search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "5ஜி சேவை"

    • ஜம்மு- காஷ்மீர் மக்களுக்கு பல்வேறு பயன்பாட்டிற்கு அதிவிரைவு இணைய சேவை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • பெருநகரங்களில் 5-ஜி சேவையை ஜியோ, ஏர்டெல் அகிய தொலை தொடர்பு நிறுவனங்கள் வழங்கி வருகின்றனர்.

    இன்றைய நவீன உலகில் இணையத்தின் பங்கு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. உலகத்தையே நமது உள்ளங்கைக்குள் கொண்டு வந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

    தற்போது புழக்கத்தில் உள்ள 4ஜி சேவையைவிட பல மடங்கு வேகத்தை வழங்கும் 5 ஜி சேவையை இந்தியாவில் பிரதமர் மோடி கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கி வைத்தார். பல்வேறு பெருநகரங்களில் 5-ஜி சேவையை ஜியோ, ஏர்டெல் அகிய தொலை தொடர்பு நிறுவனங்கள் வழங்கி வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று ஜம்மு- காஷ்மீரில் ஜியோ 5ஜி சேவையை துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா கவர்னர் மாளிகையில் துவக்கி வைத்தார்.

    இதன் ஜம்மு- காஷ்மீர் மக்களுக்கு பல்வேறு பயன்பாட்டிற்கு அதிவிரைவு இணைய சேவை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • டிஜிட்டல் துறையில் தமிழகம் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்து வருகிறது.
    • ஸ்டேண்ட் அலோன் என்பது முற்றிலும் ஒரு புதிய தளமாகும்.

    சென்னை:

    இணைய தொழில்நுட்பத்தில் அபார வளர்ச்சியை அடைந்து வரும் இந்தியாவில் கடந்த அக்டோபர் 1-ந் தேதி 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.

    இதைத்தொடர்ந்து இந்தியாவில் உள்ள பல்வேறு முக்கிய நகரங்களில் 5ஜி சேவையை ஜியோ உள்ளிட்ட தொலை தொடர்பு நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி வருகின்றன.

    அந்தவகையில் சென்னையில் 5ஜி சேவையை ஜியோ நிறுவனம் ஏற்கனவே அறிமுகப்படுத்தியது.

    சென்னையை தொடர்ந்து மதுரை, திருச்சி, கோவை, சேலம், ஓசூர், வேலூர் ஆகிய 6 நகரங்களில் 5ஜி சேவையை ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

    இந்த நகரங்களில் 5ஜி சேவையை தொடங்கி வைக்கும் விழா சென்னை தியாகராயநகரில் உள்ள ஜி.ஆர்.டி. கன்வென்ஷன் மையத்தில் நேற்று நடந்தது.

    தமிழக தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விழாவில் கலந்து கொண்டு மதுரை உள்ளிட்ட 6 நகரங்களில் ஜியோவின் ட்ரூ 5ஜி சேவையை தொடங்கிவைத்தார்.

    விழாவில் அவர் பேசும்போது, 'டிஜிட்டல் துறையில் தமிழகம் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்து வருகிறது. ஜியோ நிறுவனத்தின் 5ஜி சேவை மூலம் தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பம் மேம்படும். கல்வி, சுகாதாரம், வேளாண்மை போன்றவற்றில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேம்பாடு அடைய ஜியோ நிறுவனம் மேற்கொண்டுள்ள முயற்சி பாராட்டுக்குரியது' என்றார்.

    விழாவில் ஜியோ நிறுவனத்தின் தமிழக நிர்வாக தலைவர் ஹேமந்த்குருசாமி பேசியதாவது:-

    இந்த ஆண்டு (2023) இறுதிக்குள் கிராமம், நகரம் என தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் 5ஜி சேவையை கொண்டு சேர்க்க திட்டமிட்டு உள்ளோம். மற்ற நிறுவனங்கள் செலவைக் குறைப்பதற்காக, 'ஸ்டேண்ட் அலோன்' நெட்வொர்க்குக்கு பதிலாக 'நான் ஸ்டேண்ட் அலோன்' நெட்வொர்க்கை பயன்படுத்தின.

