என் மலர்
நீங்கள் தேடியது "யமுனை ஆறு"
- டெல்லி தேர்தலை ஒட்டி அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.
- யமுனை நதியில் அரியானா பாஜக அரசு நச்சு கலப்பதாக கெஜ்ரிவால் குற்றம் சாட்டி இருந்தார்.
டெல்லியில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் அவர் யமுனை நதியில் அரியானா மாநில பாஜக அரசு நச்சு கலப்பதாக குற்றம் சாட்டி இருந்தார். இதுகுறித்து பாஜக நிர்வாகிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர்.
அதன் பேரில் தேர்தல் ஆணையம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், இத்தகைய குற்றச்சாட்டுகள் இரு மாநிலங்களுக்கும் இடையேயான உறவை பாதிக்கக்கூடும். எனவே புகாருக்குரிய ஆதாரங்களுடன் இன்றிரவு 8 மணிக்குள் கெஜ்ரிவால் தனது பதிலை அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று டெல்லியில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், "பிரதமர் குடிக்கும் தண்ணீரில் அரியானா பாஜக அரசு விஷம் கலக்குமா? கெஜ்ரிவாலின் இந்த குற்றசாட்டு அரியானாவை மட்டுமில்ல ஒட்டுமொத்த இந்தியாவையும் அவமானப்படுத்தியுள்ளது. தண்ணீர் கொடுப்பதை நம் நட்டு மக்கள் நல்ல காரியமாக கருதுகிறார்கள். தோல்வி பயத்தால் அவர்கள் இப்படி உளறுகிறார்கள். இப்படி பேசுபவர்களுக்கு டெல்லி மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று நான் நம்புகிறேன்.
25 ஆண்டுகளாக காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளை பார்த்துவிட்டீர்கள். இப்போது உங்களுக்காக பணியாற்ற மோடிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். உங்களை குடும்பத்தைப்போல பார்த்துக்கொள்கிறேன். உங்களின் கனவு இனி எனதாக இருக்கும். கனவுகளை நிறைவேற்ற வலிமையை தாருங்கள்" என்று தெரிவித்தார்.
- ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் 6 பேரும் அடித்து செல்லப்பட்டனர். இதில் ஒருவர் மட்டும் நீந்தி கரை சேர்ந்தார்.
- மற்ற 5 பேரும் ஆற்றில் மூழ்கினார்கள். அவர்கள் கதி என்ன என்று தெரியாமல் இருந்தது.
நொய்டா:
உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியை சேர்ந்த 6 பேர் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கிருஷ்ணர் சிலையை அங்குள்ள யமுனை ஆற்றில் கரைக்க சென்றனர்.
ஆற்றின் நடுவில் கிருஷ்ணர் சிலை சிக்கி கொண்டது. அதனை மீட்க 6 பேரும் முயற்சித்தனர்.
அப்போது ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் 6 பேரும் அடித்து செல்லப்பட்டனர். இதில் ஒருவர் மட்டும் நீந்தி கரை சேர்ந்தார். மற்ற 5 பேரும் ஆற்றில் மூழ்கினார்கள். அவர்கள் கதி என்ன என்று தெரியாமல் இருந்தது.
இதுபற்றி அறிந்ததும் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று 5 பேரை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் ஆற்றில் மூழ்கிய அங்கித் (வயது20), லக்கி (20), லலித் (20), பீரு (20), ருத்ராஜ் (20) ஆகிய 5 பேரும் பிணமாக மீட்கப்பட்டனர்.
பின்னர் அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.