என் மலர்
நீங்கள் தேடியது "பர்கூர் சாலையில்"
- பர்கூர்-கர்நாடகா செல்லும் பிரதான சாலை பகுதியில் பர்கூர் போலீஸ் நிலையம் அருகே அமைந்துள்ள சாலையில் ஒற்றை யானை சென்றது.
- இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதி உள்ளது. இந்த மலை பகுதிகளில் யானை, மான், கரடி செந்நாய் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இதில் வனப்பகுதி ஒட்டியுள்ள பகுதிகளில் அவ்வப்போது ஒற்றை யானை ஊருக்குள் பூகுவது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் பர்கூர்-கர்நாடகா செல்லும் பிரதான சாலை பகுதியில் பர்கூர் போலீஸ் நிலையம் அருகே அமைந்துள்ள சாலையில் ஒற்றை யானை சென்றது.
இதனால் சாலையில் செல்லக்கூடிய இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன ஒட்டிகள் வாகன த்தை ஓரமாக நிறுத்தினர். சில வாகன ஓட்டிகள் தங்களது செல்போன்களில் யானையை படம் பிடித்தனர்.
சுமார் அரை மணி நேரம் சாலையில் வலம் வந்த ஒற்றை யானை யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்காமல் பர்கூர் போலீஸ் நிலையத்தில் பின்புற மதில் சுவற்றின் வழியாக வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.