என் மலர்
நீங்கள் தேடியது "பூக்கள் விலை கிடுகிடு உயர்வு"
- நாளை ஆயுதபூஜை பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் கதம்பமாலை களுக்குப் பயன்படுத்தப்படும் பூக்களுக்கு கடும் கிராக்கி நிலவியது.
- அரளிப்பூ, செண்டுமல்லி, செவ்வந்தி பூ, வாடாமல்லி, கோழிக்கொண்டை ஆகிய பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்தது.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் கதம்ப மாலை கட்டுவதற்கு பயன்படும் பூக்களை வாங்குவதற்கு வியாபாரிகள் அதிக ஆர்வம் காட்டியதால் பூக்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது. இதனால் பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்தது.
நாளை ஆயுதபூஜை பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் கதம்பமாலை களுக்குப் பயன்படுத்தப்படும் பூக்களுக்கு கடும் கிராக்கி நிலவியது. அரளிப்பூ, செண்டுமல்லி, செவ்வந்தி பூ, வாடாமல்லி, கோழிக்கொண்டை ஆகிய பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்தது.
கடந்த காலங்களில் ஒரு பை ரூ.10 க்கு விற்பனையான அரளி அதிகபட்ச விலையாக ரூ.450 முதல் 500 வரை விற்பனையானது. அதேபோல் செண்டுமல்லி ரூ. 100 க்கும், கோழிக்கொண்டை ரூ. 80 க்கும், செவ்வந்தி ரூ. 150 க்கும், வாடாமல்லி ரூ. 60 க்கும், துளசி ரூ. 60 க்கும், பன்னீர் ரோஸ் ரூ. 150க்கும், பட்டன் ரோஸ் ரூ. 300க்கும், சம்பங்கி ரூ.200-க்கும் விற்பனையாகின.
கடந்த காலங்களில் அரளி, செண்டு மல்லி உள்ளிட்ட பூக்களுக்கு விலை கிடைக்காமல் இருந்த நிலையில் இந்த ஆயுத பூஜை, விஜயதசமியையொட்டி பூக்கள் விற்பனை மற்றும் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- நிலக்கோட்டை மற்றும் அதன்சுற்றுப்புற கிராமங்களில் புவிசார்குறியீடு பெற்ற மல்லிகைப்பூ அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
- கடும் பனிப்பொழிவால் பூக்கள் வரத்து குறைந்துள்ளதால் இந்த விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மற்றும் அதன்சுற்றுப்புற கிராமங்களில் புவிசார்குறியீடு பெற்ற மல்லிகைப்பூ அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதியில் விளையும் பூக்களுக்கு உள்ளூரில் மட்டுமின்றி வெளியூர்களிலும், வெளிமாநிலங்களிலும் நல்ல வரவேற்பு உள்ளது.
மேலும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த சில தினங்களாக மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் பூக்களை பறிக்க முடியாமல் வாடியும், கருகியும் வருகிறது. அதிகாலையில் பூக்களை பறிக்க வருவதற்கு கூலியாட்களும் பற்றாக்குறையாக உள்ளனர்.
கார்த்திகை மாதம் என்பதால் திருமண விேஷசம் மற்றும் கோவில் விழாக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக மல்லிகை ஒரு கிலோ ரூ.1700-க்கு விற்பனையானது. ஜாதிப்பூ ரூ.450, முல்லை ரூ.800, அரளி ரூ.150, செவ்வந்தி ரூ.80, சம்பங்கி ரூ.40, கனகாம்பரம் ரூ.350, காக்கரட்டான் ரூ.250, செண்டுமல்லி ரூ.50, பட்டன்ரோஸ் ரூ.120, பன்னீர்ரோஸ் ரூ.120, சாதா ரோஸ் ரூ.80, கோழிக்கொண்டை ரூ.30, துளசி ரூ.30க்கு விற்பனையானது.
பூக்கள் வரத்து குறைந்துள்ளதால் இந்த விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
- ஆவணிமாத முகூர்த்த நாட்களால் பூக்கள் விலை கிடுகிடு உயர்வால் மல்லிகை விலை ரூ.900க்கு விற்கப்பட்டது.
- நாளை மறுநாள் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப் படுவதாலும் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் பூமார்க்கெட்டுக்கு சின்னாளபட்டி, செம்பட்டி, கன்னிவாடி, தாடிக்கொம்பு, வெள்ளோடு, வடமதுரை, அய்யலூா உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பூக்கள் கொண்டுவரப்படுகிறது. இங்கிருந்து ஏராளமான வியாபாரிகள் பூக்களை வாங்கிச் செல்கின்றனர். திண்டுக்கல் மட்டுமின்றி வெளியூர்களுக்கும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கடந்த மாதம் வரை கோவில் விழாக்கள் மட்டுமே நடந்த நிலையில் திருமணம் உள்ளிட்ட எந்தவித விசேச நாட்களும் இல்லை. தற்போது ஆவணி மாதம் வளர்பிறை முகூர்த்தம் தொடங்கி உள்ளதாலும் நாளை மறுநாள் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப் படுவதாலும் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.
இதனால் அனைத்து பூக்களின் விலையும் அதிகரித்துள்ளது. ரூ.400 க்கு விற்கப்பட்ட மல்லிகை இன்று ரூ.900க்கு விற்கப்பட்டது. இேதபோல முல்லை ரூ.550, கனகாம்பரம் ரூ.600, ஜாதிப்பூ ரூ.300, செவ்வந்தி ரூ.150 முதல் ரூ.200 வரை, சம்பங்கி ரூ.120, அரளி ரூ.150, கோழிக்கொண்டை ரூ.50, செண்டுமல்லி ரூ.50, ரோஜா ரூ.120 என விற்பனை ஆனது.
பூக்கள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துளனர். நாளை மேலும் பூக்களின் விலை அதிகரிக்க கூடும் என்பதால் பெரும்பாலான வியாபாரிகள் இன்றே பூக்களை வாங்கிச் சென்றனர். இதனால் மார்க்கெட்டில் வியாபாரிகள் கூட்டம் அலைமோதியது.