என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அமெரிக்க ஓபன்"
- பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் அரினா சபலென்கா ஜெசிகா பெகுலாவுடன் மோதினார்.
- 7-5, 7-5 என்ற நேர் செட் கணக்கில் ஜெசிகா பெகுலாவை வீழ்த்தி சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் முன்னணி வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலாவுடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் சபலென்கா 7-5, 7-5 என்ற நேர் செட் கணக்கில் ஜெசிகா பெகுலாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
2-வது முறையாக அமெரிக்க ஓபனின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சபலென்கா தனது முதல் அமெரிக்க ஓபன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.
கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சபலென்கா அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப்யிடம் தோல்வியடைந்து இரண்டாம் இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதல் செட்டை 1-6 என கரோலினா கைப்பற்றினார்.
- அடுத்த 2 செட்டுகளை ஜெசிகா வென்று அசத்தினார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவும் செக் குடியரசு வீராங்கனையான கரோலினா முச்சோவாவும் மோதின.
இந்த ஆட்டத்தில் முதல் செட்டை கரோலினா கைப்பற்றினார். இதனையடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெசிகா அடுத்த இரண்டு செட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனால் 1-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் ஜெசிகா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். நாளை நடக்கும் இறுதிபோட்டியில் சபலென்கா மற்றும் ஜெசிகா பெகுலா மோதவுள்ளனர். முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டிக்கு பெகுலா தகுதி பெற்றுள்ளார்.
Believe it, Jessica Pegula!
— US Open Tennis (@usopen) September 6, 2024
You're in a Grand Slam final! pic.twitter.com/4VYlp8GtPq
- பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் சபலென்கா, எம்மா நவரோ மோதினார்.
- 2-வது முறையாக அமெரிக்க ஓபனின் இறுதிப்போட்டிக்கு சபலென்கா தகுதி பெற்றுள்ளார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரையிறுதி ஆட்டத்தில் முன்னணி வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்க வீராங்கனையான எம்மா நவரோவுடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் சபலென்கா 6-3, 7-6 (7/2) என்ற செட் கணக்கில் நவரோவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் 2-வது முறையாக அமெரிக்க ஓபனின் இறுதிப்போட்டிக்கு சபலென்கா தகுதி பெற்றுள்ளார்.
Aryna Sabalenka is pure entertainment, all the time.
— The Tennis Letter (@TheTennisLetter) September 6, 2024
This woman is great for tennis.
pic.twitter.com/aafH68oTZ7
- சின்னர் அரை இறுதிக்கு முதல் முறையாக தகுதி பெற்றார்.
- சின்னர் அரை இறுதியில் டிராப்பருடன் மோதுகிறார்.
நியூயார்க்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் முதல் நிலை வீரரான ஜானிக் சின்னர் (இத்தாலி) கால் இறுதி ஆட்டத்தில் 5-வது வரிசையில் இருக்கும் மெட்வதேவை (ரஷியா) எதிர்கொண்டார்.
இதில் சின்னர் 6-2, 1-6, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு முதல் முறையாக தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 2 மணி 39 நிமிட நேரம் தேவைப்பட்டது.
சின்னர் அரை இறுதியில் டிராப்பருடன் மோதுகிறார். 25-ம் நிலை வீரரான ஜேக் டிராப்பர் (இங்கிலாந்து) 6-3, 7-5, 6-2 என்ற செட் கணக்கில் 10- வது வரிசையில் உள்ள அலெக்ஸ் டி மினாரை (ஆஸ்திரேலியா) வீழ்த்தினார். 22 வயதான டிராப்பர் முதல் முறையாக கிராண்ட்சிலாம் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளார்.
- கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இகா ஸ்வியாடெக்கும் ஜெசிகா பெகுலாவும் மோதின.
- இந்த ஆட்டத்தில் இகா ஸ்வியாடெக் அதிர்ச்சிகரமாக தோல்வியடைந்தார்.
ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் முதல் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக்கும் 6-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவும் மோதின.
இந்த ஆட்டத்தில் இகா ஸ்வியாடெக் அதிர்ச்சிகரமாக தோல்வியடைந்தார். இகா 2-6, 4-6 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். ஜெசிகா பெகுலா முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் அரையிறுதி போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தார்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் ரோகன் போபண்ணா ஜோடி அரையிறுதியில் தோல்வி அடைந்தது.
நியூயார்க்:
நடப்பு ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-இந்தோனேசியாவின் அல்டிலா சுட்ஜியாடி ஜோடி, அமெரிக்காவின் டெய்லர் டவுன்செண்ட்-டொனால்ட் யங் ஜோடியுடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி 3-6, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் ரோகன் போபண்ணா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.
நியூயார்க்:
நடப்பு ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-இந்தோனேசியாவின் அல்டிலா சுட்ஜியாடி ஜோடி, செக் நாட்டின் பார்பரா பிரெஜ்சிகோவா-ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடியுடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி 7-6 (7-4), 2-6, 10-7 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.
- சின்னர் முதல் இரண்டு செட்களையும் டை-பிரேக்கர் வரை சென்ற நிலையில் கைப்பற்றினார்.
- ஸ்வியாடெக் ரஷிய வீராங்கனை சம்சோனோவாவை 6-4, 6-1 என எளிதில் வீழ்த்தினார்.
