என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தாணுமாலயசாமி"
- பிரம்மனின் கண்களில் பிறந்தவர் அத்திரி முனிவர்.
- பரந்தாமனை நோக்கி தவம் செய்தனர்.
நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் சாலையில் 5 கி.மீ. தொலைவில், பழையாற்றின் கரையில் அமைந்துள்ளது சுசீந்திரம். இந்த ஊரில் பிரசித்தி பெற்ற தாணுமாலயசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த கோவில் தொடர்பாக அத்திரி அனுசூயை கதை, இந்திரன் சாப விமோசனம் பெற்ற கதை, அறம் வளர்த்த அம்மன் கதை, கன்னியாகுமரி பகவதிஅம்மன்- தாணு (சிவன்) திருமணம் தடைப்பட்ட கதை என 4 கதைகள் உள்ளன. முதல் இரண்டு கதைகளும் புராணம் தொடர்புடையவை.
அறம் வளர்த்த அம்மன் கதை வட்டார சார்புடையது. திருமணம் தடைப்பட்ட கதை வாய்மொழியாக பேசப்படுகிறது. குழந்தைகளாக மாறினர்
பிரம்மனின் கண்களில் பிறந்தவர் அத்திரி முனிவர். வனவாசத்தின்போது ராமன் இவரது ஆசிரமத்தில் தங்கிச் சென்றார் என ராமாயணம் கூறுகிறது.
அத்திரியின் மனைவி அனுசூயை. இருவருக்கும் நீண்ட நாட்கள் குழந்தை இல்லை. இதனால் பரந்தாமனை நோக்கி தவம் செய்தனர். அப்போது இறைவன் அவர்களிடம் `யாருக்கும் கிடைக்காத பாக்கியம் உங்களுக்கு கிடைக்கும். பொதிகை மலையின் அருகே ஞானகான வனம் உள்ளது. அங்கே நீங்கள் தவம் செய்து பலன் பெறுங்கள்' என்றார்.
அதன்படி இருவரும் ஞானகான வனம் சென்றனர். அந்த சமயத்தில் அத்திரி, இந்திரனின் வேண்டுகோளால் இந்திரலோகம் சென்றுவிட்டார். இதனால் அனுசூயை தனியே இருந்து தவம் செய்தாள். அவளைச் சோதிக்க விரும்பிய மும்மூர்த்திகள் (சிவன், விஷ்ணு, பிரம்மா) ஞானகான வனத்தில் மழையில்லாமல் ஆக்கினர். வனம் வறண்டது. தவம் செய்யக்கூட நீர் இல்லை. அனுசூயை கணவனின் கமண்டல நீரை ஞானகான வனத்தில் தெளித்தாள். மழை பெய்தது.
இப்படி இருக்கும்போது மும்மூர்த்திகள் அனுசூயையைச் சோதிக்க எண்ணி யாசகர்களாக அவரிடம் வந்தனர். அவள் வீட்டின் முன் நின்று யாசகம் கேட்டனர்.அவள் அவர்களை உபசரித்து வரவேற்றாள்.
அப்போது மும்மூர்த்திகள் அவளிடம், 'நீ ஆடையின்றி உணவு படைக்க வேண்டும்' என கட்டளை இட்டனர். இதை கேட்ட அனுசூயை தன் கற்பின் மகிமையால் அவர்களை குழந்தைகளாக்கி தொட்டிலில் கிடத்தினாள். இதையறிந்த மூன்று தேவிகளும் ஞானகான வனம் வந்து தவம் இருந்து அவர்களை மீட்டனர்.
அத்திரி-அனுசூயை வேண்டுகோள்படி மும்மூர்த்திகளும் சந்திரன், தாத்ரேய முனிவர், துர்வாசர் ஆகியோராகப் பிறந்தனர். இத்தகைய சிறப்புடைய தலம் சுசீந்திரம்.
