என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குட்கா பதுக்கியவர் கைது"

    • தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • வீட்டில் பதுக்கிய 138 கிலோ புகையிலை, குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட என்.ஜி.ஓ காலனியில் உள்ள வீட்டில் தமிழக அரசின் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின்படி திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அங்கு மகாலட்சுமி நகரில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தினர்.இதில் அந்த வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை குட்கா பொருட்கள் பதுக்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வீட்டில் பதுக்கிய 138 கிலோ புகையிலை, குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் இது தொடர்பாக மகாலட்சுமி நகரை சேர்ந்த கண்ணன் (49) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×