுண்ட் இந்தியா (இந்திய பட்டைய கணக்காளர்கள்) என்ற நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இது குறித்து, இந்திய பட்டைய கணக்காளர்கள் குழும நிர்வாகி ராஜேந்திர குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்திய பட்டைய கணக்காளர்கள் குழுமம் நாடு முழுவதும் 165 கிளைகளை கொண்டுள்ளது. நாங்கள் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் சுமைகளை குறைக்க பாடுபடுகிறோம். மேலும் அரசுக்கு தேவையான அனைத்து பணிகளையும் நாங்கள் செய்து வருகிறோம். தற்பொழுது இந்த நிகழ்வில் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் எங்களால் செய்ய இயலும். மேலும் எம்.எஸ்.எம்.இ.குறித்து அனைத்து மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் பஸ் யாத்திரை ஒன்று துவங்கப்பட்டுள்ளது.
இந்த யாத்திரை கடந்த ஆகஸ்ட் 18ந் தேதி மும்பையில் தொடங்கியது. வரும் நவம்பர் 3-ந் தேதி தமிழகத்திற்கு இந்தப் பேருந்து வருகிறது .இதனை குறு சிறு நடுத்தர தொழில் துறை நிறுவன அமைச்சர் தா.மோ.அன்பரசன் கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளார். என்றும் அரசோடு நாங்கள் இருப்போம். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் நாங்கள் மேற்கொள்ள இருக்கும் முதல் கட்ட பணியாக அனைத்து தொழில் முனைவோர்களுக்கும் பயிற்சி வழங்கும் பொருட்டு பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்