search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்மாற்றிகள் அமைப்பு"

    • மின் நிலையம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
    • மின் கம்பிகளை புதைவட கம்பிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?

    சென்னை:

    சட்ட சபையில் இன்று கேள்வி நேரத்தின் போது மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ. மாதவரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மின் கம்பிகளை புதைவட கம்பிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, மாதவரம் தொகுதியில் 4 துணை மின் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு 3 துணை மின் நிலையம் அமைப்பதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு ஒப்பளிப்பு வழங்கப்பட்டு உள்ளது.

    மீதமுள்ள ஒரு துணை மின் நிலையம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது என்றார்.

    மதுரை மாவட்டம் கப்பலூர் தொழிற்பேட்டையில் மின் நுகர்வு அதிகமாக இருக்கும் காரணத்தினால் துணை மின் நிலையம் மற்றும் மின் மாற்றிகளை மாற்றி அமைக்கப்படுமா என்று உறுப்பினர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பினார்.

    இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளிக்கையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் 3 துணை மின் நிலையங்கள் அமைப்பது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் 3½ ஆண்டுகளில் 71,145 மின் மாற்றிகள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது என்றார்.

    • தேவராஜி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • 25 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது

    ஜோலார்பேட்டை:

    வாணியம்பாடி மின்வாரிய கோட்டத்திற்க்குட்பட்ட நாட்டறம்பள்ளி, ஜோலார்பேட்டை ஒன்றியங்களில் சுமார் ரூ.45 லட்சம் மதிப்பிட்டில் 15 மின்மாற்றிகள் துவக்க விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    இதில் திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.வுமான க.தேவராஜி கலந்து கொண்டு 63 கே வி ஏ, மின்மாற்றி-12, 25 கே வி ஏ மின்மாற்றி - 1, 16 கே வி ஏ மின்மாற்றி - 1, 100 கே வி ஏ மின்மாற்றி - 1 இயக்கத்தில் பொதுமக்களில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு 16 மின்மாற்றிகளை நேற்று தொடங்கி வைத்தார்.

    இதன் மூலம் நாட்றம்பள்ளி ஒன்றியத்தில் தும்பேரி, அரப்பாண்டகுப்பம், ஆவாரங்குப்பம், மல்லங்குப்பம், தெக்குப்பட்டு, பச்சூர், கொத்தூர், ஆத்தூர்குப்பம், ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் பெரியகம்மியம்பட்டு, பெரியமோட்டூர், மண்டலவாடி ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறுவார்கள்.

    மேலும் இதன்மூலம் சுமார் 25 விவசாயிகளுக்கு தமிழக அரசின் இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது. மேலும் மேற்கண்ட பகுதிகளில் குறைந்த மின் அழுத்தம் நீக்கப்பட்டு சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை மேற்கொ ள்ளப்பட்டுள்ளது.

    மேலும் இந்த மின்மாற்றிகள் தொடக்க விழா நிகழ்ச்சியின் போது வாணியம்பாடி செயற்பொறியாளர் பாஷா முகமது, நாட்டறம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.சாமுடி, ஜோலார்பேட்டை மத்திய ஒன்றிய செயலாளர் க.உமாகன்ரங்கம், ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் சி.கவிதாதண்டபாணி, நாட்டறம்பள்ளி ஒன்றியக்குழுத் தலைவர் வெண்மதிமுனிசாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.சிங்காரவேலன், நாட்டறம்பள்ளி ஒன்றியக்குழு துணைத் தலைவர் டி.தேவராஜி, அவைத்தலைவர் சாமண்ணன் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

    ×