search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆலோசனைகூட்டம்"

    • ஆலோசனைக் கூட்டம் ஜெ.பி.நட்டாவின் இல்லத்தில் நேற்று காலை நடைபெற்றது.
    • சுமார் 11 மணி நேரம் தொடர்ந்து ஆலோசனை நடத்தப்பட்டது.

    புதுடெல்லி:

    பா.ஜ.க. கூட்டணியில் யார், யாருக்கு மந்திரி பதவி, என்னென்ன இலாகா என்பது தொடர்பாக முதல்கட்ட ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் உள்ள ஜெ.பி.நட்டாவின் இல்லத்தில் நேற்று காலை நடைபெற்றது.

    இதில், அமித்ஷா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இந்த ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவுகளை தொடர்ந்து பிரதமர் மோடி வீட்டில் ஆலோசனை நடத்தப்பட்டது. நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை சுமார் 11 மணி நேரம் தொடர்ந்து ஆலோசனை நடத்தப்பட்டது.

    அதில் புதிய மத்திய மந்திரிகள் தேர்வு செய்யப் பட்டனர். அதன் பிறகு இன்று காலை அமித்ஷா வீட்டில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் மத்திய மந்திரி சபையில் இடம் பெறுபவர்களை பற்றிய முடிவுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது.

    இதையடுத்து அமைச்சரவையில் இணைய உள்ளவர்களுக்கு போன் மூலம் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. அவர்கள் அனை வரும் டெல்லி லோக் கல்யாண்மார்க்கில் உள்ள பிரதமர் மோடி இல்லத்துக்கு உடனடியாக புறப்பட்டு வருமாறு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    புதிய மந்திரிகளுக்கு பிரதமர் மோடி விருந்து கொடுக்க இருக்கிறார் என் றும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து புதிய மந்திரிகளாக தேர்வானவர்கள் ஒவ்வொருவராக பிரதமர் வீட்டுக்கு வரத் தொடங்கினார்கள்.

    அப்படி வந்தவர்கள் அனைவரும் இன்று இரவு புதிய மந்திரிகளாக பதவி ஏற்பார்கள் என்று உறுதிப் படுத்தப்பட்டது. அந்த வகையில் பிரதமர் இல்லத்துக்கு வந்தவர்கள் விவரம் வருமாறு:-

    அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிதின்கட்காரி, ஜே.பி.நட்டா, பியூஸ்கோயல், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், எல்.முருகன், சிவராஜ் சிங் சவுகான், ஜோதிர்ஆதித்ய சிந்தியா, கட்டார், ஹர்ஸ் மல்கோத்ரா, சாவித்திரி தாகூர், ரன்வீத் சிங் பிட்டு, சர்பானந்த் சோனாவால், ஜெயந்த் சவுத்ரி, பி.எல்.வர்மா, பங்கஜ்சவுத்ரி, அன்னப்பூர்ணதேவி, அர்ஜுன்ராம் மேக்வல், தர்மேந்திரபிரதான், ஜிதேந் திரசிங், ராம்தாஸ் அத்வாலே, கஜேந்திர செகாவாத் ஆகியோர் பிரத மர் இல்லத்துக்கு வந்தனர்.

    இவர்களில் புதிய மந்திரிகள் ஆவது யார்-யார் என்று பிரதமர் மோடி இறுதி முடிவெடுப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    இது தொடர்பான கூட்டம் இன்று ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் நடந்தது. அதன் பிறகு பிரதமர் மோடி வீட்டில் இருந்து அனைவரும் புறப்பட்டு சென்றனர். இதையடுத்து பரபரப்பு தகவல்கள் வெளி யாக தொடங்கியது.

