search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 மோட்டார் சைக்கிள்கள்"

    • சதீஷ் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அஜித்குமார் மோட்டார்சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதி விபத்தை ஏற்படுத்தியது.
    • விபத்தில் பலத்த காயம் அடைந்த அஜித்குமார் பெருந்துறை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

    பவானி, டிச. 2-

    ஆப்பக்கூடல் காமராஜர் காலனி பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (22). இவர் இரவு தனது மோட்டார் சைக்கிளில் பவானி-ஆப்பக்கூடல் மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது திப்பிச்செட்டிப்பாளையம் பகுதியில் சென்ற போது எடப்பாடியை சேர்ந்த சதீஷ் தனது மோட்டார் சைக்கிளில் சின்னமணி (60), ராஜா (37), பூபதி (27) ஆகிய 3 பேரை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த போது அஜித் குமார் மோட்டார்சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதி விபத்தை ஏற்படுத்தியது.

    இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த அஜித்குமார் பெருந்துறை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

    மேலும், சதீஷ் பவானி தனியார் அரசு மருத்துவ மனையிலும், சின்னமணி, ராஜா, பூபதி ஆகிய 3 பேர் பவானி அரசு மருத்துவ மனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    • மர்ம நபர் ஒருவர் இருவரின் மோட்டார் சைக்கிள் மீதும் திடீரென பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தார்.
    • இதில் 2 மோட்டார்சைக்கிளும் முழுவதுமாக எரிந்து சேதமானது.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் மணிக்கூண்டு அருகே லலிதா ஓட்டல் சந்து பகுதி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியை சேர்ந்தவர்கள் தங்களது மோட்டார் சைக்கிளை வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைத்திருந்தனர்.

    நேற்று இரவும் வழக்கம் போல் குடியிருப்பு வாசிகள் தங்களது மோட்டார் சைக்கிளை வீட்டு முன்பு நிறுத்தி வைத்திருந்தனர்.

    இந்நிலையில் அந்த குடியிருப்பு பகுதியை சேர்ந்த கதிரவன் மற்றும் முனீர் அகமது ஆகியோருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள்அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

    இரவு 11.30 மணி அளவில் அந்த பகுதிக்கு வந்த மர்ம நபர் ஒருவர் இருவரின் மோட்டார் சைக்கிள் மீதும் திடீரென பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தார். இதில் 2 மோட்டார்சைக்கிளும் முழுவதுமாக எரிந்து சேதமானது.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த குடியிருப்பு வாசிகள் இது குறித்து சத்தியமங்கலம் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்த போது அதில் மர்ம நபர் ஒருவர் 2 மோட்டார் சைக்கிளை பெட்ரோல் ஊற்றி எரிப்பது பதிவாயிருந்தது.

    இந்த செயலில் ஈடுபட்டவர் பழைய குற்றவாளியாக இருக்கலாம் என போலீசார் சந்திக்கின்றனர். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பவானி ஈரோடு மெயின் ரோடு, சி.எஸ்.ஐ. பள்ளி அருகில் சென்று கொண்டிருந்தபோது அதே ரோட்டில் எதிரே மோட்டர் சைக்கிளில் வந்த கோவை, குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த அப்துல் ஹமீது என்பவர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
    • விபத்து குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பவானி:

    பவானி அருகில் உள்ள லட்சுமி நகர் ஐ.ஆர்.டி.டி. மெயின் ரோடு பகுதியில் பச்சியப்பன் (67) பணி ஓய்வு பெற்ற போஸ்ட் மாஸ்டர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.

    இவர் தனது மோட்டார் சைக்கிளில் பவானியில் உள்ள வங்கிக்கு சென்று விட்டு நடராஜபுரம் பகுதியில் உள்ள நண்பர் வீட்டுக்கு புறப்பட்டு சென்றுள்ளதாக தெரிகிறது.

    பவானி ஈரோடு மெயின் ரோடு, சி.எஸ்.ஐ. பள்ளி அருகில் சென்று கொண்டிருந்தபோது அதே ரோட்டில் எதிரே மோட்டர் சைக்கிளில் வந்த கோவை, சுகுணாபுரம், குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த அப்துல் ஹமீது (25) என்பவர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

    இதில் பச்சியப்பன் தலையின் பின் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பவானி போலீசார் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

    அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

    மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த அப்துல் ஹமீது பவானி அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை பெற்று ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இறந்த பச்சியப்பன் உடல் பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. விபத்து குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×