search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலைகள் மழைநீரால் அரித்து செல்லப்பட்டது. Roads were washed away by rainwater"

    • சுமார் 25 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டு இருந்த பயிர்களும் நாசமானது.
    • இதனால் அந்த கிராம மக்கள் வேதனை அடைந்து உள்ளனர்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்காட்டில் பல இடங்களில் மழை நீர் காட்டாற்று வெள்ளம் போல் ஓடுகிறது.

    தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஏற்காட்டில் உள்ள மலை கிராமங்களான செந்திட்டு, அரங்கம், மாரமங்கலம், கேழையூர், பெலாக்காடு ஆகிய கிராமங்களில் சுமார் 25 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டு இருந்த சாமை,ராகி, நெல், தினை, போன்ற பயிர்கள் மழைநீரில் மூழ்கி அனைத்து பயிர்களும் நாசமானது. இதனால் அந்த கிராம மக்கள் வேதனை அடைந்து உள்ளனர். மேலும் தொடர் மழையால் மழை நீர் சாலையில் வெள்ளம் போல் ஓடியதால் பல கிராமங்களில் சாலைகள் மழைநீரால் அரித்து செல்லப்பட்டது. இதனால் அந்த கிராம மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அதனை தொடர்ந்து மழை வெள்ளம் பாதித்த இடங்களையும் பயிர்களை–யும் ஏற்காடு தாசில்தார் வெங்கடேசன், மாவட்ட கவுன்சிலர் புஷ்பராணி மற்றும் தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜா ஆகியோர் பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×