    முந்தைய மந்திரிசபையில் இடம் பெற்றிருந்த மூத்த மந்திரிகளான அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான், நித்தியானந்த் ராய், ஜோதிர்ஆதித்ய சிந்தியா, எஸ். ஜெய்சங்கர், அஸ்வினி வைஷ்ணவ், ஜிதேந்திர சிங் உள்ளிட்டோர் புதிய மந்திரி சபையிலும் இடம்பெறுவர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதற்கிடையே, தென் மாநிலங்களில் யார், யாருக்கு மந்திரி பதவிகள் வழங்கப்பட உள்ளன என்கிற விவரத்தை தேசிய ஜனநாயக கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    இந்த நிலையில் ஏற்கெனவே மத்திய இணை மந்திரியாக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த எல். முருகனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுவது உறுதி என்று தகவல் வெளியாகி உள்ளது.

    கர்நாடக மாநிலத்தைப் பொருத்தவரை பா.ஜ.க. வுக்கு பெரும் பலத்தைக் கொடுத்த ஒக்கலிகர் சமூ கத்தின் வாக்கு வங்கியாக இருந்த மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலை வர் குமாரசாமிக்கு வேளாண் துறை ஒதுக்கப்பட லாம் என்று கூறப்படுகிறது. அதே மாநிலத்தைச் சேர்ந்தவரும் ஏற்கெனவே மத்திய மந்திரியாக இருந்த வருமான பிரகலாத் ஜோஷி மீண்டும் மந்திரி ஆகிறார்.

    தேசிய ஜனநாயக கூட் டணியின் முக்கியக் கட்சி யான தெலுங்கு தேசம் கட்சிக்கு ஒரு கேபினட் மந்திரி பதவியும், ஒரு இணை மந்திரி பதவியும் வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

    கேபினட் மந்திரியாக மோகன் நாயுடுக்கு ஊரக வளர்ச்சித் துறையும், அக் கட்சியின் பி. சந்திரசேகருக்கு நிதித் துறையின் இணை மந்திரி பதவியும் வழங்கப் படும் எனத் தெரிய வந்துள்ளது. ஆந்திர மாநில பா.ஜ.க. தலைவர் புரந்தேஸ்வரிக்கு இணை மந்திரி தனிப் பொறுப்புடன் வர்த்தக தொழில் துறையும், சி.எம். ரமேசுக்கு சுற்றுலாத் துறை இணை மந்திரி பதவி யும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    தெலுங்கானாவிலும் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலை யில், ஏற்கனவே மத்திய மந்திரியாக இருந்த ஜி.கிஷன் ரெட்டிக்கு கேபினட் பதவி மீண்டும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும், இந்த மாநி லத்தைச் சேர்ந்த பண்டி. சஞ்சய், டிகே அருணாவுக்கும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

    பீகாரை சேர்ந்த ஜிதன்ராம் மன்ஜிகி, சிராக் பஸ்வான் ஆகியோரும் மந்தரி சபையில் இடம் பெறுகிறார்கள். அப்னா தளம் கட்சியைச் சேர்ந்த அனுபிரியா பட்டேலும் மந்திரியாவது உறுதியாகி இருக்கிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் தேசிய தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்த மேயர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    குழந்தை பிறந்தது முதல், 2 வயது வரை, 13 வகையான தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு செலுத்தப்படுகிறது. தேசிய அளவில் இந்த திட்டம் அடுத்த மாதம் 7ந் தேதி முதல் சிறப்பு முகாம்கள் மூலம் செயல்படுத்தப் படவுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை பிற மாநில, பிற மாவட்ட தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளனர். இதனால், அவர்கள் குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசிகள் முழுமையாகச் செலுத்துவதை உறுதிப்படுத்தும் விதமாக இதற்கென சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

    மாநகராட்சி பகுதியில் மேயர் தினேஷ்குமார் தலைமையில் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

    மாநகர நல அலுவலர் கவுரி சரவணன் உறுப்பினர் செயலர், தடுப்பூசி திட்ட கண்காணிப்பு நல அலுவலர் வேலன், இந்திய குழந்தைகள் நல மருத்துவ சங்கம், இந்திய மருத்துவர் சங்கம், ஊட்டச்சத்து துறை, தொழிற்சாலை துறை, தொழிலாளர் நல துறை, குடிசை மாற்று வாரியம், போலீஸ் துறை உள்ளிட்ட துறையினர் இதில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இக்குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் மேயர் தினேஷ்குமார் தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. கமிஷனர் பவன்குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தனர்.