சுசீந்திரம்
இந்திரன் சாபவிமோசனம் பெற்ற கதையும் இந்த கோவில் தலபுராணத்துடன் தொடர்புடையது. அது கவுதமர், அகலிகை, இந்திரன் தொடர்பான கதை. ராமாயணத்தில் இடம்பெற்றுள்ளது. அகலிகைமேல் ஆசைப்பட்டதால் இந்திரன் சாபம் பெற்றான். சாபவிமோசனம் பெற ஞானகான வனத்திற்கு இந்திரன் வந்தான். அவனது தேர் ஞானகான வனத்தின் ஒருபுறம் நின்றது. அதுதான் இன்று தேரூர் என அழைக்கப்படுகிறது. ஐராவதம் யானை மருந்துவாழ்மலைக்கு வந்தது. அது தன் கொம்பால் தரையைக் கீறி ஆற்றை உண்டாக்கியது. அதுதான் கோட்டார் எனப்பட்டது.
இந்திரன் தவம் பலித்தது. தாணுமாலயன் அவன் முன் தோன்றினான். இந்திரன் சாபவிமோசனம் பெற்ற இடமே சுசீந்திரம் ஆயிற்று.
சுசீந்திரம் கோவில் இறைவியாக கருதப்படும் அறம்வளர்த்த அம்மனின் கதை ஒன்று உண்டு. சுசீந்திரம் ஊரை அடுத்த தேரூர் என்ற ஊரில் வாழ்ந்த பள்ளியறை நாச்சியார் என்ற கன்னி தாணுமாலயன் கோவிலுக்கு வந்தாள். கோவிலை சுற்றி வந்தபோது அவள் மாயமாக மறைந்தாள். இறைவன் அவளை ஆட்கொண்டான். இந்த நிகழ்ச்சி கி.பி. 1444-ம் ஆண்டு நடந்ததாக புராணக்கதை கூறுகிறது. இதன் நினைவாக இந்த கோவிலில் மாசிமாதம் திருக்கல்யாணம் நடக்கிறது.
கன்னியாகுமரி அம்மனை போலவே, மகிஷாசூரனை வதம் செய்து சுசீந்திரத்தில் அன்னை ஆதிபராசக்தி, 'முன்னுதித்த நங்கை அம்மன்' எனும் திருநாமத்தில் கோவில் கொண்டிருக்கிறாள். ரம்பன் எனும் அசுரன் அக்னி பகவானை வழிபட்டு, நினைத்த உருவத்தை நொடியில் எடுக்கும் வரம் பெற்றிருந்தான்.
ஒருநாள் காட்டில் அழகிய பெண் எருமையைக் கண்டான். அந்த பெண் எருமை, தன் முற்பிறப்பில் சியாமளா என்ற அழகிய ராஜகுமாரியாக இருந்து சாபத்தினால் எருமையாகியிருந்தாள். ரம்பனுக்கு நினைத்தபோது தன்னை மாற்றிக்கொள்ள முடியும் என்பதால், அவன் ஆண் எருமையாக மாறி அந்த பெண் எருமையுடன் மகிழ்ந்து இருந்தான்.
அந்த உறவால் எருமை தலையுடன் மகிஷாசூரன் பிறந்தான். அவன் பிரம்மாவை நோக்கி கடுந்தவம் செய்தான். அந்த தவத்தின் மூலமாக 'பெண்ணால் மட்டுமே தனக்கு மரணம் வேண்டும்' என வரம் பெற்றான்.
முன்னுதித்த நங்கை
அந்த ஆணவத்தின் காரணமாக பூலோகம் முழுவதையும் வென்று, தேவலோகத்தையும் கைப்பற்றினான். இதையடுத்து மகிஷாசூரனை அழிக்க சிவபெருமான், தம்மில் இருந்து கருநிறத்தில் ஒரு ஒளியை தோற்றுவித்தார். அதனுள் விஷ்ணுவிடமிருந்து தோன்றிய வெண்மை நிற ஒளி சென்று கலந்தது. கூடவே பிரம்மாவிடமிருந்து தோன்றிய சிவப்பு நிற ஒளியும் ஒன்றாகி கலந்தன. அந்த ஒளிப்பிழம்புகளில் இருந்து அன்னை பராசக்தி உதித்தாள்.
பின்னர் மும்மூர்த்திகளான சிவன், பிரம்மா, விஷ்ணு மற்றும் தேவர்கள் வழங்கிய ஆயுதங்களைக் கொண்டு மகிஷாசூரனை பராசக்தி வதம் செய்தாள். வெற்றிக்களிப்பில் அன்னை தெற்கு நோக்கி வந்து ஆனந்தமாய் நிலை கொண்ட திருத்தலமே, சுசீந்திரம்.
