search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை கலெக்டர்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்தல் பிரசாரத்தில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்திருக்கிறது.
    • பிரதமர் மோடி நிகழ்ச்சியில் மாணவர்கள் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    கோவை:

    கோவையில் நேற்று பிரதமர் மோடி பங்கேற்ற பிரமாண்ட வாகன பேரணி நடைபெற்றது. இதில் பா.ஜ.கவினர், பொதுமக்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

    இவர்களுடன் பள்ளி சீருடை அணிந்த சில மாணவ-மாணவிகளும் மோடியை காண வரிசையாக நின்றனர். அவர்களுடன் ஆசிரியர்களும் இருந்ததாக கூறப்படுகிறது.

    தேர்தல் பிரசாரத்தில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்திருக்கிறது. அதனையும் மீறி பிரதமர் மோடி நிகழ்ச்சியில் மாணவர்களை பங்கேற்கச் செய்துள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர்.

    இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கிராந்திகுமார் பாடி கூறும்போது, பிரதமர் நிகழ்ச்சிக்கு பள்ளி மாணவர்கள் அழைத்து வரப்பட்டனரா என்பது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    மாணவர்கள் பள்ளி முடிந்து வீடு திரும்பும் வழியில் மோடியை பார்க்க அங்கு நின்றார்களா அல்லது அவர்களை யாராவது அழைத்து வந்திருந்தார்களா என்பது பற்றி விசாரணை நடக்கிறது.

    • மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக கலெக்டரிடம் வழங்கினர்.
    • இன்று காலை 9 மணிக்கு தொடங்கிய கள ஆய்வானது, நாளை காலை 9 மணி வரை நடக்கிறது.

    பொள்ளாச்சி:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண அரசு எந்திரம் களத்திற்கே வரும் என்ற அடிப்படையில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டத்தை அறிவித்தார்.

    இந்த திட்டத்தின் படி ஒவ்வொரு மாவட்ட கலெக்டரும், ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் தாலுகா அளவில் கிராமங்களில் தங்கி கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

    அதன் ஒருபகுதியாக கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி இன்று ஆனைமலை தாலுகா பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். ஆனைமலை தாலுகா அலுவலகத்திற்கு சென்ற அவர், அங்கு பொதுமக்கள், விவசாயிகளை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டு, மனுக்களை பெற்றுக்கொண்டார்.

    அதனை தொடர்ந்து, ஆனைமலை பகுதிகளில் நடைபெற்று வரும் அரசின் நலத்திட்ட பணிகள் மற்றும் அரசால் மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் முறையாக மக்களை சென்றடைகிறதா? என்பதையும் ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது மக்களையும் சந்தித்தார். அப்போது மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக கலெக்டரிடம் வழங்கினர். தொடர்ந்து அவர் ஆனைமலை பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கூட்டுறவு சங்கங்கள், அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நியாய விலைக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் துவாரகநாத் சிங், தாசில்தார் சிவகுமார் உடனிருந்தனர்.

    இன்று காலை 9 மணிக்கு தொடங்கிய கள ஆய்வானது, நாளை காலை 9 மணி வரை நடக்கிறது. இன்று இரவு ஆனைமலை பகுதியில் உள்ள சேத்துமடை கிராமத்தில் தங்கும் அவர் மக்களை நேரடியாக சந்திக்கிறார். அப்போது பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, அதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்த உள்ளார்.

    • தூண்களின் மேல் ஏறி விளம்பர பேனர் பொருத்தும் பணியில் சேலத்தை சேர்ந்த 7 தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
    • கடந்த ஒரு மாதத்தில் சுமார் 185 அனுமதியற்ற விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டு உள்ளது.

    கோவை:

    கோவையை அடுத்த கருமத்தம்பட்டி வடுகபாளையம் பிரிவு அருகே சாலையோரம், இத்தாலியன் பர்னிச்சர் நிறுவனத்தின் சார்பில் விளம்பர பேனர் அமைக்கும் பணி நடைபெற்றது. இதற்காக 60 அடி உயரத்திற்கு இரும்பு தூண்கள் அமைக்கப்பட்டு, அதில் பேனர் பொருத்தும் பணி நடைபெற்றது.

