என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நிதி மந்திரி"
- ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் ஜூன் 22-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி 52-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.
புதுடெல்லி:
நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையைக் கொண்டு வரும் நோக்கில் கடந்த 2017, ஜூலை 1-ம் தேதி புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) அறிமுகம் செய்யப்பட்டது. இதைக் கண்காணிக்கவும், வட்டி நிர்ணயம் தொடர்பான முடிவுகளை எடுக்கவும் ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டது.
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் தலைவர் ஆவார். அனைத்து மாநிலங்களின் நிதி மந்திரிகளும் இதில் உறுப்பினர்களாக உள்ளனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி 52-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.
இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தல் முடிவு வெளியாகி பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி பொறுப்பேற்றது. நிதி மந்திரியாக நிர்மலா சீதாராமன் மீண்டும் பதவியேற்றார்.
இந்நிலையில், 53-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் புதுடெல்லியில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- காட்கோபரில் இருந்து கல்யாண் செல்லும் ரெயிலில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பயணம் செய்தார்.
- அப்போது சக பயணிகளுடன் கலந்துரையாடிய அவர் செல்பி எடுத்து மகிழ்ந்தார்.
மும்பை:
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மும்பையின் காட்கோபரில் இருந்து கல்யாண் செல்லும் மின்சார ரெயிலில் இன்று பயணம் செய்தார். அப்போது மகாராஷ்டிர மாநில முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
சக பயணிகளுடன் கலந்துரையாடிய நிர்மலா சீதாராமன் அவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். சக பயணிகள் போல் நிதி மந்திரி பயணம் செய்ததை கண்டு மக்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
மும்பையின் காட்கோபரில் இருந்து கல்யாண் செல்லும் மின்சார ரெயிலில் ஒவ்வொரு நாளும் 60 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.
Smt @nsitharaman interacts with commuters while travelling from Ghatkopar to Kalyan in a Mumbai local train. pic.twitter.com/T15BdC3f5V
— Nirmala Sitharaman Office (@nsitharamanoffc) February 24, 2024
- ஜி.டி.பி. குறித்து பேசிய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன், தனிநபர் வருமானம் குறித்து ஏன் எதுவும் பேசவில்லை.
- உலக பட்டினி தரக் குறியீட்டில் இந்தியாவின் மோசமான நிலை குறித்து பேசவில்லை என கேள்வி எழுப்பினார்.
புதுடெல்லி:
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார்.
இந்நிலையில், முன்னாள் மத்திய நிதிமந்திரி ப.சிதம்பரம் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பட்ஜெட் குறித்து கூறியதாவது:
ஜி.டி.பி. குறித்து பேசிய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன், தனிநபர் வருமானம் குறித்து ஏன் எதுவும் பேசவில்லை.
இலவச உணவு தானிய திட்டம் குறித்து பேசி உள்ள அவர், உலக பட்டினி தரக் குறியீட்டில் இந்தியா மோசமான நிலையில் இருப்பதை தெரிவிக்கவில்லை.
பணவீக்கம் குறித்து மேம்போக்காக குறிப்பிட்ட மத்திய நிதி மந்திரி உணவுப் பொருட்களின் விலை 7.7 சதவீதம் வரை அதிகரித்திருப்பது குறித்து எதுவும் பேசவில்லை.
விவசாயிகள் பற்றி பேசிய நிதி மந்திரி விவசாயிகள் தற்கொலை குறித்து ஒரு வார்த்தை கூட ஏன் பேசவில்லை? ஒவ்வொரு ஆண்டும் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
நிலையில்லாத குறைந்தபட்ச ஆதார விலை, இடுபொருட்களின் விலை அதிகரிப்பு, காப்பீடு விவகாரங்களில் குளறுபடி போன்ற எந்த ஒரு விஷயம் குறித்தும் எதுவும் இந்த பட்ஜெட் உரையில் பேசப்படவில்லை.
புதிய கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், மருத்துவமனை கல்லூரிகள் கட்டப்படும் என பேசும் நிதி மந்திரி மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான காலியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் இருப்பது குறித்து பேசவில்லை. குறிப்பாக இந்தப் பணியிடங்கள் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினருக்கான இட ஒதுக்கீடு இடங்களாகும்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் 2013-14 நிதியாண்டில் ஜி.டி.பி. வளர்ச்சியை 6.4 சதவீதம் ஆகவும், சராசரி வளர்ச்சியை 7.5 சதவீதம் ஆகவும் வைத்துச்சென்ற நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஜி.டி.பி. வளர்ச்சியை 6 சதவீதத்திற்கு கீழாகக் குறைத்துள்ளது.
இளைஞர்களைப் பற்றி நிறைய பேசியுள்ள மத்திய நிதி மந்திரி வேலைவாய்ப்புகள் குறித்து எதுவும் பேசவில்லை. 15 முதல் 29 வயது வரையிலான இளைஞர்கள் கிராமப்புறங்களில் 8.3 சதவீதம், நகர்ப்புறங்களில் 13.8 சதவீதம் வேலையில்லாமல் இருக்கின்றனர். 25 வயதிற்கு உட்பட்ட படித்த இளைஞர்கள் 42 சதவீதம் பேர் வேலை இல்லாமல் இருக்கின்றனர்.