கவுதமரின் சாபம் நீங்க இந்திரன், 300 தேவகன்னியரை சாட்சியாக வைத்து வேள்வி செய்து பூஜித்தபோது அவர்கள் முன்பாக ஜோதி ரூபியாக உதித்து நின்று திருக்காட்சி அளித்தாள், அன்னை. இதனால் அவள் 'முன்னுதித்த நங்கை' என்று அழைக்கப்பட்டாள்.
முன்பு ஒரு முறை சுசீந்திரம் பகுதியில் ஆசிரமம் அமைத்த அத்திரி முனிவர், தனது மனைவி அனுசூயைதேவியுடன் அங்கு வசித்து வந்தார். அனுசூயை தேவியின் பொருட்டு மும்மூர்த்திகளும் குழந்தைகளாய் அவதரித்தனர். அவர்களுக்கு பாலூட்டி, தொட்டிலில் இட்டு சீராட்டினாள் அனுசூயைதேவி.
மும்மூர்த்திகளையும் தேடி சுசீந்திரம் வந்தனர் முப்பெரும் தேவிகளான பார்வதி, லட்சுமி, சரஸ்வதி மூவரும். ஆனால் மும்மூர்த்திகளும் குழந்தைகளாய் மாறியதால், தேவியர்களால் அவர்களை அடையாளம் காண முடியவில்லை.
அப்போது நாரத முனிவர் வழிகாட்ட, மூன்று தேவியர்களும் அருகில் இருந்த முன்னுதித்த நங்கை அம்மன் ஆலயத்தின் முன்புறம் உள்ள தீர்த்தக் குளத்தில் நீராடி, ஒரு மண்டலம் நோன்பு இருந்து, முன்னுதித்த நங்கை அம்மனை வழிபட்டு வந்தனர்.
அப்போது அன்னை ஆதிபராசக்தி, முப்பெரும் தேவியரின் முன் உதித்து அருள்பாலித்ததோடு, குழந்தைகளாக இருந்த மும்மூர்த்திகளையும் அடையாளம் காட்டினாள்.
சுசி பீடம்
51 சக்தி பீடங்களில் இத்தலம் அம்பிகையின் பிருகு பீடமாக போற்றப்படுகிறது. இதனை `சுசி பீடம்' என்றும் கூறுகிறார்கள். இந்த தலத்தில் அம்பிகையை `நாராயணி' என்றும், `அகோர தேவி' என்றும் போற்றுகிறார்கள். சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் தெப்பக்குளக்கரையின் வடக்கில் முன்னுதித்த நங்கை அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்திரன் விரும்பிய இடமும், அம்பிகையின் பிருகுபீடம் என்று அழைக்கப்படும் சுசி பீடமும் தான் சுசீந்திரம் என்ற பெயர் உருவாக காரணமாக சொல்லப்படுகிறது.
- இந்த மாதத்துக்கான அன்னதானம் உண்டியல் எண்ணும் பணி நேற்று நடந்தது
- கோவில் பணியாளர்கள் உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி :
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் அன்னதான உண்டியல் ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது.
இந்த அன்னதான உண்டியல் மாதந்தோறும் திறந்து எண்ணப்படு வது வழக்கம். அதேபோல இந்த மாதத்துக்கான அன்னதானம் உண்டியல் எண்ணும் பணி நேற்று நடந்தது. கோவில் மேலாளர் ஆறுமுகதரன் தலைமையில் ஆய்வாளர் ராமலட்சுமி, கணக்கர் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் இந்த உண்டியல் எண்ணும் பணி நடந்தது. கோவில் பணியாளர்கள் உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் அன்னதான உண்டியல் மூலம் ரூ.76 ஆயிரத்து 708 வசூல் ஆகி இருந்ததாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
- கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது
- திருவிழா ஏற்பாடுகளை அரசு அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி பெருந்தி ருவிழா ஆண்டுதோறும் சிறப் பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான மார்கழி திரு விழா நாளை (புதன்கிழமை) காலையில் கொடியேற்றத்து டன் தொடங்குகிறது.