    வெளி மாவட்ட, வெளி மாநில தொழிலாளர் குழந்தைகளைக் கண்டறிந்து தடுப்பூசி செலுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை, இதற்காக துறை வாரியாக வழங்க வேண்டிய ஒத்துழைப்பு, பதிவுகள் மேற்கொள்ளும் நடவடிக்கை, அவற்றை முற்றிலும் சாப்ட்வேர் மூலம் முழுமையாக பதிவேற்றம் செய்து, தினமும் இதன் விவரங்களை குழுவுக்கு சமர்ப்பித்தல் உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டது.

    • கூடுதல் மாவட்ட முதன்மை நீதிபதி கீதாராணி தலைமை தாங்கினார்.
    • சட்டப்பிரச்சினைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கிடவும் இந்த குழு செயல்படுகிறது.

     கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சட்டவி ழிப்புணர்வு ஆலோசனைக் குழு தொடர்பாக மாவட்ட அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டகலெக்டர் ஷ்ரவன் குமார்முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது)சுரேஷ் வரவேற்றார். கூடுதல் மாவட்ட முதன்மை நீதிபதி கீதாராணி தலைமை தாங்கி பேசியதாவது:- நலிவடைந்த மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை நேரடியாக வழங்கிடவும், பொதுமக்களு க்கிடையேயான பிரச்ச னைகளை மக்கள் நீதிமன்றம் மூலமாக தீர்த்துக்கொள்ள வழிகாட்டுவதற்காகவும், வழக்கறிஞர்கள் இலவசமாக வழக்குகளை நடத்திடவும், சட்டப்பிரச்சினைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கிடவும் இந்த குழு செயல்படுகிறது. மேலும் பொதுமக்கள் நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்பு தங்கள்வழக்குகளை சமரசம் மற்றும் சுமூக முறையில் விரைவில் தீர்வு காண்பதற்காக தேசிய மக்கள் நீதிமன்றம் எற்படுத்தப்பட்டு உள்ளது. இதன் வாயிலாகவும், தங்கள் வழக்குகளை சுமூக முறையில்தீ ர்த்துக்கொள்ளலாம்.

    எவ்வித சட்ட ஆலோசனைகள் மற்றும் சட்ட உதவி தேவைப்பட்டால் மாவட்டசட்டப்பணிகள் ஆணைக்குழு வாயிலாக தொடர்பு கொண்டு தீர்வு காணலாம். மேலும் கூடுதல் விபரங்கள் அறிய மாவட்ட சட்டப்பணிகள் ஆணை க்குழு விழு ப்புரம் 04146-228000, கள்ளக்குறிச்சி வட்டசட்டப்பணிகள் குழு 04151-226730, உளுந்தூர்பேட்டை சட்டப்ப ணிகள்குழு 04149-220433, திருக்கோவிலூர் வட்ட சட்டப்பணிகள் குழு 04153-253970 மற்றும் சங்கராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழு04151-235033 ஆகிய தொலைபேசி எண்கள் வாயிலாக தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, மாண்பமை முதன்மை சார்பு வீரணன், உதவி ஆணையர் (கலால்) இராஜவேல், வேளாண்மை இணைஇயக்குநர் வேல்விழி, துணை இயக்குநர் சுகாதா ரப்பணிகள் இராஜா மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு அதிகாரிகள் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.முடிவில் மாவட்ட சட்ட ப்பணிகள் ஆணை க்குழு செயலர் விஜயகுமார் நன்றி கூறினார்.

    ×