search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிரஷர் ஐலண்ட் பள்ளி"

    • ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் மாணவர்களிடையே பன்மொழித்திறனை வளர்க்க சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது.
    • மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த போனிக்ஸ் வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.

    தென்காசி:

    செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் மாணவர்களிடையே பன்மொழித்திறனை வளர்க்க சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. தமிழ், ஆங்கிலம் மொழிகள் மட்டுமில்லாமல் இந்தி, அரபு, பிரஞ்சு போன்ற மொழிகளும் இங்கு கற்பிக்கப்படுகின்றன. மேலும் பல்வேறு செயல்பாடுகள் மூலம் தகவல்தொடர்பு ஆங்கிலம், மேடை பேச்சுக்கான சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

    தக்சின் பாரத் இந்தி பிரசார் சபா நடத்தும் மத்திய அரசு தேர்வுக்காக மாணவர்கள் பள்ளியிலேயே தயார்படுத்த படுகின்றனர். மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த போனிக்ஸ் வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.பள்ளி பன்முக கற்றல் சூழலை மாணவ, மாணவிகளுக்கு வழங்கி வருவதற்கு பள்ளி நிர்வாகத்தினை மாணவர்களின் பெற்றோர்கள் பாராட்டினர். சிறப்பு வகுப்புக்கான ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் ஷேக் செய்யது அலி, பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • போட்டிகளில் டிரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவிகள் சிறப்பாக பங்கு கொண்டு பல பரிசுகளை வென்று தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.
    • வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிவதிப்ஜினேஷ் ராம் பரிசுகளை வழங்கினர்.

    தென்காசி:

    செங்கோட்டை டிரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவ, மாணவிகள் சுரண்டை எஸ்.ஆர் ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ் நடத்திய தென்காசி மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான கலை இலக்கிய போட்டிகளில் கலந்து கொண்டு சாதனை படைத்தனர்.

    கலை, இலக்கியம், நடனம், நாடகம், பேச்சுப்போட்டி (தமிழ், ஆங்கிலம்) போன்ற பல விதமான போட்டிகள் நடைபெற்றன. இப் போட்டிகளில் டிரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவிகள் சிறப்பாக பங்கு கொண்டு பல பரிசுகளை வென்று தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.

    டிரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி, தென்காசி மாவட்ட அளவில் சாம்பியன் பட்டம் வென்று 2-ம் இடம் பெற்று சாதனை புரிந்தது. வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு எஸ். ஆர் ஸ்கூல் ஆப் எக்செலன்ஸ் பள்ளி செயலாளர் சிவதிப்ஜினேஷ் ராம் பரிசுகளை வழங்கினர். வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கும் பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் பள்ளி தாளாளர் டாக்டர் ஷேக் செய்யதுஅலி மற்றும் பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் வாழ்த்துக்களை கூறி பாராட்டினர்.

    ×