என் மலர்
நீங்கள் தேடியது "பட்டாணி கடை"
- இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்று விட்டார்.
- இந்த நிலையில் இன்று அதிகாலை 6 மணி அளவில் திடீரென கடையில் தீ பற்றி எரிய தொடங்கியது.
தஞ்சாவூர்:
தஞ்சை கீழவாசல் திரௌபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த வர் காமராஜ்.
இவர் கீழவாசல் அண்ணாசாலையில் சரபோஜி மார்க்கெட் அருகில் பட்டாணி, அவல் மற்றும் இனிப்பு, கார வகைகள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார்.
நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்று விட்டார். இந்த நிலையில் இன்று அதிகாலை 6 மணி அளவில் திடீரென கடையில் தீ பற்றி எரிய தொடங்கியது. சிறிது நேரத்தில் மளமளவென தீ பற்றி எரிந்து கொண்டி ருந்தது.
இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.அதன்பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அருகில் உள்ள கடைகளுக்கு தீ பரவாமல் தடுக்க தீயை அணைத்தனர்.
இருப்பினும் கடையின் பெருமளவு பகுதி எரிந்து சேதமானது. இது குறித்து தஞ்சை கிழக்கு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் . முதல் கட்ட விசாரணையில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. இருப்பினும் தீ விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும்க டையில் இருந்த பொருட்கள் முழுவதும் எரிந்து சேதம் அடைந்ததில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசமானது என்று கூறப்ப டுகிறது.இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படு த்தியது.
- விழுப்புரம் தீயணைப்பு போலீசார் கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீ மற்ற கடைகளுக்கு பரவாமல் போராடி அணைத்தனர்.
- தீ விபத்தில் கடையில் உள்ள சுமார் 50,000 மதிப்புள்ள பொருள்கள் முழுவதும் எரிந்து சேதமானது.
விழுப்புரம்:
விழுப்புரத்தில் மாம்பழப்பட்டு பகுதியை சேர்ந்தவர் அபித் ரஹிமான். இவர் அதே பகுதியில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரி எதிரில் பட்டாணிக் கடை வைத்து நடத்தி வருகிறார்.
நேற்று இரவு வழக்க ம்போல் வியாபாரத்தை முடித்து கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். இன்று காலை திடீரென அந்த கடை மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி யளித்தது. இதை அக்கம் பக்கம் உள்ளவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து விழுப்புரம் தீயணைப்பு போலீஸ் நிலையம் மற்றும் கடை உரிமையாளருக்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த விழுப்புரம் தீயணைப்பு போலீசார் கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீ மற்ற கடைகளுக்கு பரவாமல் போராடி அணைத்தனர். இந்த தீ விபத்தில் கடையில் உள்ள சுமார் 50,000 மதிப்புள்ள பொருள்கள் முழுவதும் எரிந்து சேதமானது.
இது குறித்து தகவல் அறிந்த விழுப்புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.