search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அன்னூர் அருகே"

    • காவ்யா தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வந்தார்.
    • காதல் தகராறில் தற்கொலை செய்தாரா என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேட்டுப்பாளையம்,

    சிவகங்கை மாவட்ம் நாட்டரசன் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகள் காவ்யா (வயது 24).

    இவர் அன்னூர் கோவை சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வந்தார். பணி காரணமாக அவர் ஆஸ்ப த்திரி குடியிருப்பிலேயே தங்கியிருந்தார்.

    இந்தநிலையில் காவ்யா திடீரென ஆஸ்பத்திரியின் பிரசவ வார்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து சக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுபற்றி அவர்கள் அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து காவ்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    நர்சு காவ்யா தற்கொலை செய்தது ஏன், காதல் தகராறு காரணமாக தற்கொலை செய்தாரா, அல்லது வேறு காரணம் எதுவும் உண்டா? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • மருதாச்சலம் தனது தாயை ஆம்புலன்சில் ஏற்றி அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றார்.
    • இறந்த தாயின் தங்க நகைகளை திருடி, திருப்பி கேட்ட தந்தையை தாக்கி மிரட்டல் விடுத்த மருதாச்சலத்தை கைது செய்தனர்.

    கோவை

    கோவை மாவட்டம் எஸ்.எஸ்.குளம் அருகே உள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 75). இவரது மனைவி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

    இவர்களது மகன் கூலித் தொழிலாளி மருதாச்சலம் (48) என்பவர் வலுக்கட்டாயமாக தனது தாயை ஆம்புலன்சில் ஏற்றி அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து மருதாச்சலம் தனது தாயின் உடலை தனது வீட்டிற்கு எடுத்து சென்றார். அப்போது அவர் தனது தாய் அணிந்து இருந்த 2 பவுன் நககைளை கழற்றி வைத்துக்கொண்டார்.

    உடலை அடக்கம் செய்த பின்னர் ராமசாமி தனது மகனிடம் நகைகளை கொடுக்கும்படி கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மருதாச்சலம் தனது தந்தையை தாக்கினார். பின்னர் அரிவாளை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    இது குறித்து ராமசாமி அன்னூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த தாயின் தங்க நகைகளை திருடி, திருப்பி கேட்ட தந்தையை தாக்கி மிரட்டல் விடுத்த மருதாச்சலத்தை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 

    • அன்னூர் அருகே கரியாக்கவுண்டனூரில் மாரியம்மன் கோவில் உள்ளது.
    • 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    அன்னூர்,

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூரில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டது. மேலும் புதிதாக செல்வ விநாயகர் கோவிலும் கட்டப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கும்பாபிஷேக விழா கடந்த வெள்ளிக்கிழமை மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அம்மன் அழைப்பு, முளைப்பாரி எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன.

    கோவிலில் யாக சாலைகள் அமைக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் மூலம் வேதமந்திரங்கள் ஓதப்பட்டு நான்கு கால யாக வேள்விகள் நடத்தப்பட்டது

    இதனைத் தொடர்ந்து இன்று காலை செல்வ விநாயகர் மற்றும் மாரியம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் கோலா கலமாக நடை பெற்றது.சிவாச்சாரியார்கள் யாக சாலையில் வைத்து பூஜை செய்த புனித நீர் யாக சாலையில் இருந்து எடுத்து வரப்பட்டு விமான கலசங்களுக்கு ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

    அப்போது கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்த ஹெலிகாப்டர் மூலம் மேல் இருந்து பல வண்ண மலர்கள் தூவப்பட்டது. விழாவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.  

    • ரஞ்சன்குமார் பீகாரை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்தார்.
    • இளம்பெண் காதலை மறுத்து அவரிடம் பேசுவதை தவிற்து வந்ததாக தெரிகிறது.

    கோவை:

    பீகாரை சேர்ந்தவர் ரஞ்சன்குமார் (வயது 20). இவர் கோவை அன்னூர் கெம்பநாயக்கன்பாளையம் பகுதியில் அறை எடுத்து தங்கி கூலி வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் ரஞ்சன்குமார் பீகாரை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்தார். தனது காதலை அந்த பெண்ணிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த இளம்பெண் அவரின் காதலை ஏற்க மறுத்ததாக தெரிகிறது.

    சில நாட்கள் கழித்து மீண்டும் தனது காதலை கூறியுள்ளார். அப்போதும் இந்த இளம்பெண் காதலை மறுத்து அவரிடம் பேசுவதை தவிற்து வந்ததாக தெரிகிறது. இதனால் ரஞ்சன்குமார் மனவேதனையுடன் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் அறையில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ரஞ்சன்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×