கிராணட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 5-ம் நிலை வீரரான ரஷியாவின் டேனில் மேட்வதேவ், தரநிலை பெறாத போர்ச்சுக்கல் வீரர் நுனோர் போர்ஜஸை எதிர்கொண்டார். இதில் மெட்வதேவ் 6-0, 6-1, 6-3 என நேர்செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இங்கிலாந்து வீரர் டிராப்பர் 6-3, 6-1, 6-2 என நேர்செட் கணக்கில் செக்குடியரசின் தாமஸ் மச்சாச்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
முதல் நிலை வீரரான இத்தாலியின் சின்னர் அமெரிக்காவின் டாமி பால்-ஐ எதிர்கொண்டார். முதல் இரண்டு செட்களும் டை-பிரேக்கர் வரை சென்றது. இருந்த போதிலும் சின்னர் 7(7)-6(3), 7(7)-6(5) என கைப்பற்றினார். அடுத்த செட்டை 6-1 என எளிதாக கைப்பற்றி காலிறுதிக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் காலிறுதி போட்டி ஒன்றில் ஸ்வரேவ்- பிரிட்ஸ் பலப்பரீட்சை நடத்துகிறார்கள். நாளை நடைபெறும் காலிறுதி போட்டிகளில் டிமிட்ரோவ்- தியாபோ, டிராப்பர்- டி மினாயுர் மோதுகிறார்கள்.
பெண்களுக்கான போட்டியில் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக், பிரேசில் வீராங்கனை ஹட்டாட் மையா காலிறுதிக்கு முன்னேறினர். ஸ்வியாடெக் ரஷிய வீராங்கனை சம்சோனோவாவை 6-4, 6-1 என எளிதில் வீழ்த்தினார்.
- சபலென்கா 6-2, 6-2 என நேர்செட் கணக்கில் பெல்ஜியம் வீராங்கனையை வீழ்த்தினார்.
- ஸ்வெரவ் 3-6, 6-1, 6-2, 6-2 என்ற கணக்கில் ஜப்பான் வீரரை வீழ்த்தினார்.
கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 4-வது சுற்று ஆட்டத்தில் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான சபலென்கா (பெலாரஸ்) 33-வது வரிசையில் உள்ள மெர்டன்சை (பெல்ஜியம்) எதிர்கொண்டார்.
இதில் சபலென்கா 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார். அவர் தொடர்ந்து 4-வது முறையாக கால் இறுதியில் ஆடுகிறார்.
26-வது வரிசையில் இருக்கும் பவ்லொ படோசா (ஸ்பெயின்) 4-வது சுற்றில் 6-1, 6-2 என்ற நேர்செட் கணக்கில் சீன வீராங்கனை யபான் வாக்கை வீழ்த்தினார்.
3-வது வரிசையில் இருக்கும் அமெரிக்காவை சேர்ந்த கோகோ காப் 4-வது சுற்றில் சக நாட்டவரான எம்மா நவரோவிடம் 3-6, 6-4, 3-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்றார்.
4-ம் நிலை வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரவ் (ஜெர்மனி) 3-6, 6-1, 6-2, 6-2 என்ற கணக்கில் நகாஷிமாவை (ஜப்பான்) வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.
6-ம் நிலை வீரரான ரூப்லெவ் (ரஷியா), 8-வது வரிசையில் இருக்கும் கேஸ்பர் ரூட் (நார்வே) ஆகியோர் 4-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார்கள்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் ரோகன் போபண்ணா ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.
நியூயார்க்:
நடப்பு ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-இந்தோனேசியாவின் அல்டிலா சுட்ஜியாடி ஜோடி,
ஆஸ்திரேலியாவின் ஜான் பீர்ஸ்-செக் வீராங்கனை கத்ரினா சினிகோவா ஜோடியுடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி 0-6, 7-6 (7-5), 10-7 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் ரோகன் போபண்ணா ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
நியூயார்க்:
நடப்பு ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போண்ணா-ஆஸ்திரேலியாவின் எப்டன் ஜோடி, ஸ்பெயினின் ராபர்ட் கார்பெலஸ்-அர்ஜென்டினாவின் பெடரிகோ கோரியா ஜோடியுடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.
இதேபோல் கலப்பு இரட்டைய பிரிவி இந்தியாவின் ரோகன் போபண்ணா-இந்தோனேசியாவின் அல்டிலா சுட்ஜியாடி ஜோடி, நெதர்லாந்தின் டெமி சர்ஸ்-ஜெர்மன் வீரர் டிம் புட்ஸ் ஜோடியுடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி 7-6 (9-7), 7-6 (7-5) என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.
- முதல் இரண்டு செட்டுகளை இழந்த ஜோகோவிச், அதன் அதிர்ச்சியில் இருந்து மீண்டு வர முடிவில்லை.
- 3-வது செட்டை 6-2 எனக் கைப்பற்றினாலும் 4-வது செட்டை 6-4 இழந்தார்.
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. 3-வது சுற்றில் 2-ம் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச், 28-ம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் அலேக்சி பாபிரின்-ஐ எதிர்கொண்டார்.
இந்த போட்டியில் ஜோகோவிச் எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜோகோவிச்சிற்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் 25 வயதான அலேக்சி பாபிரின் முதல் செட்டை 6-4, 2-வது செட்டை 6-4 எனக் கைப்பற்றி ஷாக் அளித்தார்.
ஆனால் 3-வது செட்டில் ஜோகோவிச் சிறப்பான விளையாடி 6-2 இந்த செட்டை கைப்பற்றினார். இதனால் அனுபவ வீரரான ஜோகோவிச் அடுத்த இரண்டு செட்டுகளையும் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 4-வது செட்டை 4-6 என இழக்க, 6-4, 6-4, 2-6, 6-4 என தோல்வியடைந்து அதிர்ச்சிகரமாக அமெரிக்க ஓபனில் இருந்து வெளியேறினார்.
ஏற்கனவே அல்காரஸ் 2-வது சுற்றில் தரநிலை பெறாத வீரரிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.
2 மற்றும் 3-ம் நிலை வீரர்களான ஜோகோவி் மற்றும் அல்காரஸ் காலிறுதிக்கு கூட முன்னேறாமல் வெளியேறியது டென்னிஸ் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்