search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காரசார"

    • சேலம் மாநகராட்சி சிறந்த மாநகராட்சியயாக தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சி.
    • கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி அதிக நிதி ஒதுக்கியதே அதற்கு காரணம் என்றார்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் ஆணயைாளர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார. கூட்டத்தில் துணை மேயர் சாரதா தேவி மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். அப்போது மேயர் ராமச்சந்திரன் பேசியதாவது-

    சேலம் மாநகராட்சி சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்டு வி ருது வழங்க காரணமாக இருந்த அனைத்து மாநகராட்சி பணியாளர்கள், கவுன்சிலர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

    அ.தி.மு.க. எதிர்கட்சி தலைவர் யாதவமூர்த்தி பேசுகையில், சேலம் மாநகராட்சி சிறந்த மாநகராட்சியயாக தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சி , கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி அதிக நிதி ஒதுக்கியதே அதற்கு காரணம் என்றார். அதனால் அ.தி.மு.க.வுக்கும் பங்களிப்பு உள்ளது, மேலும் அனைத்து வார்டுகளையும் சமமாக பார்க்க வேண்டும், 'என்றார்.

    அப்போது குறுக்கிட்ட மேயர் அனைத்து வார்டுகளையும் சமமாகவே கருதுகிறோம் என்றார்.

    கவுன்சிலர் கே.சி. செல்வராஜ் பேசுகையில், பனமரத்துப்பட்டி ஏரி டென்டர் குறித்து கேள்வி எழுப்பினார். மேலும் சேலம் மாநகராட்சி சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்ய எடப்பாடி பழனிசாமிதான் காரணம் என்றார்.

    வாக்கு வாதம்

    அதற்கு பதில் அளித்து பேசிய சாந்த மூர்த்தி, பாதாள சாக்கடை திட்டம் உள்பட பல்வேறு பணிகள் அ.தி.மு.க. ஆட்சியில் முடங்கி கிடந்தன. கடந்த 5 மாதத்தில் நடந்த பணிகளால் தான் சிறந்த மாநகராட்சி விருது கிடைத்தது என்றார். இதனால் தி.மு.க., அ.தி.மு.க.வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கார சார மோதல் உருவானது. அதனால் மாநகராட்சி கூட்டத்தில் அமளி ஏற்பட்டது .

    இதற்கிடையே அங்கு வந்த விடுதலை சிறுத்தை கட்சி கவுன்சிலர் இமயவர்மன் மேயர் முன்பு தரையில் அமர்ந்த தர்ணாவில் ஈடுபட்டார். அவரை தி.மு.க. கவுன்சிலர்கள் சமரசம் செய்து இருக்கைக்கு அனுப்பி வைத்தனர்.

    தி.மு.க. மாநகராட்சி ஆளும்கட்சி தலைவர் ஜெயக்குமார் பேசியதாவது-

    திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்தது தான் இந்த விருது, அதனை திசை திருப்பி கொச்சை படுத்த முடிவு செய்துள்ளனர். இது தவறான செயல், இதற்கெல்லாம் தி.மு.க. அஞ்சாது, மாநகராட்சியில் மக்கள் பிரச்சினைகள் குறித்து பேச வேண்டும், தி.மு.க. ஆட்சியின் ஓராண்டு சாதனைக்கு கிடைத்த விருது என்றார்.

    கவுன்சிலர் ஈசன் இளஙகோ பேசுகையில், 5 மாத கவுன்சிலர்களின் செயல்பாட்டிற்கு கிடைத்த விருது தான் இது என்றார். அப்போது அ.தி.மு.க. மற்றும் தி.முக. கவுன்சிலர்களிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    கவுன்சிலர் இமயவரம்பன் பேசுகையில், தனது வார்டில் மின் மயானம் அமைப்பதாக கூறி 6 ஆண்டு ஆகியும் நிறைவேற்றாமல் உள்ளது. மேலும் தாதாகப்பட்டி பகுதியில் மூடப்பட்ட மானா சில்லி கடையை திறக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

    இதற்கு பதில் அளித்து பேசிய மேயர் ராமச்சந்திரன் உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் பரிசீலித்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

    ×