இந்த திருவிழா வருகிற 6-ந்தேதி வரை 10 நாட்கள் வெகு விமரிசையாக நடக்கி றது. இதனையொட்டி நேற்று காலை 9 மணிக்கு மேல் கோவிலில் உள்ள சித்திரசபை மண்டபத் தில் மஞ்சள் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது.
சித்திரை சபை மண்டபத் தில் உள்ள நடராஜமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபா ராதனைகள் நடந்தன. தொடர்ந்து 18 ஊர் பிடாகை கள், வட்டப்பள்ளி மடம் ஸ்தானிகர் டாக்டர் சிவ பிர சாத், தெற்கு மண்மடம் நித் திய காரிய யோகஸ்தானிகர் திலீப் நம்பூதிரி, மற்றும் பக்தர்கள் முன்னிலையில் திருவிழா நோட்டீசுக்கு மஞ்சள் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4.30 மணிக்கு கோட்டார் இடலாக்குடி ருத்ரபதி விநாயகர் கோவிலில் இருந்து மரபுப்படி பட்டாரி யார் சமுதாயத்தினர் கொடிப் பட்டத்தை மேளம், தாளம், வெடிமுழக்கத்துடன், முத்துக் குடை ஏந்தி ஊர்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது. சுசீந்திரம் கோவில் நுழைவு வாயில் முன்பு ஊர் மக்கள் சார்பில் கொடிப்பட் டத்திற்கு வரவேற்பு கொடுக் கின்றது. தொடர்ந்து கொடிப்பட்டம் 4 ரத வீதிகள் வழியே ஊர்வலமாக கொண்டு செல் லப்பட்டு கோவில் அதிகாரி யிடம் ஒப்படைக்கப்படுகிறது.
தொடர்ந்து நாளை காலை 9.15 மணிக்கு மேல் தாணுமாலய சன்னதி யின் எதிரே உள்ள கொடி மரத்தில் தெற்கு மண் மடம் ஸ்தானிகர்கொடி யேற்றி வைக்கிறார். வட்டப் பள்ளி மடம் ஸ்தானிகர் சிறப்பு பூஜைகளை செய்கி றார். தொடர்ந்து திருமுறை பெட்டக ஊர்வலம் கோவி லில் இருந்து எடுத்துவரப் பட்டு 4 ரத வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல் லப்பட்டு கோவில் அதிகாரி யிடம் ஒப்படைக்கப்படுகிறது.
விழா நாட்களில் தினமும் மாலையில் கோவில் கலைய ரங்கத்தில் சமய சொற்பொ ழிவு, சொல்லரங்கம், பக்தி மெல்லிசை, பக்தி இன்னிசை, பரத நாட்டியம் போன்ற பல் வேறு கலை நிகழ்ச்சிகள் நடை பெறுகிறது.
விழாவில் 3-ம் நாள் திருவிழாவான 30-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 11 மணிக்கு கோட்டார் வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி, வேளிமலை குமாரசு வாமி ஆகியோர் தனது தாய், தந்தையர் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சியை காண வரும் மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சியும், 5-ம் திருவிழாவான 1-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு பஞ்சமூர்த்தி தரிசனமும், 6 மணிக்கு வீர மார்த்தாண்ட விநாயகர் கோவில் முன்பு சுவாமி, அம்பாள், பெருமாள், மும்மூர்த்திகளை கருடன் வலம் வரும் நிகழ்ச்சியும், 7-ம் திருவிழாவான 3-ந் தேதி இரவு 10.30 மணிக்கு கைலாச பர்வத வாகனத்தில் சுவாமி வீதியுலா வும், 9-ம் திருவிழாவான 5-ந் தேதி காலை 8 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது. இதில் சுவாமி தேர், அம்மன் தேர், பிள்ளையார் தேர் ஆகிய மூன்று தேர்கள் உலா வருகின்றன.
தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு சப்த வர்ண காட்சி நடக்கிறது. திருவிழாவின் இறுதி நாளான 6-ந்தேதி அதி காலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், மாலை 5 மணிக்கு நடராஜமூர்த்தி வீதி உலா வருதலும், இரவு 9 மணிக்கு ஆராட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக் கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.