    ஸ்டேண்ட் அலோன் என்பது முற்றிலும் ஒரு புதிய தளமாகும். இதன் காரணமாக 5ஜி சேவை மிக வேகமாகவும், சிறந்ததாகவும் இருக்கும். இந்த நெட்வொர்க்கை தயாரிக்க 4ஜி இயங்குதளம் பயன்படுத்தப்படவில்லை. இது அதிவேக இணையத்தை வழங்குவதோடு போன் அழைப்புகளின் தரமும் சிறப்பாக இருக்கும். இதன்மூலம் ஜியோவின் 5ஜி சேவை மட்டுமே உண்மையான 5ஜி சேவையாக இருக்கும்.

    தமிழகத்தில் 5ஜி சேவைக்காக ஜியோ நிறுவனம் ரூ.40 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது. இதன்மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மத்திய தொலை தொடர்பு துறையால் புதன்கிழமை நடைபெறும் உயர்மட்ட குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
    • டெல்லியில் கூட மிக குறைந்த அளவிலான கவரேஜ் கொண்ட சில 5ஜி டவர்கள் மட்டுமே உள்ளது என்றனர்.

    இந்தியாவில் ஐந்தாம் தலைமுறை இன்டர்நெட் வசதியான 5ஜி சேவையை சமீபத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதையடுத்து இந்தியாவில் முன்னணி தொலை தொடர்பு நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் சில முக்கிய நகரங்களில் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவையை தொடங்கிவிட்டதாக அறிவித்தன.

    ஆனால் பெரும்பாலான ஸ்மார்ட் போன்களில் அதற்கான மென்பொருள் அப்டேட் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படவில்லை. இதுபற்றி தொலைதொடர்பு துறைக்கு புகார்கள் சென்றன. குறிப்பாக 5ஜி போன்களை கொண்ட வாடிக்கையாளர்கள் கூட தங்கள் செல்போனில் அதன் சேவையை பெறவில்லை.

    இதைத்தொடர்ந்து செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய தொலைதொடர்பு துறை சம்மன் அனுப்பி உள்ளது.

    அதில் மத்திய தொலை தொடர்பு துறையால் புதன்கிழமை நடைபெறும் உயர்மட்ட குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    தொலை தொடர்பு செயலாளர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் சாம்சங், ஆப்பிள், ஓப்போ, விவோ, ஷியோமி, கார்போன், லாவா, மைக்ரோமேக்ஸ், மோட்டோரோலா உள்பட அனைத்து முக்கிய செல்போன் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா ஆகிய தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    இந்த கூட்டத்தில் 5ஜி அதிவேக இணையதள சேவையை செல்போன்களில் அளிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட மென்பொருள் அப்டேட் விரைவில் வெளியிடுவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

    இதுகுறித்து செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் கூறுகையில், தசரா நேரத்தில் 5ஜி சேவை அறிமுகம் செய்வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு சில 5ஜி டவர்கள் மட்டுமே உள்ளன. டெல்லியில் கூட மிக குறைந்த அளவிலான கவரேஜ் கொண்ட சில 5ஜி டவர்கள் மட்டுமே உள்ளது என்றனர்.

    • நாங்கள் பெரிய விளம்பரங்களை வெளியிடவில்லை.
    • நாட்டு மக்களின் வசதியை அதிகரிப்பதில் நாங்கள் கவனம் செலுத்தினோம்.

    டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் 5ஜி சேவையை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

    21ம் நூற்றாண்டில் வேகமாக வளரும் இந்தியாவுக்கு இன்று சிறப்பான நாள். 130 கோடி இந்தியர்கள் தொலைத்தொடர்புத் துறையிலிருந்தும் 5ஜி வடிவில் அற்புதமான பரிசைப் பெறுகிறார்கள். 5ஜி ஒரு புதிய சகாப்தத்தின் கதவுகளைத் தட்டுகிறது. 5ஜி எல்லையற்ற வாய்ப்புகளின் தொடக்கம். 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி தொழில்நுட்பங்களுக்காக இந்தியா மற்ற நாடுகளைச் சார்ந்து இருந்தது. ஆனால் 5ஜி மூலம் இந்தியா முதல் முறையாக தொலைதொடர்பு தொழில்நுட்பத்தை உலக தரத்தைப் பெற்றுள்ளது.

    மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டம் என்பது வெறும் பெயரல்ல, அது நாட்டின் வளர்ச்சிக்கான ஒரு பெரிய தொலைநோக்கு பார்வை. தொழில்நுட்பத்தை சாமானிய மக்களிடம் கொண்டு செல்வதே இந்த தொலைநோக்குப் பார்வையின் குறிக்கோள். 2014 ஆண்டில் மொபைல் போன்களை ஏற்றுமதி செய்யாத நாம், இன்று ஆயிரக்கணக்கான மொபைல் போன்களை ஏற்றுமதி செய்யும் நாடாக மாறியுள்ளோம். 


    தற்போது நாடு முழுவதும் 1.7 லட்சம் பஞ்சாயத்துகள் ஆப்டிகல் ஃபைபர் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. தொழில்துறைக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டன. 4ஜி தொழில் நுட்ப தரவுகளின் விலை உலகிலேயே இந்தியாவில் மிக குறைவு. ஒரு ஜி.பி. 300 ரூபாயில் இருந்து10 ரூபாயாக குறைந்தது. சில உயர் வகுப்பினர், ஏழைகள் டிஜிட்டலின் அர்த்தத்தைப் புரிந்துகொள்வார்களா என்று கேள்வி எழுப்பினர். தற்போது புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த அவர்கள் தயாராக இருக்கின்றனர்.

    நாங்கள் பெரிய விளம்பரங்களை வெளியிடவில்லை. நாட்டு மக்களின் வாழ்க்கைக்கான வசதியை எவ்வாறு அதிகரிப்பது என்பதில் நாங்கள் கவனம் செலுத்தினோம். முதல் மூன்று தொழில் புரட்சிகளால் இந்தியா பயனடையாமல் இருக்கலாம், ஆனால் 4வது தொழிற்புரட்சியின் முழுப் பலனையும் இந்தியா பெறும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • அடுத்த ஆகஸ்ட் 15-ந் தேதி முதல் பி.எஸ்.என்.எல். 5ஜி சேவை வழங்கப்படும்.
    • 2 ஆண்டுகளில் 90 சதவீத இடங்களில் 5ஜி சேவை வழங்க முயற்சி.

    டெல்லி பிரகதி மைதானத்தில் நடந்த 6-வது இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றையான 5ஜி சேவையை தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ், இன்னும் 6 மாதங்களில் நாட்டில் உள்ள 200-க்கும் மேற்பட்ட நகரங்களில் 5ஜி சேவை வழங்கப்படும் என்றார்.

    அடுத்த 2 ஆண்டுகளில் நாடு முழுவதும் 90 சதவீத இடங்களில் 5ஜி சேவை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதி முதல் பிஎஸ்என்எல் மூலம் 5ஜி சேவை வழங்கப்படும் என்றும், குறைந்த விலையில் 5ஜி சேவை கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

    • ஜியோ இந்த மாதத்திற்குள் 5G சேவைகளை வழங்குவதற்கு வேகமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.
    • டிசம்பர் 2023க்குள் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் 5ஜி சேவை உள்ளடக்கும்.

    டெல்லி பிரகதி மைதானத்தில் நடந்த 6-வது இந்திய கைப்பேசி மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். அப்போது, அதிவேக அலைக்கற்றை திறன் கொண்ட ஐந்தாம் தலைமுறை என்கிற 5ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

    5 ஜி சேவை சென்னை உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் முதலில் அறிமுகப்படுத்தப்படுகிறது. பின்னர் அடுத்த சில ஆண்டுகளில் படிப்படியாக விரிவுப்படுத்தப்படும் என்றும் இந்த சேவையின் மூலம் நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார தாக்கம் 2035 ஆண்டில் சுமார் ரூ.35 லட்சம் கோடியாக மதிப்பிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    முன்னதாக, மாநாட்டில் உலக பணக்காரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானி உரையாற்றினார்.

    அப்போது அவர், "தனது தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ டிசம்பர் 2023க்குள் நாடு முழுவதும் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தும்.

    ஜியோ இந்த மாதத்திற்குள் 5G சேவைகளை வழங்குவதற்கு வேகமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.

    மேலும், ஜியோ மலிவு விலையில் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்தும். டிசம்பர் 2023க்குள் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் 5ஜி சேவை உள்ளடக்கும்" என்று அவர் கூறினார்.