30 முதல் 34 வயது வரையிலான படித்த இளைஞர்கள் 9.8 சதவீதம் வேலையில்லாமல் இருக்கின்றனர். ஆனால் இது குறித்து ஒரு வார்த்தை கூட நிதிமந்திரி பட்ஜெட் உரையில் கூறவில்லை.
கடந்த 10 ஆண்டுகளாக இளைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாரின் கனவுகளை உடைக்கும் வேலையை தான் மத்திய அரசு செய்து வந்துள்ளது என தெரிவித்தார்.
- அனைத்து மொழிகளிலும் வெளியாகி இந்த படம் வசூலில் சாதனை படைத்துள்ளது.
- ரஜினிகாந்த் உட்பட பல்வேறு பிரபலங்களும் இப்படத்தை பாராட்டி வருகின்றனர்.
பெங்களூரு:
நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. முதலில் கன்னட மொழியில் மட்டுமே வெளியிடப்பட்ட இந்த திரைப்படம் விமர்சன ரீதியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், நல்ல வசூலையும் குவித்தது. இதையடுத்து, இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி வசூலில் சாதனை படைத்துள்ளது.
இந்தி மொழியில் மட்டும் ரூ.47 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. ரஜினிகாந்த் உட்பட பல்வேறு திரைப்பிரபலங்களும் இப்படத்தை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பெங்களூருவில் உள்ள திரையரங்கு ஒன்றில் தன்னார்வலர்கள் மற்றும் நலம் விரும்பிகள் குழுவுடன் இணைந்து இந்த திரைப்படத்தை பார்த்து ரசித்தார்.
இது குறித்து தமது டுவிட்டர் பதிவில், கந்தாரா திரைப்படம் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.நமது செழுமையான பாரம்பரியங்களை படம் பிடித்துக் காட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த திரைப்படத்தின் இயக்குநர் ரிஷப் ஷெட்டிக்கும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். இதையடுத்து மத்திய நிதி மந்திரிக்கு ரிஷப் ஷெட்டி நன்றி தெரிவித்து டுவிட் செய்துள்ளார்.
- விளிம்பு நிலை பிரிவினரின் ஒட்டுமொத்த பொருளாதார மேம்பாட்டை உறுதி செய்கிறது.
- அயராது முயற்சிகளை மேற்கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்
பிரதமரின் மக்கள் நிதித்தி்ட்டத்தை கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் 15ந் தேதி தமது சுதந்திர தின உரையில், பிரதமர் மோடி அறிவித்தார். இந்த திட்டத்தின் 8வது ஆண்டு தினத்தையொட்டி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கிய பெரும் முன்னெடுப்பு அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரமாகும். இது சமூகத்தின் விளிம்பு நிலை பிரிவினரின் ஒட்டுமொத்த பொருளாதார மேம்பாட்டை உறுதி செய்கிறது.
2014 ஆகஸ்ட் 28க்கு பின் பிரதமரின் மக்கள் நிதித்திட்ட கணக்கு வைத்திருப்போரில் 56 சதவீதம் பேர் பெண்கள், 67 சதவீத கணக்குகள் ஊரக மற்றும் சிறு நகரங்களில் உள்ளன. ரூ.1.74 லட்சம் கோடி வைப்புத் தொகை இருப்புடன் 46 கோடிக்கும் அதிகமான வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.
இதுவரை வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்குதல், பாதுகாப்பற்ற நிலையில் இருந்தவர்களை பாதுகாத்தல், நிதியுதவி கிடைக்கப் பெறாதவர்களுக்கு நிதியுதவி கிடைக்கச் செய்தல் போன்றவை திட்டத்தின் முக்கிய அம்சங்கள். இதன் மூலம் இதுவரை வங்கி சேவை கிடைக்காத பகுதிகளில் வங்கி சேவை வழங்குவதற்கும் வகை செய்துள்ளது.
மக்கள் நிதித் திட்ட கணக்குதாரர்களின் ஒப்புதலுடன் ஆதார் மற்றும் செல்போன் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைப்பதன் வாயிலாக, தகுதியுள்ள பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்டங்களில் நேரடி பணப்பரிமாற்றத்திற்கு வகை செய்துள்ளது.
பிரதமரின் கிசான் திட்டத்தின்கீழ், விவசாயிகளுக்கு நேரடி வருவாய், பிரதமரின் ஏழைகள் நலவாழ்வு திட்டத்தின்கீழ் பெண்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு ஊக்கத் தொகை பரிமாற்றம் உள்ளடக்கிய நிதி சூழல் உருவாக்கப்பட்ட கட்டமைப்பின் பலன், கொரோனா பெருந்தொற்று காலத்தில் தெரிந்தது.
பிரதமரின் மக்கள் நிதித்திட்ட அணுகு முறையை நாடு ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தை மாபெரும் வெற்றியடையச் செய்ய அயராது முயற்சிகளை மேற்கொண்ட கள அலுவலர்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்