என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
இந்தியா
![இந்தியா முழுவதும் டிசம்பர் 2023க்குள் 5ஜி சேவை- முகேஷ் அம்பானி உறுதி இந்தியா முழுவதும் டிசம்பர் 2023க்குள் 5ஜி சேவை- முகேஷ் அம்பானி உறுதி](https://media.maalaimalar.com/h-upload/2022/10/01/1770447-ambani-123.jpg)
இந்தியா முழுவதும் டிசம்பர் 2023க்குள் 5ஜி சேவை- முகேஷ் அம்பானி உறுதி
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- ஜியோ இந்த மாதத்திற்குள் 5G சேவைகளை வழங்குவதற்கு வேகமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.
- டிசம்பர் 2023க்குள் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் 5ஜி சேவை உள்ளடக்கும்.
டெல்லி பிரகதி மைதானத்தில் நடந்த 6-வது இந்திய கைப்பேசி மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். அப்போது, அதிவேக அலைக்கற்றை திறன் கொண்ட ஐந்தாம் தலைமுறை என்கிற 5ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
5 ஜி சேவை சென்னை உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் முதலில் அறிமுகப்படுத்தப்படுகிறது. பின்னர் அடுத்த சில ஆண்டுகளில் படிப்படியாக விரிவுப்படுத்தப்படும் என்றும் இந்த சேவையின் மூலம் நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார தாக்கம் 2035 ஆண்டில் சுமார் ரூ.35 லட்சம் கோடியாக மதிப்பிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, மாநாட்டில் உலக பணக்காரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானி உரையாற்றினார்.
அப்போது அவர், "தனது தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ டிசம்பர் 2023க்குள் நாடு முழுவதும் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தும்.
ஜியோ இந்த மாதத்திற்குள் 5G சேவைகளை வழங்குவதற்கு வேகமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேலும், ஜியோ மலிவு விலையில் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்தும். டிசம்பர் 2023க்குள் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் 5ஜி சேவை உள்ளடக்கும்" என்று அவர் கூறினார்.