என் மலர்
நீங்கள் தேடியது "தேவாலயம் அமைக்க எதிர்ப்பு"
- திண்டுக்கல் அருகே தேவாலயம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து புகார் செய்யப்பட்டுள்ளது
- இதுகுறித்து மாவட்ட கலெக்டர், எஸ்.பி. ஆகியோரிடம் மனு அளித்துள்ளனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே உள்ள கோபால்பட்டியைச் சேர்ந்த இந்து அமைப்பு மக்கள் தொடர்பாளர் கார்த்திகை சாமி, மாவட்ட கலெக்டர், எஸ்.பி., ஆர்.டி.ஓ., தாசில்தார் ஆகியோருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
திண்டுக்கல் அருகே உள்ள வேம்பார்பட்டி கிராமம் திருவேங்கடம் நகரில் குடியிருப்பு பகுதியில் தென்னிந்திய கத்தோலிக்க கிறிஸ்தவ சபை என்ற பெயரில் அரசு அனுமதியின்றி வழிபாட்டு தலம் அமைத்து வருகின்றனர்.
இப்பகுதியில் கட்டுமானப் பொருட்களையும் அதிக அளவில் குவித்து வைத்துள்ளனர். இதனால் அங்கு குடியிருக்கும் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல்வேறு சமுதாய மக்கள் வசித்து வரும் இப்பகுதியில் பிரச்சினை ஏற்படும் சூழலை ஒரு அமைப்பினர் செயல்படுத்தி வருகின்றனர்.
குடியிருப்பு பகுதியில் எந்த மதத்தினரும் வழிபாட்டு தலங்கள் அமைக்க கூடாது என்ற நிபந்தனையை மீறி செயல்பட்டு வரும் அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அங்குள்ள கட்டுமானப் பொருட்களை அகற்ற வேண்டும் எனவும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.