    இந்த தூண்களின் மேல் ஏறி விளம்பர பேனர் பொருத்தும் பணியில் சேலத்தை சேர்ந்த 7 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது வீசிய பலத்த காற்று காரணமாக அந்த இரும்பு தூண்கள் வளைந்து, சிறிது நேரத்தில் உடைந்து தரையில் விழுந்தது. இதில் இரும்பு தூண்களில் ஏறி வேலை பார்த்துக்கொண்டு இருந்த தொழிலாளர்களும் சிக்கினர். இந்த விபத்தில் சேலத்தை சேர்ந்த குமார், சேகர், குணசேகரன் ஆகிய 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் அனுமதியின்றி பேனர் வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இது குறித்து கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    கோவை மாவட்டத்தில் மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், நடைபாதைகள் ஆகிய இடங்களில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்கள், டிஜிட்டல் பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள், கொடிக்கம்பங்கள் ஆகியவற்றை அகற்றுவது தொடர்பாக அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது.

    அதன்படி கடந்த ஒரு மாதத்தில் சுமார் 185 அனுமதியற்ற விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டு உள்ளது. ஊராட்சி பகுதிகளில் விளம்பர பேனர்கள் அமைப்பதற்கு மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பித்து முறைப்படி அனுமதி பெற வேண்டும்.

    மேலும், விளம்பர பேனர்கள் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் அமைப்பதற்கு வழிகாட்டல் நெறிமுறைகளின்படி சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்தும், போலீசாரின் பரிந்துரையின்படியும் அனுமதி பெற வேண்டும்.

    கோவை மாவட்டத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களை அகற்ற உள்ளாட்சி அமைப்பினர் மற்றும் போலீசார் இணைந்து தனி குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன்படி, கோவை மாவட்டம் தெக்கலூர் - நீலம்பூர் நெடுஞ்சாலையில் உள்ள அனுமதியற்ற விளம்பர பலகைகளை உடனடியாக அகற்ற போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பினர் மூலம் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கருமத்தம்பட்டி பகுதியில் எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இன்றி விளம்பர பலகை அமைக்கும்போது, இரும்பு கம்பம் சரிந்து விழுந்து சேலத்தை சேர்ந்த 3 நபர்கள் உயிரிழந்தது தொடர்பாக, அனுமதியின்றி விளம்பர பலகை அமைக்க முயன்ற நிலத்தின் உரிமையாளர் மீதும், சம்பந்தப்பட்ட விளம்பர நிறுவனம் மீதும் கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கோவை மாவட்டத்தில் அனுமதியின்றி விளம்பர பலகைகள் அமைக்கப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர் மற்றும் விளம்பர நிறுவனத்தின் மீது தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • ஒயிலாட்ட பாடல்களுக்கு சிறுவர், சிறுமிகள் மற்றும் பெண்கள் நடனம் ஆடினர்
    • கலெக்டர் ஒயிலாட்டம் ஆடியதை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.

    நீலாம்பூர்,

    கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் பாரம்பரிய ஒயிலாட்டத்தை மீட்டெடுக்கும் விதமாக ஒயிலாட்ட அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் கோவை மாவட்ட கலெக்டர் சமீரன், கவுமாரமட ஆலய ஆதீனம் குருமரகுருபர சாமிகள், சூலூர் தொகுதி எம்.எல்.ஏ கந்தசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ஒயிலாட்ட அரங்கேற்றத்தை தொடங்கி வைத்தனர்.

    பல்வேறு ஒயிலாட்ட பாடல்களுக்கு சிறுவர், சிறுமிகள் மற்றும் பெண்கள் நடனம் ஆடினர். நடனத்தை ரசித்த கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் ஒயிலாட்டம் ஆடும் இடத்திற்கு வந்து பம்பை அடித்து ஒயிலாட்டம் ஆடினார்.

    அவருடன் ஒயிலாட்டக் கலைஞர்களும் நடனமாடியினர். இது அங்கிருந்த பொதுமக்களை கவரும் விதமாக இருந்தது. இது குறித்து ஒயிலாட்ட பயிற்சியாளரும், அரசு பள்ளி தலைமை ஆசிரியருமான கனகராஜ் கூறும்போது,

    பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் வகையில் கிராமம்தோறும் இலவசமாக ஒயிலாட்டம், காவடியாட்டம் கற்றுக் கொடுத்து வருகிறோம். கிராமிய கலைகளை பயிலும் இளைஞர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் பங்குபெற்ற பெண்கள் கூறும்போது, வீட்டிலேயே முடங்கி இருந்த தங்களுக்கு இது போன்ற பயிற்சி மிகவும் உற்சாகத்தையும், மன வலிமையையும் தருகிறது என்றனர்.

    • அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.4 லட்சம் மோசடி செய்ததின் பேரில் வழக்கு பதியப்பட்டது.
    • அரசு வேலைக்கான நியமன ஆணையை சுதர்சனிடம் சுபாகன் நிஷா கொடுத்ததாக தெரிகிறது.