- கோவிலின் தல வரலாறு, திருவிழாக்கள் மற்றும் தேரோட்டம் குறித்த அரிய தகவல்கள் சுமார் 30 நிமிடம் ஓடும்
- 25 பக்தர்கள் அமர்ந்து அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு
கன்னியாகுமரி:
தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் அறிவுறுத்தலின்படி தமிழ கத்தில் உள்ள சிறப்புமிக்க கோவில்களின் தல வரலாற்றை பக்தர்கள் அறிந்துக் கொள்ளும் வகையில் தமிழ்மொழியில் மொழி பெயர்த்து கோவிலின் சிறப்பு மற்றும் திருவிழா குறித்து பக்தர்கள் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த அடிப்படையில் குமரி மாவட்டத்தில் உள்ள பிரச்சித்தி பெற்ற கோவிலாக திகழும் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் தல வரலாற்றை கோவிலுக்கு வரும் பக்தர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் ரூ.8½ லட்சம் செலவில் 60 இன்ச் தொலைக்காட்சி பெட்டிகள் கோவில் முகப்பில் மற்றும் நவக்கிரக மண்டபம் அருகில் பெரிய அளவில் வைக்கப் பட்டுள்ளது.
தொலைக்காட்சியில் கோவிலின் தல வரலாறு, திருவிழாக்கள் மற்றும் தேரோட்டம் குறித்த அரிய தகவல்கள் சுமார் 30 நிமிடம் ஓடும் காட்சிகள் அமைக்கப் பட்டுள்ளது. 25 பக்தர்கள் அமர்ந்து அறிந்து கொள்ளும் வகையில் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒளிரப்பு நேற்று மாலை முதல் தொடங்கியது. இதனை குமரி மாவட்டதிருக் கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் பார் வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில் தேவசம் பொறியாளர்கள் ராஜ்குமார். அய்யப்பன், திருக்கோவில் அலுவலக கணக்கர் குற்றாலிங்கம், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண் ணன் மற்றும் திரளானோர் கலந்து கொண்டனர்.
மேலும் கோவிலுக்கு வரு கின்ற சுற்றுலா பயணிகளுக்கும், பக்தர்களுக்கும் தல வர லாற்றை எடுத்துக் கூறும் வகையில் கோவில் பணியா ளர்கள் 3 பேரை சுற்றுலா வழி காட்டியாகவும் திருக்கோவில் நிர்வாகம் நியமித்துள்ளது. இதற்கிடையே திருக்கோவில் நிர்வாகம் சார்பில் ரூ.3 லட்சம் செலவில் ஆன்மிக புத்தக நிலையம் ஒன்றும் அமைக்கப்பட்டு அதற்கான பணிகளும் தீவிரமாக நடை பெற்று வருகிறது.
- திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
- 10-ந் தேதி மாலை 5 மணிக்கு 4 ரத வீதிகளில் தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது.
கன்னியாகுமரி:
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் சித்திரை, ஆவணி, மார்கழி, மாசி மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் ஆவணி மாத திருவிழாவை தவிர மற்ற 3 திருவிழாக்களும் தாணுமாலய சாமிக்கு நடைபெறும்.
ஆவணி மாத திருவிழா மட்டும் திருவேங்கடம் விண்ணவரம் பெருமாளுக்கு நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆவணி திருவிழா நாளை (2-ந் தேதி) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. நாளை காலை 9 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. மாத்தூர் மடம் தந்திரி சங்கர நாராயணரூ கொடியேற்றி வைக்கிறார்.
திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம் காலை மற்றும் மாலை வேளை களில் நடக்கிறது. 9-ம் திருவிழா நாளான 10-ந் தேதி மாலை 5 மணிக்கு இந்திரன் தேராகிய சப்பர தேரில் பெருமாள், ஸ்ரீ தேவி, பூதேவி ஆகியோர் 4 ரத வீதிகளில் உலா வரும் தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது. 10ந் திருவிழாவான 11-ந் தேதி திரு ஆராட்டு வைபவம் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவிலின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் கோவில் பணியாளர்களும், பக்தர்களும் இணைந்து செய்து உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்