search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவிரி கரையோரம் இருந்த"

    • ஆற்றில் அதிக தண்ணீர் செல்வதால் ஒரு ஓட்டு வீடு சேதம் ஏற்பட்டு வீட்டை வெள்ளம் சூழ்ந்து திடீரென இடிந்து விழுந்தது.
    • இதுகுறித்து தகவல் அறிந்ததும் பவானி நகர தி.மு.க. செயலாளர் நாகராஜன் மற்றும் பவானி நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு சேதமான பகுதிகளை பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.

    பவானி:

    மேட்டூர் அணை நிரம்பி யதை யொட்டி அணையில் இருந்து வினாடிக்கு சுமார் 1.75 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. இதனால் காவிரி ஆற்றில் இருகரைகளையும் தொட்டப்படி தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது.

    இதேபோல் அம்மா பேட்டை, பவானி பகுதி களில் உள்ள காவிரி ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்கிறது.

    இதையொட்டி பவானி மற்றும் அம்மா பேட்டை பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பாதுகாப்பு கருதி அந்த பகுதியில் குடியிருந்த பொதுமக்கள் அருகே உள்ள பள்ளி மற்றும் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    மேலும் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக எதிர் பார்க்கப்படுகிறது. இதனால் வெள்ளம் சூழ்ந்த ஒரு சில வீடுகள் பாதிப்பு அடைந்து வருகிறது.

    இந்த நிலையில் பவானி பாலக்கரை பகுதியை சேவர்ந்தவர் சிலம்பரசன். இவரது மனைவி முனிரத்தினம். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் வீடு பாலக்கரை பகுதியில் காவிரி கரை யோரம் அமைந்துள்ளது.

    ஆற்றில் அதிகளவவு தண்ணீர் செல்வதால் இவர் களது வீட்டையும் வெள்ளம் சூழ்ந்தது. இதையொட்டி அவர்கள் ௪ பேரும் அருகே உள்ள ஒரு முகாமில் தங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் நள்ளிரவில் ஆற்றில் அதிக தண்ணீர் செல்வதால் அவர்களது வீடு ஓட்டு வீடு என்பதால் சேதம் ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் அவர்களது வீடு வெள்ளம் சூழ்ந்து திடீரென இடிந்து விழுந்தது. அவர்கள் முகாமில் தங்க வைக்கப்பட்ட தால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் பவானி நகர தி.மு.க. செயலாளர் நாகராஜன் மற்றும் பவானி நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு சேதமான பகுதிகளை பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.

    ×