என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பிரனாய்"
- பேட்மிண்டன் Round of 16 சுற்றில் லஷ்யா சென் மற்றும் பிரனாய் நேருக்கு நேர் மோதுகின்றனர்.
- இந்த ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர் வெண்கலம் வென்றார். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர்,சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.
இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக்ஸ் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவின் Round of 16 சுற்றில் இந்திய வீரர்கள் லஷ்யா சென் மற்றும் பிரனாய் நேருக்கு நேர் மோதுகின்றனர். இப்போட்டி இன்று மாலை 5.40 மணிக்கு நடைபெற உள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் பேட்மிண்டனில் இந்திய வீரர்கள் நேருக்கு நேர் மோதுவதால் வெற்றி பெறும் ஒருவர் மட்டுமே காலிறுதிக்கு முன்னேற முடியும். இதனால் இந்த ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
- மற்றொரு இந்திய வீரர் சமீர் வர்மா 12-21, 13-21 என்ற நேர்செட்டில் சீன தைபேயின் லின் சுன்யிடம் அடங்கினார்.
- போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.
சிட்னி:
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 19-21, 13-21 என்ற நேர்செட்டில் 6-ம் நிலை வீரரான கோடை நரோகாவிடம் (ஜப்பான்) தோற்று நடையை கட்டினார். மற்றொரு இந்திய வீரர் சமீர் வர்மா 12-21, 13-21 என்ற நேர்செட்டில் சீன தைபேயின் லின் சுன்யிடம் அடங்கினார்.
பெண்கள் ஒற்றையர் கால்இறுதியில் இந்திய வீராங்கனை ஆகார்ஷி காஷ்யப் 17-21, 12-21 என்ற நேர்செட்டில் சீன தைபேயின் யு போ பாயிடம் தோல்வி கண்டார். கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சுமீத் ரெட்டி-சிக்கி ரெட்டி இணை 12-21, 14-21 என்ற நேர்செட்டில் சீனாவின் ஜியான் ஜென் பாங்-வெய் யாஜின் ஜோடியிடம் பணிந்தது. அத்துடன் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.
- சிந்து முதல் சுற்றில் லினே ஹோஜ்மார்க் கிஜார்ஸ்பெல்டை (டென்மார்க்) சந்திக்கிறார்.
- லக்ஷயா சென் உலகின் நம்பர் ஒன் வீரரான விக்டர் ஆக்சல்செனுடன் (டென்மார்க்) மல்லுக்கட்டுகிறார்.
சிங்கப்பூர்:
மொத்தம் ரூ.7 கோடி பரிசுத்தொகைக்கான சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடங்கி வருகிற 2-ந்தேதி வரை நடக்கிறது. ஒலிம்பிக் போட்டிக்கு தன்னை தயார்படுத்தி வரும் வீராங்கனை பி.வி.சிந்து, வீரர் எச்.எஸ்.பிரனாய் மற்றும் லக்ஷயா சென், ஸ்ரீகாந்த், பிரியன்ஷூ ரஜாவத், இரட்டையர் நம்பர் ஒன் ஜோடியான சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி- சிராக் ஷெட்டி உள்ளிட்ட இந்தியர்கள் இந்த போட்டியில் பங்கேற்கிறார்கள்.
கடந்த வாரம் மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டனில் இறுதி சுற்றில் தோல்வி அடைந்த சிந்து அதற்கு பரிகாரம் தேடும் வகையில் ஆடுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. சிந்து முதல் சுற்றில் லினே ஹோஜ்மார்க் கிஜார்ஸ்பெல்டை (டென்மார்க்) சந்திக்கிறார். இதே போல் இந்திய இளம் புயல் லக்ஷயா சென் உலகின் நம்பர் ஒன் வீரரான விக்டர் ஆக்சல்செனுடன் (டென்மார்க்) மல்லுக்கட்டுகிறார்.
- உலக பேட்மிண்டனில் பிரனாய் பதக்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும்.
- ஒட்டுமொத்தத்தில் இந்தியா பெற்ற 14-வது பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹோபன்ஹேகன்:
28-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் டென்மார்க் தலைநகர் ஹோபன்ஹேகன் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் எச்.எஸ். பிரனாய், 3-ம் நிலை வீரரான குன்லாவுத் விதித்சரணை (தாய்லாந்து) எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல்செட்டை தன்வசப்படுத்தி பிரமாதமான தொடக்கம் கண்ட பிரனாய் அடுத்த 2 செட்களில் எதிராளிக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினார்.
1 மணி 16 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் பிரனாய் 21-18, 13-21, 14-21 என்ற செட் கணக்கில் குன்லாவுத் விதித்சரணிடம் வீழ்ந்த பிரனாய் வெண்கலப்பதக்கத்துடன் திருப்தி கண்டார். அவர் முந்தைய நாளில் நடந்த கால் இறுதியில் நடப்பு ஒலிம்பிக், உலக சாம்பியனான விக்டர் ஆக்சல்சென்னுக்கு(டென்மார்க்) அதிர்ச்சி அளித்து இருந்தார். உலக பேட்மிண்டனில் பிரனாய் பதக்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும். இதன் மூலம் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பதக்கம் வென்ற 5-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். ஒட்டுமொத்தத்தில் இந்தியா பெற்ற 14-வது பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரின் (ஸ்பெயின்) 23-21, 21-13 என்ற நேர்செட்டில் நடப்பு சாம்பியன் அகானே யமாகுச்சியை (ஜப்பான்) வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரைஇறுதியில் 'நம்பர் ஒன்' வீரர் அன் சே யங் (தென்கொரியா) 21-19, 21-15 என்ற நேர்செட்டில் 3-ம் நிலை வீரரான சென் யு பெய்யை (சீனா) விரட்டியடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.
- முன்னாள் உலக சாம்பியனும் தற்போதைய உலகின் 7ம் நிலை வீரருமான சிங்கப்பூரின் லோ கீன் யூவை இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் எதிர்கொண்டார்.
- பரபரப்பான இந்த ஆட்டத்தில், இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் சிங்கப்பூரின் லோ கீன் யூவை 22-20, 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
டோக்கியோ:
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஒசாகாவில் நடந்து வருகிறது. உலக தரவரிசையில் 18-வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற முக்கியமான ஆட்டத்தில், முன்னாள் உலக சாம்பியனும் தற்போதைய உலகின் 7ம் நிலை வீரருமான சிங்கப்பூரின் லோ கீன் யூவை இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில், இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் சிங்கப்பூரின் லோ கீன் யூவை 22-20, 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
இதன்மூலம் காலிறுதிக்கு தகுதி பெற்றார். காலிறுதி சுற்றில், உலக பேட்மிண்டன் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சவ்தியென் சென்னை பிரனாய் எதிர்கொள்கிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்