    • டெல்லி பிரகதி மைதானத்தில் நடந்த 6-வது இந்திய கைப்பேசி மாநாட்டை அவர் தொடங்கி வைத்தார்.
    • 5 ஜி அலைக்கற்றை ஏலம் மூலம் அரசுக்கு ரூ.1.50 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது.

    கடந்த 2018 முதல் ஐ.ஐ.டி.கள், பெங்களூர் விஞ்ஞான தொழில்நுட்ப நிறுவனம், மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகத்தின் நிறுவனமான 'சமீர்' போன்றவற்றின் தீவிர ஆய்வுக்கு பிறகு 5 ஜி சேவையை அளிக்க முடிவு செய்யப்பட்டது.

    தற்போது புழக்கத்தில் உள்ள 4 ஜி சேவையை விட பல மடங்கு வேகத்தை 5ஜி வழங்குகிறது. பின்னடைவு இல்லாத இணைப்பையும், நிகழ் நேரத்தில் தரவை பகிரும் உயர் தரவு விகிதம், கோடிக்கணக்கில் இணைக்கப்பட்ட சாதனங்களை இயக்கும் ஆற்றல் திறன், அலைக்கற்றை திறன் உள்ளிட்டவை நெட்வொர்க் செயல் திறனை அதிகரிக்க செய்யும்.

    5ஜி அலைக்கற்றை ஏலம் சமீபத்தில் விடப்பட்டது. ஜியோ, ஏர்டெல், வோட போன்-ஐடியா போன்ற நிறுவனங்களோடு அதானியின் நிறுவனம் சுமார் 26 ஜிகா ஹெர்ட்ஸ் அலை வரிசையில் 5 ஜி அலைக்கற்றையை ஏலத்தில் எடுத்துள்ளது.

    5 ஜி அலைக்கற்றை ஏலம் மூலம் அரசுக்கு ரூ.1.50 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது.

    இந்தநிலையில் அதிவேக அலைக்கற்றை திறன் கொண்ட ஐந்தாம் தலைமுறை என்கிற 5ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

    டெல்லி பிரகதி மைதானத்தில் நடந்த 6-வது இந்திய கைப்பேசி மாநாட்டை அவர் தொடங்கி வைத்தார். அப்போது தொலை தொடர்பின் திருப்புமுனையாக இருக்கும் 5 ஜி சேவையையும் மோடி அறிமுகப்படுத்தினார்.

    5 ஜி சேவை நாட்டின் முக்கிய நகரங்களில் முதலில் அறிமுகப்படுத்தப்படும். பின்னர் அடுத்த சில ஆண்டுகளில் படிப்படியாக விரிவுப்படுத்தப்படும். இந்த சேவையின் மூலம் நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார தாக்கம் 2035 ஆண்டில் சுமார் ரூ.35 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

    • அனைத்து நகரம், தாலுகா வாரியாக ஜியோ 5ஜி சேவை வழங்குவோம்.
    • மிக உயர்ந்த தரம் மற்றும் மலிவு விலையில் 5ஜி சேவை.

    மும்பை:

    ரிலையன்ஸ் நிறுவனத்தின் 45வது ஆண்டு பொதுக்கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இதில் பேசிய அதன் தலைவர் முகேஷ் அம்பானி கூறியதாவது:-

    ரிலையன்ஸ் ஜியோ உலகின் அதிவேக 5ஜி சேவை திட்டத்தை தயாரித்துள்ளது. தீபாவளிக்கு, டெல்லி, மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய மெட்ரோ நகரங்கள் உட்பட பல முக்கிய நகரங்களில் ஜியோ 5ஜி சேவையை அறிமுகப்படுத்துவோம். அடுத்த ஆண்டு டிசம்பருக்குள், இந்தியாவின் அனைத்து நகரம், தாலுகா வாரியாக ஜியோ 5ஜி சேவையை வழங்குவோம்.

    ஜியோ 5ஜி சேவை அனைவரையும், அனைத்து இடங்களையும் மிக உயர்ந்த தரம் மற்றும் மலிவு விலையில் இணைக்கும். சீனா மற்றும் அமெரிக்காவை விட இந்தியாவை தரவு பொருளாதாரமாக மாற்ற நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய ஜியோ அமைப்பின் தலைவர் ஆகாஷ் அம்பானி, இந்தியா முழுவதும் 5ஜி நெட்வொர்க்கை உருவாக்க 2 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என்று கூறினார்.

    ×