search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்னாள் அமைச்சர் பேட்டி"

    • நிரந்தரபொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வருவார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டியில் கூறியுள்ளார்.
    • 5 மாவட்ட மக்களுக்கு தீர்வு காணும் வகையில் முதலமைச்சருடைய பயணம் வெற்றி அடைய வேண்டும் என்றும் பேசினார்.

    மதுரை

    மதுரையில் இன்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியதாவது:-

    அ.தி.மு.க.வின் வெற்றி சரித்திரத்தில் மகுடமாக மற்றும் ஒரு வெற்றியை நீதி அரசர்கள் வழங்கி இருக்கிறார்கள்.

    அ.தி.மு.க.வை பொருத்த மட்டில் மக்கள் பணியே மகேசன் பணி என்று எம்.ஜி.ஆர். சொன்னது போல மக்களுக்காகவே இந்த இயக்கம் அர்ப்ப ணிக்கப்பட்டது என்று அம்மா சொல்வார்கள். அந்த வகையில் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய அனுபவத்தாலும், அம்மாவி டம் கற்ற பாடத்தினாலும் அ.தி.மு.க.வை வளர்ப்பதில் முன்னோடியாக திகழ்கிறார்.இந்த வெற்றிக்காக எடுத்த முயற்சிக்காக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

    தற்போது வந்திருக்கக்கூடிய தீர்ப்பு வரவேற்கத்தக்கது. முதலமைச்சர் 5 மாவட்ட மக்களுடைய நீராதார பிரச்சினையாக இருக்கும் முல்லை பெரியாறு பிரச்சினைக்காக கேரளா செல்வதாக செய்தித்தாள்களில் படித்தேன்.

    முதலமைச்சரின் பயணம் விளம்பரமாக இல்லாமல் ஆக்கபூர்வமாக இருக்க வேண்டும் என்று மதுரை மக்களின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் .5 மாவட்ட மக்களுக்கு தீர்வு காணும் வகையில் முதலமைச்சருடைய பயணம் வெற்றி அடைய வேண்டும்.

    அம்மா வழியில் ஆட்சி நடந்த போது உயர்த்தப்பட்ட முல்லை பெரியாரின் நீர்மட்டம் தற்போது தி.மு.க. ஆட்சியில் உயர்த்தப்பட முடியாத அவல நிலை உள்ளது. அ.தி.மு.க. இடைக்கால பொது செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி 5 ஆண்டு காலம் சிறப்பான ஆட்சியை தமிழகத்துக்கு தந்தார். ஏனென்றால் மறைந்த முதலமைச்சர் அம்மாவின் மாணவர் அவர். அம்மாவிடம் பயிற்சி பெற்றவர். தொண்டர்களின் ஒட்டுமொத்த ஆதரவை பெற்றவர்.

    எனவே நிரந்தர பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி விரைவில் வருவார். மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும். அ.தி.மு.க.கட்சி பிரச்சினையில் தி.மு.க.வும் மூக்கை நுழைக்கிறது.

    அதன் அரசியல் நாளிதழில் எடப்பாடி பழனிசாமி பற்றி அவர்கள் விமர்சிக்கிறார்கள். எம்.ஜி.ஆரை விமர்சித்தது தான் அந்த நாளிதழ். எங்களுக்கு அது பெரிது அல்ல. எடப்பாடி பழனிசாமிக்கு பெருகி உள்ள ஆதரவு தமிழக மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×