    கோவை,

    கோவை இரும்பொறை பட்டாசுக்காரன் பாளையத்தை சேர்ந்தவர் சுதர்சன்(வயது 27).

    டிப்ளமோ படித்து முடித்துள்ள இவர் சரியான வேலை கிடைக்காமல் கூலி வேலைக்கு சென்று வருகிறார். இந்நிலையில் அவர் அரசு வேலைக்கு முயற்சி செய்துள்ளார்.

    அப்போது அவருக்கு கலெக்டர் அலுவலக பி.ஆர்.ஓ அலுவலக கணக்காளர் சுபாகன் நிஷா(35) என்பவர் அறிமுகமானார். அவர் சுதர்சனிடம் அரசு அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு சிலருக்கு பணம் கொடுக்க வேண்டி உள்ளது எனக் கூறி ரூ.4 லட்சம் கேட்டுள்ளார்.

    இதனையடுத்து அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சுதர்சன், சுபாகன் நிஷாவிடம் ரூ. 4 லட்சம் பணம் கொடுத்துள்ளார். அதன் பின்னர் வேலை வாய்ப்புக்கான எந்த ஒரு அழைப்பும் சுதர்சனுக்கு வரவில்லை.

    இதுகுறித்து அவர் சுபாகன் நிஷாவிடம் கேட்டுள்ளார். பின்னர் சிறிது நாட்கள் கழித்து அரசு வேலைக்கான நியமன ஆணையை சுதர்சனிடம் சுபாகன் நிஷா கொடுத்ததாக தெரிகிறது.

    அந்த ஆணையை சுதர்சன் சரிபார்த்த போது அது போலியானது என்பது தெரிய வந்தது.

    இதனால் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் இது குறித்து கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், அரசு வேலைக்கான போலி நியமன ஆணையை சுபாகன் நிஷா கொடுத்து ஏமாற்றி ரூ.4 லட்சம் மோசடி செய்தது தெரிய வந்தது.

    அவருக்கு உடந்தையாக கலெக்டர் அலுவலகத்தில் கருவூலத்துறையில் ஊழியராக வேலை பார்த்த சாந்தி என்பவர் இருந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ரேஸ்கோர்ஸ் போலீசார் கலெக்டர் அலுவலக பெண் ஊழியர்கள் சுபாகன் நிஷா மற்றும் சாந்தி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    முன்னதாக இதுகுறித்த புகாரின் பேரில் கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் பி.ஆர்.ஓ அலுவலக ஊழியர் சுபாகன் நிஷாவை கடந்த வாரம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • போலீசார் கலெக்டர் அலுவலகம் வரும் பொதுமக்களை தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதித்து வந்தனர்.
    • கலெக்டர் அலுவலகத்தில் 8 முறை மனு அளித்துள்ளேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    கோவை:

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்ப்பு முகம் இன்று நடைபெற்றது.

    இதில் மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கினர். இதையொட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    போலீசார் கலெக்டர் அலுவலகம் வரும் பொதுமக்களை தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதித்து வந்தனர். அப்போது ஒரு தம்பதியினர் மனு கொடுக்க வந்தனர். அவர்களை சோதனை செய்தபோது அவர்கள் டீசலை மறைத்து வைத்து கொண்டு வந்தது தெரியவந்தது.

    போலீசார் டீசல் கேனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்களது இடத்தை அண்ணன் - தம்பி 2 பேர் ஆக்கிரமிப்பு செய்துவிட்டு தொல்லை கொடுப்பதால் டீசலை ஊற்றி தற்கொலை செய்து கொள்ள வந்ததாக தெரிவித்தனர். போலீசார் அவர்களுக்கு அறிவுரை கூறி கலெக்டரிடம் மனு அளிக்க கூறினர்.

    இதனை தொடர்ந்து அந்த தம்பதியினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எனது பெயர் நாகராஜ் (வயது 54). எனது மனைவி திலகவதி (50). நாங்கள் பீடம்பள்ளி அருகே உள்ள கண்ணார் பாளையம் பகுதியில் வசித்து வருகிறோம். எங்களுக்கு அதே பகுதியில் நிலம் உள்ளது.

    இந்த நிலத்தை அங்குள்ள அண்ணன்- தம்பி 2 பேரும் ஆக்கிரமிப்பு செய்து கொண்டு எங்களுக்கு தொல்லை கொடுத்து வருகின்றனர்.

    இது சம்பந்தமாக கலெக்டர் அலுவலகத்தில் 8 முறை மனு அளித்துள்ளேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மன வேதனை அடைந்த நாங்கள் தற்கொலை செய்து கொள்ள டீசல் கேனுடன் வந்தோம்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    ×